Sunday, May 31, 2009

திரைக்குவராதசங்கதி 11


அடிமைப் பெண் படத்தின் கதாநாயகி ஜெயலலிதா பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அம்மா என்றால் அன்பு எனும் பாடலை மெட்டமைத்து ஒலிநாடாவில் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டது. அவர் பாடிப் பயிற்சி பெற்ற பின்னர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
கே.வி. மகாதேவனின் உதவியாளரான புகழேந்தி, கவியரசு கண்ணதாசனின் பல கவிதைகளை பொருத்தமான இடங்களில் திரைப்படப் பாடலாக்கினார். ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்ற கவிதையை வசந்த மாளிகையில் திரைப்படப் பாடலாக்கினார் புகழேந்தி. இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலின் இடையே வரும் கடவுளைத் தண்டிக்க என்ன வழி என்ற வரியை புகழேந்திதான் கூறினார்.
சங்கராபரணம் படப் பாடல்களுக்காக கே.வி. மகாதேவனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அப்படத்தில் பாடல்களைப் பாடுவதற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயங்கினார். அவரை ஊக்கப்படுத்தி பாட வைத்தவர் கே.வி. மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி.
தெலுங்குப் படமான சங்கராபரணத்தின் பாடல்கள் மொழி தெரியாதவர்களையும் ரசிக்க வைத்தது. கிராமியப் பாடல்களை அப்படியே மனதில் பதிய வைத்தவர் கே.வி. மகாதேவன்.
தமிழ்த்திரை உலகை இசை விற்பன்னர்கள் ஆக்கிரமித்திருந்தவேளையில் இசை அறிவு இல்லாத பாமரர்களை கவர்ந்தவர் என்.எஸ். கிருஷ்ணன். தனது நகைச் சுவை நடிப்பாலும் பாட்டினாலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் என்.எஸ். கிருஷ்ணன். என்.எஸ். கிருஷ்ணனுக்கு பின்னர் பாமரர்களை தன் பக்கம் திருப்பியவர் ஜே.பி. சந்திர பாபு.
நடிகர், பாடகர், தயாரிப்பாளர் கதாசிரியர், இயக்குநர் என ஒரே நேரத்தில் தனது பரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.
ஜே.பி. சந்திரபாபுவின் சோக, தத்துவ, நகைச்சுவைப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் சட்டென பதிந்தன. தமிழுடன் ஆங்கிலச் சொல்லையும் கலந்து சந்திரபாபு ஆடிப்பாடிய பாடல்களும் மக்களை பெரிதும் கவர்ந்தன.
தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜோசப் ராட்சிக் என்பவரின் மகன் தான் சந்திரபாபு. அவர் பிறந்து சில நாட்களிலேயே விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். குழந்தை தப்புமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தாயும் தகப்பனும், "ஏசுவே இந்தக் குழந்தை நீர் எமக்குக் கொடுத்த பிச்சை, குழந்தையை உயிர் பிøழக்கச் செய்தருளும், குழந்தைக்குப் பிச்சை எனப் பெயரிடுகிறோம்' என்று முழந்தாளிட்டு இயேசுவிடம் மன்றாடினர். அந்த மன்றாட்டத்தினால் தப்பிப் பிழைத்த குழந்தைக்கு ஜோசப்பிச்சை எனப் பெயரிட்டனர். சந்திர பாபுவுக்கு முன்னால் ஜோசப் பிச்சையின் முதல் எழுத்துக்கள் ஒட்டிக் கொண்டதால் ஜே.பி. சந்திரபாபு ஆனார்.
திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் சினிமா கம்பனிகளில் ஏறி இறங்கிய இளைஞர்களில் ஜே.பி. சந்திரபாபுவும் ஒருவர். ஓர் இடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஸ்ரூடியோவை நோக்கிச் சென்று தமது சந்தர்ப்பத்தைத் தேடிக் கொள்ளாமல். விதிவிலக்காக தற்கொலைக்கு முயன்றார் ஜே.பி. சந்திரபாபு.
1947 ஆம் ஆண்டு மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா இயக்கிய தன அமராவதியில் அறிமுகமானார் ஜே.பி. சந்திரபாபு. அந்தப்படத்தில் மாணிக்கம் செட்டியாராக புலிமூட்டை ராம சாமி ரத்தினம் செட்டியாராக ஜே.பி. சந்திரபாபுவும் நடித்தார்கள். ஜே.பி. சந்திரபாபு அறிமுகமான படம் என்பதைத் தவிர வேறு விஷேசம் அந்தப் படத்துக்கில்லை.
