அமெரிக்க
ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதினத்தில் இருந்து உலகநாடுகள்
பல அச்சமடைந்துளன. உலக
நாடுகளின் பொருளாதாரத்தின்மீது ட்ரம்ப்
முதல் தாக்குதலை நடத்தினார். ட்ரம்ப் வித்தித்த
வரியால் பொருளாதாரத்தில் வலுவாக இருக்கும் நாடுகள் முதல் பொருளாதாரத்தில்
நலிவடைந்த நாடுகள் வரை பாதிக்கப்பட்டன.
பெரிய நிறுவனங்களும் ட்ரம்பின் பொருளாதாரத்
தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா,
சீனா, கனடா, பிறேஸில், சுவிட்சர்லாந்து, இலங்கை, சிரியா, லாவோஸ், மியான்மர், ஈராக், சேர்பியா, அல்ஜீரியா உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட
நாடுகள் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பால்
பாதிக்கப்பட்டன.
ட்ரம்பின் அதிகரித்த வரி விதிப்பால்
ஏற்றுமதி சார்ந்த துறைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.
அமெரிக்க
ஜனாதிபதி ட்ரம்ப்பின் கட்டளைக்
கிணங்க இலங்கை மீது 20 சதவீத வரியை விதிக்கப்பட்டது. இது, 0 முதல் 25 சதவீதம் வரை மாறுபடும் தற்போதைய
வரிகளுக்கு மேலதிகமாகவே திணிக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான தொழில்களைப் பாதிக்கும் இந்த வரி உயர்வு,
பிரதானமாக அமெரிக்க சந்தைக்கான ஏற்றுமதியை நம்பியுள்ள ஆடைத்துறை , சுதந்திர வர்த்தக வலயங்கள், இரப்பர்,
தேயிலை பிற
சிறிய தொழில்களை ஆபத்துக்குள்ளாகின.
இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் 44 சதவீத
வரியை அறிவித்தார் ட்ரம்ப் . அதை
30 சதவீதமாகக் குறைத்து பின்னர் அதைத் தொடர்ந்து தற்போதைய 20 சதவீத விகிதத்தை அறிவித்துள்ளார்.
புதிய வரிகள் காரணமாக அமெரிக்காவிற்கான இலங்கையின் வருடாந்த ஏற்றுமதி 2023 இல் 2.97 பில்லியன் டொலர்களிலிருந்து 2026 இல் 1.82 பில்லியன் டொலர்களாகக் குறையும் என்று உலகளாவிய வர்த்தக தரவுத்தள மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.
அமெரிக்காவானது இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகும். இலங்கை ஆண்டுதோறும் அதன் ஆடை ஏற்றுமதியில் 40 சதவீதத்தையும் ($1.9 பில்லியன்) அதன் மொத்த ஏற்றுமதியில் 25 சதவீதத்தையும் ($3 பில்லியன்) அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்கின்றது. 350,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தியுள்ள மற்றும் வேறு வழிகளில் மேலும் 600,000 பேரை வாழவைக்கும் ஆடைத் தொழில், குறிப்பாக அமெரிக்காவில் வரிகளால் ஏற்படும் விற்பனை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டும் அபாயம் உள்ளது.
உலகப்பொருளாதரத்தைச் சிதைத்த ட்ரம்ப் கிறீண்ட்லாண்டுக்கும்,கனடாவுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.கனடா ஜனாதிபதி பதில்டி கொடுத்தார். கிறீண்ட்லாண்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டென்மார்க் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்தக் களேபரங்களுக்கிடையில் வெனிசுலாவுக்குள் புகுந்த டர்ம்பின் படைகள் ஜ்னாதிபதியையும், அவரது மனைவியையும் சிறைப்பிடித்தது.வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக மக்களை வெனிசுலா அனுப்பி வைப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அந்த நாட்டின் அதிகரித்த எண்ணெய் ,கனிமவளங்கள் ஆகியவையே ட்ரம்பின் குறியாகும்.
அமெரிக்க
ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்ற ஜனாதிபதியாக இருந்திருந்தால்
ரஷ்யா - உக்ரைன் போர் வந்திருக்காது. இஸ்ரேல் காஸா போர் வந்திருக்காது.
