அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றான கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதி முழுவதும் காட்டுத்தீயால் அழிக்கப்பட்டுள்ளது. 11 பேர் மரணமானார்கள். 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் லொஸ் ஏஞ்சல்ஸை விட்டு வெளியேறியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களை தீ நாசமாக்கியுள்ளது.
58 சதுர
மைல்களுக்கு மேல் சாம்பல் காடாகக் காட்சியளிக்கிறது. தீப்பிழம்புகளை
வீசிய காற்று பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆபத்துகள் நீடிக்கின்றன.
லொஸ்
ஏஞ்சல்ஸ் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. போர் நடக்கும் நாடுகளில் எப்படி எல்லாம் தரைமட்டமாக காட்சி அளிக்குமோ அப்படிதான் கலிபோர்னியாவில் தற்போது பெரும்பாலான பகுதிகள் காட்சியளிக்கின்றன.
உலகமே
புதிய ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் ஜனவரி
7 ஆம்
திகதி உருவான
காட்டுத்தீ லொஸ் ஏஞ்சல்ஸ்
பெருநகரப் பகுதியையும் சுற்றியுள்ள பகுதிகளையும் பரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. . சில இடங்களில் மணிக்கு 80-100 மைல்கள் (130-160 கிமீ/மணி) வேகத்தில்
இந்த
முறை காட்டுத் தீயை அணைப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. இது லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை அடைவதற்குள் எப்படியாவது அணைக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியையும் இந்த தீ அரக்கன்
ஆக்கிரமித்துள்ளான்.
1000 தீ
அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும் கோரத்
தீயை அணைக்க போராடுகின்றனர்.
தீயை
அணைப்பதற்காக இதுவரை
சுமார் 1825 கோடிக்கும் அதிகமாக செலவு
ஆகி உள்ளது
பாரிஸ்
ஹில்டன், பில்லி கிரிஸ்டல் , அந்தோனி ஹாப்கின்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் அரண்மனை போன்ற வீடுகளை தீ பொசுக்கி
உள்ளது.
காட்டுத்தீ
காரணமாக 29,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஏற்கனவே கருகிவிட்டன, மேலும் 2,93,000 குடியிருப்பாளர்கள் வெளியேறி உள்ளனர். வீடுகள், பள்ளிகள் , வீடுகள்,
வணிக நிறுவனங்கள் என்பன
கருகி விட்டன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் கருகி உள்ளன. அங்கே
சுமார் 10 இலட்சம் கோடி ரூபாய்க்கு நாசம் ஏற்பட்டு உள்ளது.
முக்கியமாக பாலிசேட்ஸ் தீ அதாவது பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை மிக மோசமாக அமைந்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள கடலோர நிலப்பரப்பு ஆகும் இது. இங்கே இப்போது கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அங்கேதான் அதிக அளவில் ஹாலிவுட் பிரபலங்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
உலக
அளவில் வெப்பம் அதிகரித்து வருவதால் இனி பேரிடர்களுக்கு மத்தியில்தான் வாழ்க்கை இருக்க போவதாக ஐநா எச்சரித்து இருந்தது. ஐநாவின் எச்சரிக்கை நாளுக்கு நாள் பலிக்க தொடங்கி உள்ளது.
உலகம்
முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகியவை உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்!
. உலகின்
வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட
Intergovernmental Panel on Climate Change எனப்படும்
காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.
தற்போது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயிலேயே இதுதான் மிக மோசமானது என்று அமெரிக்கா வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லொஸ்
ஏஞ்சல்ஸ் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மிக மோசமான தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிக்கொண்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்த காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் தற்போது தற்காலிக மையங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.
லொஸ்
ஏஞ்சல்ஸ் கவுண்டியில் பொங்கி எழும் தீ, நவீன அமெரிக்க வரலாற்றில் "மிகவும் அழிவுகரமானதாக" இருக்கலாம்.
வெறும்
மூன்றே நாட்களில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புகளை இந்த தீ பொசுக்கிவிட்டது.மேலும் இது
$150bn (£123bn) வரை பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தனியார் முன்னறிவிப்பாளரான
Accuweather தெரிவித்துள்ளது.
தெற்கு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், KABC இன் ஹெலிகாப்டர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மீது பறக்கும் போது ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக தரையிறங்க வேண்டியிருந்தது .
FAA விதிகள் விமான நிலையத்திலிருந்து ஐந்து மைல்களுக்குள், 400 அடி உயரத்திற்கு மேல் அல்லது ஆளில்லா விமானங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ட்ரோன்களை பறக்கவிடுவதை தடை செய்கிறது. ஆபரேட்டரின் உதவியற்ற பார்வைக்கு அப்பால் ட்ரோன்களை இயக்க முடியாது என்றும் அது கூறுகிறது.
No comments:
Post a Comment