ஜெமினி ஸ்ரூடியோ தயாரிக்கும் படத்தில் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி அதிபர் எஸ். எஸ். வாசனிடம் ஜே.பி. சந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார். சந்திர பாபுவின் வேண்டுகோளை எஸ்.எஸ். வாசன் நிராகரித்ததால் மனம் வெதும்பி யெமினி ஸ்டூடியோ வாசலில் நஞ்சருந்தினார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜே.பி. சந்திரபாபுவை ஜெமினி ஸ்டூடியோவின் உதவியாளராக வேலை செய்த ஜெமினி கணேசன் வைத்தியசாலையில் சேர்த்தார். அவரின் கையில் இருந்த கடிதத்தை ஜெமினி ஸ்üரூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனிடம் சேர்த்தார்.
திருவாசன் அவர்களுக்கு நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்கள் முடியாதுன்னு சொல்லிவிட்டீர்கள். என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிந்தவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது ரொம்ப தப்பு. இத்தனை பெரிய ஸ்டூடியோவிலே எனக்கு சான்ஸ் கிடைக்கல நான் ஒழிந்து போறேன், செத்துப்போறேன்'' என எழுதி இருந்தது.
1947 ஆம் ஆண்டு மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா இயக்கிய அமராவதியில் அறிமுகமானார் ஜே.பி. சந்திரபாபு. அந்தப்படத்தில் மாணிக்கம் செட்டியாராக புளிமூட்டை ராம சாமியும் ரத்தினம் செட்டியாராக ஜே.பி. சந்திரபாபுவும் நடித்தார்கள். ஜே.பி. சந்திரபாபு அறிமுகமான படம் என்பதைத் தவிர வேறு விஷேசம் அந்தப் படத்துக்கில்லை.
ஜெமினி ஸ்ரூடியோ தயாரிக்கும் படத்தில் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி அதிபர் எஸ். எஸ். வாசனிடம் ஜே.பி. சந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார். சந்திரபாபுவின் வேண்டுகோளை எஸ்.எஸ். வாசன் நிராகரித்ததால் மனம் வெதும்பி ஜெமினி ஸ்டூடியோ வாசலில் நஞ்சருந்தினார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜே.பி. சந்திரபாபுவை ஜெமினி ஸ்டூடியோவின் உதவியாளராக வேலை செய்த ஜெமினி கணேசன் வைத்தியசாலையில் சேர்த்தார். அவரின் கையில் இருந்த கடிதத்தை ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனிடம் சேர்த்தார்.
திரு வாசன் அவர்களுக்கு நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்கள் முடியாதுன்னு சொல்லிவிட்டீர்கள். என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிந்தவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது ரொம்ப தப்பு. இத்தனை பெரிய ஸ்டூடியோவிலே எனக்கு சான்ஸ் கிடைக்கல நான் ஒழிந்து போறேன், செத்துப்போறேன்'' என எழுதி இருந்தது.
சந்திரபாபுவின் கடிதத்தைக் கண்டு கலங்கிய ஏ.வி. மெய்ப்பச் செட்டியார் "ராஜி என் கண்மணி' என்ற படத்தில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்தார்.
1965ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்திய இராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் எல்லைப் பகுதிக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தினார்கள்.
சிவாஜி, பத்மினி, சாவித்திரி, ஜெயலலிதா, கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோருடன் சந்திரபாபுவும் சென்றிருந்தார். அவர்கள் சென்னை திரும்பும் வழியில் இந்திய ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர்.
அப்போது ""பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான்'' என்ற பாடலை சந்திர பாபு பாடினார். அபாடலில் மெய் மறந்த ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ""அடடா என்ன அர்த்தம் என்ன அர்த்தம்'' என்று பாராட்டினார். அவரின் பாராட்டுதலினால் உற்சாகமடைந்த சந்திரபாபு ஜனõதிபதியின் மடியில் உட்கார்ந்து தோளில் கைபோட்டு தாடையைப் பிடித்து ""நீ ரசிகன்டா கண்ணு'' என்று பாராட்டினார்.கவிஞர் கண்ணதாசன் "கவலை இல்லாத மனிதன்' என்ற படத்தைத் தயாரித்தபோது அதில் நாயகனாக நடித்த சந்திரபாபு கொடுத்த தொல்லைகள் அதிகம். அதனை மனதில் வைத்துத்தான் ""புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை'' என்ற பாடலை கவிஞர் எழுதினார் என்ற ஊகம் திரை உலகில் உள்ளது.
கண்ணதாசனின் அந்த பாடலுக்கு ""என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா'' என்ற பாடலை மருதகாசி மூலம் சந்திரபாபு பதிலளித்தார் என்றும் சிலர் கருதுகிறார்கள்.




சில வருடங்களின் பின்னர் ""சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயøலப் பார்க்க சிரிப்பு வருது'' என்ற கண்ணதாசனின் பாடலை ஜே.பி. சந்திரபாபு பாடினார்.
சிவாஜி சந்திரபாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் "சபாஷ் மீனா'. இப்படத்தில் சந்திரபாபு இரட்டை வேடத்தில் நடித்தார். ரிக்ஷாக்காரனாக சந்திரபாபு மெட்ராஸ் பாஷையில் பேசி ரசிர்களைக் கவர்ந்தார். "சபாஷ் மீனா' படத்துக்காக சந்திரபாபு பாடிய பாடல்தான் ""குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே'' பி.ஆர். பந்துலுவுடன் சந்திரபாபுவுக்கு ஏற்பட்ட பிரச்சிசனை காரணமாக அவருக்குத் தெரியாமலே அப்பாடலை "மரகதம்' படத்தில் பாடிவிட்டார் சந்திரபாபு.
திறமையான கலஞர் சந்திரபாபு அவரது பிடிவாதமும் தலக்கணமும் வாழ்வில் ஏற்பட்ட விரக்தியாலும் மதுவிடம் சரணடைய வைத்தது.


""அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வாராததேனோ'' என்ற காலத்தால் அழியாத பாடலைத் தந்தவர் இசை அமைப்பாளர் டி.ஜி. லிங்கப்பா. தனது 14 வயதில் தமிழ்த்திரை உலகில் நுழைந்த டி.ஜி.லிங்கப்பா அதிக பாடல்களுக்கு இசை அமைக்கவில்லை என்றாலும் அவர் இசை அமைத்த படப் பாடல்களில் அதிகமானவை ரசிகர்களின் மனதை விட்டு நீங்காதவை.
டி.ஜி.லிங்கப்பாவின் தகப்பனின் பெயர் திருச்சி கோவிந்தராஜூலு நாயுடு. திருச்சியிலே இசைக் கருவிகளும் கிரமபோன் ரெக்கார்ட்டுகளும் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தவர். சங்கீத ஞானம் கை வரப் பெற்றவர். அந்தக் காலத்தில் ஸ்பெஷல் நாடங்களுக்கு சிறப்பு ஆர்மோனியம் வாசிப்பதற்கு இவரைப் பலரும் தேடிச் செல்வார்கள்.
கே.பி.சுந்தராம்பாளுக்கு இசை கற்பித்த கோவிந்தராஜூலு நாடகங்களையும் மேடையேற்றினார். இசைக்கருவிகள் விற்பனை செய்யும்கடையையும் நடத்தினார் கடையில் இசைக்கருவிகள் நிறைந்திருந்தமையினால் கோவிந்தராஜூலுவின் இரண்டாவது மகன் டி.ஜி. லிங்கப்பா கிற்றார், மெடலின் போன்ற இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார். தகப்பனின் ஆர்மோனியத்தை கற்றுத் தேர்ந்த லிங்கப்பாவுக்கு கிற்றார், மெடலின் ஆகியவை வாசிப்பது இலகுவானதாக இருந்தது.
நாடகங்கள் மேடை÷யற்றியதால் ஏற்பட்ட நஷ்டமும், வாத்தியக்
கடையின் வியாபார வீழ்ச்சியும் கோவிந்தராஜூலு குடும்பத்தை திருச்சியிலிருந்து சென்னைக்கு மாற்றியது. சென்னைக்குச் சென்றதும் திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் வாய்ப்புத்தேடி அலைந்தார். டி.ஜி. லிங்கப்பா இயக்குநர் சுப்பிரமணியத்தின் சகோதரர் விஸ்வநாதன் காமதேனு என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதை அறிந்து அங்கு சென்றார். டி.ஜி.லிங்கப்பாவுக்கு பாடத் தெரியுமா என்பதை அறிவதற்காக பாடும் படி கேட்டார் விஸ்வநாதன். நடிக்கும் ஆர்வ மேலீட்டினால் தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக்காட்டினார் டி.ஜி.லிங்கப்பா. டி.ஜி. லிங்கப்பாவின் பாடல் பிடித்திருந்ததனால் தன்னுடன் இருக்கும் படி கூறினார் விஸ்வநாதன். நான்கு மாதங்கள் கடந்தும் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கான அறிகுறி தென்படவில்லை. இதனால் மனம் வெறுத்த லிங்கப்பா தனக்கு தெரிந்த சங்கீதத்தின் மூலம் முன்னேற முடிவு செய்தார். காமதேனு என்னும் படத்தில் வீணை எஸ்.
பாலச்சுந்தர் நடித்தார். அப்போது அவருக்கு 14வயது. டி.ஜி.லிங்கப்பாவுக்கும் அப்போது 14 வயதுதான்.
கோபால் சர்மா, தாமேஸ் வரசர்மா ஆகிய சகோதரர்கள் சர்மா பிரதர்ஸ் எனும் பெயரில் இசைக்குழு நடத்தி வந்தார்கள். தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கும், கிரமபோன் ரெக்கார்ட்டுகளுக்கும் இவர்கள் இசை வழங்கி வந்தார்கள். டி.ஜி.லிங்கப்பா அந்த இசைக்குழுவில் இணைந்து கிற்றார், மெடலின், ஆர்மோனியம் ஆகியவற்றை வாசித்தார்கள்.
ஜெமினி ஸ்ரூடியோ வனமோகினி என்ற படம் தயாரித்தது. அந்தப்படத்தின் இசை அமைப்புக்கு வாத்தியக் கலைஞர்கள் தேவை என்பதை அறிந்து அங்கு சென்றார் டி.ஜி.லிங்கப்பா. 40 வயதைக் கடந்தவர்கள் இசைக்கருவிகளை வாசிக்கத் தயாராக இருந்தனர். அவர்களில் சிறுவனான ஜி.லிங்கப்பாவை கண்ட இசையமைப்பாளர் சி. இராமச்சந்திராவுக்கு மூக்குக்கு மேல் கோபம் பறந்தது. இந்தக் சின்னப் பையனை யார் கூட்டிவந்தது என்று சத்தம் போட்டார்.
லிங்கப்பாவும் மனம் நொந்தார். சிறுவனான தனது திறமையை மதிக்கவில்லையென்று வருத்தப்பட்டார். டி.ஜி. லிங்கப்பாவின் இசைஞானத்தைக் கேள்விப்பட்ட இசையமைப்பாளர் டி.ஏ. கல்யாணம் தனது இசைக்குழுவில் சேரவரும்படி டி.ஜி.லிங்கப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பையேற்று சேலத்தில் உள்ள மார்டன் தியேட்டரில் மாதச் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தார். அவருக்கு அவர் பேசிய மாதச் சம்பளம் 60 ரூபா. மார்டன் தியேட்டர் டி.ஆர்.பார்ப்பா, கே.வி. மகாதேவன் ஆகியோரின் நட்பு லிங்கப்பாவுக்கு கிடைத்தது

2 comments:

butterfly Surya said...

அருமையான தகவல்கள்.

படங்களும் அருமை.

வாழ்த்துகள்.

வர்மா said...

வண்ணத்துப்பூச்சியாரின்வருகை உற்சாகமளிக்கிறது.