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான். மேலும்
தொடர்ந்து பல நாடுகளின் போரை
நிறுத்தி உள்ளேன். இதனால் அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு தான் தர வேண்டும்
என்று தன்னை அமைதியின் தூதராக தானே அறிவித்து கொண்டார்.
ட்ரம்பின் பேச்சு சமாதானம்
என இருந்தாலும்
அத்து மீறிய தாக்குதல்களையும் பரவலாக நடத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். ஒரு வருடம் முடிவதற்டையில் உலகை அச்சுறுத்தும் தாக்குதல்களை அவர் நடத்தியுள்ளர்.
கடந்த
ஆண்டு ஜூன் மாதம், ஈரான்-இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில், ஈரானின்
உள்ள மூன்று முக்கிய
அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா
தாக்குதல் நடத்தியது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக்
கருதப்படுகிறது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும்
இடையே இருந்த பகை இந்த சம்பவத்தால்
இன்னும் அதிகரித்து தற்போதும் இருநாடுகள் இடையே பதற்றமான சூழல் தொடர்கிறது.
பால்மைரா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு அமெரிக்க
வீரர்கள் கொல்லப்பட்டனர். மூன்று வீரர்கள்
காயமடைந்தனர். இதனால் கோபமான டொனால்ட் ட்ரம்ப் சிரியாவில் உள்ள 70 ஐஎஸ்ஐஎல் (ISIL) தளங்கள் மீது தாக்குதல் நடத்தினார்.
சோமாலியாவில்
அமெரிக்க படைகள், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய
அல்-ஷபாப் , ஐஎஸ்ஐஎஸ்-சோமாலியா போன்ற ஆயுதக் குழுக்களுக்கு எதிராக போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
நைஜீரியாவில்
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது. இதனை நைஜீரியா அரசு
தடுக்கவில்லை. கிறிஸ்தவ இனப்படுகொலை நைஜீரியாவில் நிகழ்த்தப்படுகிறது எனக்கூறி 2025 டிசம்பர் மாதம் 25ம் திகதி வடமேற்கு நைஜீரியாவின்
சோகோடோ மாகாணத்தில் உள்ள ஐஎஸ்ஐஎல் (ISIL) குழுக்களுக்கு
எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அங்கு கிறிஸ்தவ ,முஸ்லிம் மக்கள் சமமாகப் பிரிந்திருக்கும் ஒரு நாட்டில் "கிறிஸ்தவ
இனப்படுகொலையை" அனுமதிப்பதாக ட்ரம்ப்
குற்றம் சாட்டினார்.
காஸா
மீதான இஸ்ரேலின் போரை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவுக்கு எதிராக
ஏமனின் ஹவுதி களமிறங்கியது.
ஹவுதி அமைப்பு ஈரான்
ஆதரவில் செயல்பட்டு வருகின்றது. இந்த ஹவுதிகள் செங்கடல்
வழியாக செல்லும் இஸ்ரேல் ,அமெரிக்க ஆகிய நாடுகளின்
கப்பல்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் கோபமான டொனால்ட் ட்ரம்ப் போர் கப்பல்கள் உதவியுடன் ஹவுதிகளின் சனாவில் தாக்குதல் நடத்தியது. இது 2025 மார்ச் மாதம் நடந்தது.
கடந்த
மார்ச் மாதம் ஈராக்கின் அல்-அன்பார் மாகாணத்தை
அமெரிக்கா தாக்கியது. அங்கு ஐஎஸ்ஐஎல் (ISIL) உறுப்பினரைக் கொன்றதாக சென்ட்காம் (CENTCOM) தெரிவித்தது. ஐஎஸ்ஐஎல்லின் இரண்டாவது தளபதி அப்துல்லா மல்லி முஸ்லிஹ் அல்-ரிஃபாய் மற்றும்
மற்றொரு உறுப்பினரும் அமெரிக்க விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இந்த வரிசையில் 7 வது
நாடாக தான் டிரம்ப் வெனிசுலாவை
தாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின்
அதிரடி இதனுடன் நிற்கப்போவதில்லை. கியூபா, கிறீண்ட்லாந்து ஆகியவற்றின் மீதுன் ட்ரம்பின் பார்வை இருக்கிறது.
வர்மா
10/1/26




No comments:
Post a Comment