Friday, December 13, 2024

திருமாவைச் சீண்டிய விஜய் ஆதவ் அர்ஜுனாவை வெளியேற்றிய திருமா

 தமிழக அரசியல் தலைவர்களால்  பெரிதும் மதிக்கப்படும் அண்ணல் அம்பேத்காரின்  புத்தக வெளியீடு  தமிழகத்தில் நடைபெறும் என அறிவிக்கபட்ட தினத்தில் ஆரம்பமான தமிழக அரசியல் பொறி புத்தக வெளியீட்டிலன்று தீப்பிளம்பாக வெடித்துச் சிதறியது.

அம்பேத்காரின்  பிறந்தநாளன்று நடைபெற்ற  புத்தக வெளியீடு விஜயின் அரசியல் கட்சி மாநாடாக நடந்து முடிந்துள்ளது. " எல்லோருக்குமான தலைவர் என்ற புத்தக வெளியீட்டு விழாவை தனது அரசியல்  மேடையாக மாற்றிவிட்டார்  விஜய். திராவிட முன்னேற்றக் கழகத்தை தக்கிப் பேசும் அரங்கமாக அம்பேத்காரின் புத்தக வெளியீட்டு விழா  மாறியது. திருமாவளவனிக் கட்சியின்  துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா கைதட்டி மகிழ்ச்சியுடன்  விஜய்யை  உற்சாகப்படுத்தினார்.

ஆட்சியில் பங்கு  வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கொளுத்திப் போட்ட வெடியால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், திருமாவளவனுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.  ஸ்டாலினை திருமாவளவன்   சந்தித்ததால் சுமுக நிலை ஏற்பட்டது.ஆனாலும், ஆதவ் அர்ஜுனா அடங்கவில்லை.விஜயை  உசுப்பேற்றி விட்டார்.

உசுப்பேத்துறவன் கிட்ட உமென்றும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்மெண்டும்  இருக்கணும் என பாடம் எடுத்த விஜய் சன்னதம் ஆடிவிட்டார். விஜயை பேசியது சரியா தவறா என்ற விவாதம்  இன்றுவரை தொடர்கிறது.


 விகடனும், ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனமும்  இணைந்து வெளியிட்ட அம்பெத்கரின் நூலை ஸ்டாலின் வெளியிட, திருமாவளவன்  பெற்றுக்கொள்வார் எனத் திட்டமிடப்பட்டது.ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் விஜயையும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என திட்டமிடப்பட்டது.  வெளியில் பகிரங்கப்படுத்தப்படாமல்  நடைபெற்ற இந்த  பேச்சு வார்த்தைகளை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பத்திரிகை  ஒன்று  பகிரங்கப்படுத்தியது. ஒரே மேடையில் திருமா விஜய் எனத் தலைப்பிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறும் திருமாவலவன்  விஜயையுடன்  கூட்டணி சேர்வார் எனச் சாரப்பட செய்தியை  வெளியிட்டது. அந்தச் செய்தி பரபரப்பானதால் திருமாவளவன் தன்னிலை விளக்கம் அளிக்க  வேண்டிய நிலை ஏற்பட்டது.

  அனைவருக்குமான அம்பேத்கர் என்ற நூல்  சென்னயைில் வெளியிடப்பட்டது. தமிழக  வெற்றிக் க‌ழக‌ தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டத்தில் விஜய்யும் படு அனல் பறக்க பேசினார்.

 அம்பேத்கரையும் அவரது கொள்கைகளையும் மதித்துப் போற்றும் திருமாவாளவன்  புத்தக வெளியீட்டு விழாவில்  கலந்துகொள்ளப் போவதில்லை என முடிவெடுத்தார். இது இன்னொரு  பட்டிமன்றத் தலைப்புக்கு வித்தானது.

  அனைவருக்குமான அம்பேத்கர் என்ற நூல்  சென்னயைில் வெளியிடப்பட்டது. தமிழக  வெற்றிக் க‌ழக‌ தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டத்தில் விஜய்  அனல் பறக்க பேசினார். 

ம‌க்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத, கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி,  இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளத்துடன் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை..  நீங்க உங்களோட சுயநலத்துக்காக போட்டு வரும் உங்களது கூட்டணிக் கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளன் அவர்கள் அவங்களால இன்னிக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எத்தனை பிரஷர் இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தாலும் நான் இப்ப சொல்றேன்.. அவருடைய மனசு முழுக்க முழுக்க இங்க நம்மளோடதான் இருக்கும் என்று பேசினார் விஜய்.

அதுமட்டுமலாமல் மன்னராட்சி என திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் விஜய்க்கு பதிலடி கொடுக்கிறார்கள்.திருமாவளவனின்  கட்சித் தலைவர்களும் விஜய்க்கு எதிராக  முழக்கமிட்டனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர்ந்ததும் அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பாட்டது. அப்போது சலசலப்பு எழுந்தது.திருமா அதனை சமாளித்துவிட்டார். அந்தப் புகைச்சல் இப்போது பற்றி எரிந்ததால் ஆதவ் அர்ச்ஜுவை திருமா ஒதுக்கி வைத்துள்ளார்.

ஸ்டாலினை முதல்வராக்கியதில் ஆதவ் அர்ச்ஜுனாவின் பங்கு மிக அதிகம். ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவராக  இருந்த போது அவரை முன்னிருத்தி பல திட்டங்களை ஆதவ் தீட்டினார்.பணம் வாங்கிக்கொண்டு ஸ்டாலினை  முதல்வராக்கிய ஆதவ் அர்ச்ஜுனா அவரை வீழ்த்துவதற்கு விஜயைப் பயன்படுத்தத் துடிக்கிறார்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளரான ஆதவ் அர்ஜுனா தற்போது ஆறு மாதங்களுக்கு அந்த கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருமாவளவன்  அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகனான ஆதவ் அர்ஜுனா அரசியல் துறையில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து தேர்தல் வியூக நிறுவனங்களை நடத்தி வந்தார். வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்திற்கு முன்னதாகவே ஒன் மைண்ட் இந்தியா நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

 " 2014ஆம் ஆண்டிலிருந்து திமுகவுக்காக பணியாற்றி வந்திருக்கிறார். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட போது அதில் ஆதவ் அர்ஜுனாவின் பங்கு முக்கியமானது என கூறப்படுகிறது. 2016 தேர்தல் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து கிராம சபை கூட்டம் உள்ளிட்ட திமுகவின் பல்வேறு நிகழ்வுகளில் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒன் மைண்ட் இந்தியா நிறுவனம், வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனமாக மாறியது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பணியாற்றிய அவர், பிரசாந்த் கிஷோரை வியூக பணிகளுக்காக அழைத்து வந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரப் போவதாக பேச்சு அடிபட்டது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்த உடனேயே அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. மேலும் கட்சியின் மாநாடுகள், நிகழ்ச்சிகள், சமூக வலைதள பக்கங்களின் கட்டுப்பாடு என முழுவதும் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. அது மட்டுமல்லாமல் மது ஒழிப்பு மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார் அர்ஜுனா. 

தமிழகத்தில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும், ஒரு குடும்பம் திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என நேரடியாக திமுகவை விமர்சித்து பேச விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பினார். 

  திமுக கூட்டணியில் பத்தோடு பதினொன்றாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திடீரென இவ்வளவு ஊடக வெளிச்சம் கிடைக்க ஆதவ் அர்ஜுனா முக்கிய காரணம் என்பதை திருமாவளவன் உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது. ஆனால் சக கட்சி நிர்வாகிகளை எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி ஆதவ் அர்ஜுனாவை இடநீக்கம் செய்ததாக கூறுகின்றனர் விசிக நிர்வாகிகள்.

அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைய இருப்பதாகவும் தகவல் உலாவுகிறது. ஏற்கனவே விஜய் மீது ஊடக வெளிச்சம் அதிகமாக இருக்கும் நிலையில் ஆதவ் அர்ஜுனா சேர்வது கூடுதல் பலமாக இருக்கும் என அந்த கட்சி தலைமை நம்புகிறது. எனவே விரைவில் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் எனவும், இதற்காக திரை மறைவு பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் இல்லாமல் இருந்தாலும், தேர்தல் அரசியல், பகுப்பாய்வில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டவர் ஆதவ். எனவே எடுத்த எடுப்பிலேயே விஜய் கட்சியில் சேர மாட்டார். இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து அதற்குப் பிறகு தனது முடிவை அறிவிப்பார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

 

 ரமணி

15/12/24

No comments: