ரி20
போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின்னர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் சஞ்சு சம்சன்
ரி20 அணியின் துவக்க வீரராக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் 14 சர்வதேச
ரி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் பங்களாதேஷுக்கு எதிராக ஒரு சதம்,
தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக இரண்டு சதம் என மூன்று சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.
இந்திய
ஒருநாள் அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட
வேளையில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கேரள அணி நிர்வாகத்துடன் சஞ்சு சம்சனுக்கு ஏற்பட்ட
மோதலே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. அண்மையில் சையத் முஷ்டாக் அலி தொடர் முடிவடைந்த
கையோடு விஜய் ஹசாரே கோப்பை காண பயிற்சி முகாமில் சஞ்சு சம்சன் கலந்து கொள்ள வேண்டும்
என்று கேரள கிரிக்கெட் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த சஞ்சு
சம்சன் அந்த தொடரில் இருந்து விலகினார். இதன் காரணமாக அவருக்கும் அம்மாநில கிரிக்கெட்
நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கேரளா
அணியில் இருந்து விலகி அவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக உள்ளூர் போட்டியில் விளையாட
இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கப்டனாக
இருப்பதால் அவர் உள்ளூர் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காகவும் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
சஞ்சு சம்சன் தமிழ்நாட்டின் அருகில் இருப்பதால் தமிழக அணியில் இணைந்து விளையாடவே வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கேரள வீரர் சந்தீப் வாரியர் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் வேளையில் சஞ்சு சம்சனும் இணைந்தால் அது தமிழ்நாடு அணிக்கு பலம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment