தமிழக ஆளுநர் ரவி வந்தார் சென்றார்
மூன்றாவது
ஆண்டாக தொடர்கிறது புறக்கணிப்பு
தமிழக
சட்ட சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்ட போதே பூகம்பம் வெடிக்கும்
என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
தமிழக
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற
முதல் இரண்டு கூட்டத் தொடர்களிலும் பெரும்
பிரளயம் வெடித்தது. அதற்குச் சற்றும் குறையாத சம்பவம் இந்த ஆண்டும் நடைபெற்றது.
முதல்
கூட்டத்தொடரில் மாநில சட்ட சபையின் சாதனைகள் பட்டியலிடப்படும் தன் முழு அரிக்கையும் முதலிலேயே ஆளுநரிட கொடுக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். அந்த அரிக்கையை மாற்றாமல் வாசிப்பதுதான் ஆளுநரின் கடமை. ஆனால், தமிழக ஆளுநர் அர். ரவி, கடந்த முறை தமிழக அரசின் சதனைகளை வசிக்கவில்லை. மஹிய அரசைன் மீதான குற்றச் சாட்டுகளித் த்விர்த்து தனது கருத்துகளைப் புகுத்தினார்.உடனடியாகச் அன்று ஸ்டாஇன் செயற்பட்டு ஆளுநரின் உரையை சபைக்குறிப்பில் இருந்து நீக்கத் தீர்மானம் கொண்டு வந்தார். அதனால், அன்று ஆளுநர் தெறித்து ஓடினார்.
2025 ஆம் ஆண்டுக்கான
முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில்
கூட்டம் தொடங்கியதுமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அமளியில்
இறங்கினர். இந்த நிலையில் ஆளுநர் ஆர். என். ரவியும், ஆளுநர் உரையை வாசிக்காமலேயே வெளியேறிச் சென்றார்.
தமிழ்நாட்டில்
ஒவ்வொரு வருடமும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் உரையுடன் தான் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தலைமை செயலகத்தில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது அதன் பிறகு அவருக்குப் பொன்னாடை அளித்து வரவேற்ற சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை
வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார்.
அதன்
பின்னர் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டசபை மரபுப்படி, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர். என். வெளியேறினார்.தேசியகீதம் பாடாததால் வெளியேறியதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரை
வரவேற்கும் போது தேசியகீதம் இசைக்கப்படும் கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். கூட்டம் முடியும் போது
தேசிய கீதம் இசைக்கப்படும் இது தான் தமிழக சட்ட சபையின் மரபு இந்த
மரபுபற்றி ஆளுநருக்கு தெரியும்.
ஆனாலும் அதனை மீறும்படி ஆளுநர் கூறியதை தமிழக அரசி ஏற்றுக்கொள்ளவில்லை.
அண்ணா பல்கலைக்கழக
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர். பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் கோஷமிட்டதால் சபையில் பெரும் அமளியாக இருந்தது.
இதையடுத்து
அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன் பின்னர் அதிமுகவினர் வெளியேறினர். இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
தொடர்ச்சியாக
3வது ஆண்டாக ஆளுநர் உரை தொடர்பான சர்ச்சை நீடிப்பது சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர்
ஆர். என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து பூசல் நிலவி வருகிறது. அவ்வப்போது அடங்குவது போல தெரிந்தாலும் கூட, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது பெரிதாக வெடித்துச் சிதறுகிறது. குறிப்பாக
ஆளுநர் உரை தொடர்பாக கடந்த 3 வருடமாக சர்ச்சை நிலவி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு முதல்
முறையாக பெரிய சர்ச்சை வெடித்தது.
2023ம் ஆண்டு
ஜனவரி 9ம் தேதிக சட்டசபை
கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவதாக திட்டம். ஆளுநர் ஆர். என். ரவியும் சட்டசபைக்கு வந்தார். ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த அவர் அதில் இடம் பெற்றிருந்த சில வரிகளைத் தவிர்த்து விட்டு வாசித்தார். மேலும் புதிதாக சில வாசகங்களையும் அவர் சேர்த்துப் படித்தார்.
அதன்
பின்னர் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் ஆளுநர் அவராக சேர்த்து வாசித்த வாசகங்கள் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் வாசிக்கப்பட்டபோது ஆளுநர் ஆர். என். ரவி. அவையிலிருந்து வெளியேறிச் சென்றார்.
இதைத்
தொடர்ந்து 2024ம் ஆண்டு பிப்ரவரி
12ம் திகதி சட்டசபை ஆளுநர்
உரையுடன் தொடங்கியது. வழக்கம் போல கூட்டத் தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியபோது முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றார்.
மேலும் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள சில பகுதிகளை தன்னால் ஏற்க முடியாது என்று கூறி உரையை வாசிக்க மறுத்து அமர்ந்து விட்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையை வாசித்தார்.
அதன்
பின்னர் ஆளுநரின் செயல்பாடு குறித்து அப்பாவு சில கருத்துக்களைக் கூறினார். அவர் சொல்லி முடித்த அடுத்த நிமிடமே ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னர் ஆளுநர் உரை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பபடியே அவைக் குறிப்பில் பதிவேற வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த
ஆண்டும் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதால் அதிருப்தி அடைந்து ஆளுநர் வெளியேறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்
தாய் வாழ்த்து மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அதை அனைத்து தளங்களிலும் உரிய மரியாதையுடன் பாடியுள்ளேன். அதை அவமதிக்கும் எண்ணம் ஒரு போதும் இருந்ததில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார்.
தமிழ்த்தாய்
வாழ்த்துக்கு மரியாதை கொடுக்காத ஆளுநரை உடனடியாக மாற்ற வேண்டும் என தமிழகத்தின் பல
தலைவர்கள் கோரிக்கை
விடுக்கின்றனர். ஆளுநரின் முலம்
தமிழக அரசுகுக் குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று மோடி அரசு விரும்புகிறது. அதனை ஆளுநர் ரவி கனகச்சிதமாகச் செயற்படுத்துகிறார். ஆகையால் அவரை இப்போதைக்கு
அசைக்கமுடியாது.
ரமணி
12/1/25
No comments:
Post a Comment