அவுஸ்திரேலிய ஓபனில் ஜாம்பவான் ஜோகோவிச்சுக்கு எதிரான போட்டியில் முதல் செட்டை கைப்பற்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார் வீரருக்கே இந்திய 19 வயது சிறுவனான நிஷேஷ் பசவரெட்டி.
டென்னிஸ்
உலகின் மிகப்பெரிய கிராண்ட்ஸ்லாமாக கருதப்படுவது
அவுஸ்திரேலிய ஓபன். இந்த தொடர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
அவுஸ்திரேலியா
ஓபனில் அமெரிக்கா சார்பில் களமிறங்கியுள்ளார் நிஷேஷ் பசவரெட்டி. இவர் ஆந்திராவைப் பூர்வீகமாக
கொண்டவர். 2005ம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயது முதலே டென்னிஸ் போட்டியில் மிகுந்த
ஆர்வத்துடன் இருந்தார். முறையாக டென்னிஸ் கற்றுத்தேர்ந்த இவர் தனது 19 வயதில், அவுதிரேலிய
ஓபன் தொடரில் முதன்முறையாக களமிறங்கினார்.
அனுபவமிக்க ஜோகோவிச்சுடன் தன்னுடைய முதல் போட்டியில் அவர் மோதினார். டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ஜோகோவிச் நிஷேஷை எளிதில் வீழ்த்தி விடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நிஷேஷ் அதிர்ச்சி அளித்தார். தொடக்கம் முதலே ஜோகோவிச்சிற்கு எதிராக தனது ஆதிக்கத்தைச் செலுத்திய நிஷேஷ், 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியதும் களத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். முதல் செட்டை இழந்த ஜோகோவிச்சிற்கு அடுத்தடுத்த செட்களிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷேஷ் கடும் சவால் அளித்தார். ஆனால், தனது அனுபவத்தால் ஜோகோவிச் நிஷேஷை வீழ்த்தினார்.
இரண்டாவது
செட்டை 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்ற, 3வது சுற்றிலும் நிஷேஷ் கடும் நெருக்கடி
அளித்தார். ஆனாலும், ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற, அடுத்து நடந்த சுற்றை
6-2 என்ற கணக்கில் வென்று ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
2 மணி நேரம் 59 நிமிடங்கள் இந்த போட்டி நடந்தது.
ஜோகோவிச்சுடன் 19 வயது வீரர் சுமார் 3 மணி நேரம் மல்லுகட்டியது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர் நிஷேஷின் ஆட்டத்தைப் பார்த்த ஜோகோவிச் ஆச்சரியப்பட்டார். விளையாட்டில் கிடைத்த ஒவ்வொரு
கைதட்டலுக்கும் நிஷேஷ் தகுதியானவர் என்று ஜோகோவிச் பாராட்டினார். அவரது ஷாட்டும்,
அவரது போட்டியிடும் குணமும் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் ஜோகோவிச் கூறினார். இந்த போட்டி முடிந்த பிறகு நிஷேஷின் விளையாட்டைப்
பாராட்டி மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினர்.
இவரது
பெற்றோர்கள் நெல்லூரைச் சேர்ந்தவர்கள். 1999ம் ஆண்டு இவர்கள் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிற்கு
குடிபெயர்ந்தனர். கடந்தாண்டு நிஷேஷ் இரண்டு
சேலஞ்சர் பட்டங்களையும். நான்கு தொடரின் இறுதிப்போட்டிக்கும்
முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில்
இவர் படித்தார்.
ரமணி
19/1/25
No comments:
Post a Comment