சேர்பிய
டென்னிஸ் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் 2025 ஆஸ்திரேலிய ஓபனில் அல்கராஸை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.
மூன்று
மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஜோகோவிச்
4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன்
மூலம் 50 கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு (ஒற்றையர்) தகுதி பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை
ஜோகோவிச் பெற்றுள்ளார்.
ரோஜர்
பெடரர் மட்டுமே 46 அரை இறுதிப் போட்டிகளில் விளையாடியவராவார். பெண்களில், கிறிஸ் எவர்ட்
மட்டுமே கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி ஆட்டங்களில் ஜோகோவிச்சை விட முன்னிலையில் உள்ளார்.முன்னாள்
அமெரிக்க நட்சத்திரம் தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் 52 முக்கிய அரையிறுதிகளில் விளையாடினார்.
கடந்த
ஆண்டு பரிஸ் ஒலிம்பிக்கில் செர்பியர் அல்கராஸை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.அந்த
ஆண்டின் தொடக்கத்தில், இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்கராஸ் விம்பிள்டனை
வென்றார்.
2023ல் ஏடிபி பைனல்ஸ் , சின்சினாட்டி ஆகிய போட்டிகளில் அல்கராஸுக்கு எதிராக ஜோகோவிச் இன்னும் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment