நடிகர் விஜயின் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு ‛சென்சார்' சான்று வழங்ககோரிய வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. விஜய் ரசிகர்களின் மகிழ்ச்சி இரண்டு நிமிடங்கள்தான் நீடித்தது.
ஜனநாயகன்
படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை
எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக உயர் நீதிமன்ற தலைமை
நீதிபதி உறுதியளித்துள்ளார்.
இயக்குநர்
எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் ஜனநாயகன்.
அரசியலில் அதிரடிகாட்டும் வியஜின் கடைசிப் படம் ஜனநாயகன். அதனால்
ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர். 2026 ஆம்
ஆண்டு பெங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகும் எனத்திட்டமிடப்பட்டது. படப்பிடிப்பு
நிறைவடைந்து தணிக்கைக்கு ஜனநாயகன் படம் அனுப்பப்பட்டது. ஜனநாயகன்
பட ட்ரைலரை ரசிகர்கள் தீபாவளிபோல் கொண்டாடினர்.திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அரசியல் சார்ந்த வசனங்கள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. திரையரங்குகளில் முன்பதிவு
விறுவிறுப்பாக நடந்தது. ஜனநாயகன்
வெளியாகும் 9 ஆம்
திகதியை ரசிகர்கள் எதிர்
பார்த்திருந்தனர். சென்சார்
கிடைக்கவில்லை என்ற தகவல் ரசிகர்களின்
தலையில் இடி விழுந்ததுபோல இறங்கியது.
ஜனநாயகன்
திரைப்படத்திற்கான தணிக்கைக் குழு மேல்முறையீட்டு மனு
மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் விசாரணை
நடந்தது.. அப்போது U/A சான்றிதழ்
வழங்குமாறு தனிநீதிபதியின் உத்தரவுக்கு தலைமை நீதிபதி தடை விதித்தார். இந்த
வழக்கும் ஜனவரி 21 ஆம் திகதிக்கு
ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.
இதையடுத்து
திரைப்படத்துக்கு சென்சார் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு
வந்தது. நீதிபதி பி.டீ.ஆஷா
விசாரித்தார். பட தயாரிப்பு நிர்வாணம்
சார்பில், ‛‛பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால் 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். நாங்களும்
திருத்தங்கள் செய்தோம். ஆனால் மத உணர்வுகளை புண்படுத்தும்
வகையில் காட்சிகள் உள்ளதாக அளித்த புகாரில் சென்சார் சான்று வழங்கப்படவில்லை.
படம் இன்னும் வெளியாகாத நிலையில் ரூ.500 கோடி முதலீடு செய்யபட்டுள்ளது. யாரோஅளித்த புகாரின்பேரில் இன்னும் சான்றிதழ் வழங்கமால் இருக்கிறார்கள். சென்சார் சான்று வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.
ஜனநாயகன் படத்தில் ஒரு காட்சியில், நம்ம
வீட்டு பிள்ளை படத்தில் எம்ஜிஆர் சாட்டையை எடுத்து சுழற்றும் காட்சி இடம் பெற்றுள்ளதாம். இதற்காக
நம்ம வீட்டு பிள்ளை படத்தை தயாரித்த விஜயா ஸ்டூடியோஸ் நிறுத்திற்கு செலுத்த வேண்டிய காப்புரிமை தொகையை செலுத்தாமல் இருப்பது தான் சென்சார் சான்றிதழ்
கிடைப்பதற்கு தாமதம் என சொல்லப்படுகிறது.
அதே
சமயம் படத்தில், ஓம் என்ற மத
அடையாளம் வருவதற்கும், ராவனேஸ்வரன் மகன் என்ற பாடல்
வரிகள் இடம் பெற்றுள்ளதற்கும் தணிக்கை
குழு ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் தான் தணிக்கை சான்று
கிடைக்காமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஜனநாயகன்
தணிக்கை விவகாரம் அரசியலாகி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் மெளனமாக வேடிக்கை பார்க்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்காளியான காங்கிரஸ் இறங்கி அடிக்கிறது. தணிக்கைச் சபை மத்திய அரசின்
கட்டுப்பாட்டில் உள்ளது. விஜயின் அரசியல் பயணத்தை முடக்க பாரதீய ஜனதா திட்டமிடுகிறது என
காங்கிரஸ்தலைவர்கள் குற்றம்
சாட்டி உள்ளனர்.ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை கிடைக்காததற்கும், திட்டமிட்டபடி படம் ரிலீசாக முடியாமல்
தடை ஏற்பட்டுள்ளதற்கும் மத்தியில் ஆளும் பாஜக தான் காரணம்
என சினிமா பிரபலங்கள் பலர் மறைமுகமாக கருத்து
தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மோடி
அரசு தான் காரணம். இதை
வைத்து விஜய்யை மிரட்ட பார்க்கிறார்கள் என தமிழக காங்கிரஸ்
எம்.பி., ஜோதிமணி கருத்து
தெரிவித்திருந்தார்.
தமிழக
காங்கிரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், தமிழக
தேர்தலுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து போட்டப்பட்டுள்ள
இந்த பதிவில், மோடி
அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள்.
உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ்தலைவர்கள் குரல் கொடுப்பதை திராவிட முன்னேற்றக் கழகம் ரசிக்கவில்லை. இந்தப் பிரச்சனையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கத்துக்கு தமிழக பாரதிய ஜனதாத் தலைவர்கள் தள்ளி உள்ளனர். நயினார் நாகேந்திரன், தமிழிசை போன்றவர்கள் திமுகவின் மேல் பழியைச் சுமத்தி உள்ளனர்.
ஜனநாயகன்
திரைப்பட வெளியீட்டில் திமுகவின் சதி இருப்பதாக விமர்சித்து
வருகிறார்கள். ஏற்கனவே பராசக்தி படத்தை ஜனநாயகனுக்கு போட்டியாக இறக்கியதாகவும் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வந்திருந்த நிலையில் தற்போது மேலும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். திமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை
இந்த நிலையில் இதுபற்றி அமைச்சர் கே என் நேருவிடம்
செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கூறுகையில், "ஜனநாயகன் பட விவகாரத்திற்கும், திமுகவுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை".. "தணிக்கைக் குழு என்பது மத்திய
அரசிடம் தான் இருக்கின்றது.
அப்படி
இருக்கின்ற போது திமுக எப்படி
ஜனநாயகன் படத்திற்கு தடையாக இருக்க முடியும். ஜெயலலிதா காலத்தில் கூட இப்படி நடந்தது.
அப்போ அவர் பேசி வாங்கினார்..
என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ்
தலைவர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக பேசி,பாஜகவை விமர்சித்து
வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த கே.என் நேரு,
"இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏன் குரல் கொடுக்கிறார்கள்
என்று தெரியவில்லை" என்றார்.
ரமணி
11/1/26


No comments:
Post a Comment