Sunday, May 10, 2009

விகடன் வாசகர்களின் கருத்து

விகடனில் தேர்தல் 2009 பகுதியில் வாசகப்பத்திரிகையாளர் பகுதியில் நான் எழுதிய கட்டுரை வெளியானது.அதற்கு விகடன் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே பதிகிறேன்.கட்டுரையைப்படிக்காதவர்களுக்காக அதனைமீண்டும் தருகிறேன்


ஜெயலலிதாவின் பிரசாரத்தால் தடுமாறுகிறார் கருணாநிதி!

- சூர‌ன்.ஏ.ர‌விவ‌ர்மா
இலங்கையில் நடைபெறும் போரால் தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசும் தத்தமது சாதனைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, இலங்கை விவகாரத்தில் தமக்கு எதிராகக் கிளப்பப்பட்டிருக்கும்
குற்றச்சாட்டுக்களுக்கு பதிலைத் தேடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றன.
மத்திய அரசும், தமிழக அரசும் செய்த தவறுகளையும் இடையில் கைவிட்ட திட்டங்களையும் பட்டியலிட வேண்டிய ஜெயலலிதா, இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிரசாரக் களத்தைத் திசை திருப்பியுள்ளார்.
கடந்த 17 வருடங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியின் கொலையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு படுதோல்வியையும், காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியையும் பெற்றுக் கொடுத்த இலங்கை விவகாரம், இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சவாலாக உள்ளது.
இலங்கைப் பிரச்னையில் அதிக அக்கறை காட்டாத ஜெயலலிதா, திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதங்கள் இருந்ததுடன், இலங்கைத் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று கூறினார்.
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளும் உணர்ச்சி மயமான பேச்சும் தமிழக மக்களைக் கவர்ந்துள்ளதால் தமிழக அரசு அதிர்ச்சியடைந்தது.
ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திடீரென உண்ணாவிரதம் இருந்தார், தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கைத் தமிழ் மக்களுக்காக தள்ளாத வயதிலும் உண்ணாவிரதம் இருந்தார் என்ற கருத்துடன் அந்த உண்ணாவிரத நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் உள்ள செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வரவேண்டும் என்ற
இரட்டைத் தோணியில் தமிழக முதல்வர் கால்வைத்துள்ளார். அதனால் அவர் தடுமாறுகிறார்.
வெற்றி என்ற இலக்குடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள ஜெயலலிதா, வெற்றிக்காக தன்னால் செய்ய முடியாதவற்றையும் பட்டியலிடுகிறார். வைகோ, டாக்டர் ராமதாஸ், இடதுசாரித் தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கை, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக உள்ளது. இலங்கையில் போரை நிறுத்தும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இலங்கையில் போரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடம் உள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் துயரைத் துடைக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையில் இருந்து இறங்கி வர வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியைத் துறப்பதற்கு முதல்வர் ஏன் தயங்குகிறார்?
திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுடன் ஐந்து வருடங்கள் சகல வசதிகளையும் அனுபவித்து விட்டு தேர்தல் வெற்றிக்காக அணி மாறிய டாக்டர் ராமதாஸ் இன்று காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை தூற்றுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு அமைவதற்கு காரணமாக இருந்த இடதுசாரிகள் தமது கொள்கையுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துப் போகவில்லை என்பதனால் ஆதரவை விலக்கிக் கொண்டன.
டாக்டர் ராமதாஸும் இடதுசாரித் தலைவர்களும் தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து தமது கருத்துகளைக் கூறுகின்றனர். இவர்களின் பிரசாரம் தமிழக மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கும் தனது கட்சிக்கும்
எதிரான பிரசாரங்களை முறியடிக்க வழிவகை தெரியாது தடுமாறுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழ் மக்களின் உணர்வுகளின் முன்னால் தமிழக அரசின் சாதனைப் பட்டியல் அடங்கிப்போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. தமிழக அரசின் அல்லது மத்திய அரசின் சாதனைப் பட்டியலைப் பார்க்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை. இலங்கையில் யுத்தம்
நிறுத்தப்பட்டு விட்டதென்ற செய்தியையே தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்களை இலங்கைப் பிரச்னை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழகத் தேர்தல் முடிவு அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான சூழ்நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அரசியலில் மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசு தப்பிப்பிழைப்பது கடினம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழிகளை தமிழக முதல்வர் ஆராய்கிறார். தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நெருக்கடி கொடுக்கும் திட்டங்களுடன் தேர்தல் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா!


Lakshmikanthan
சொந்த நாட்டிலேயே தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் ராஜபக்சே அரசுக்கு இந்தியா ஆதரவளிப்பதை வரலாறு மன்னிக்காது.40 தமிழக எம்பிக்களின் ஆதரவில் பதவியில் நீடிக்கும் மத்திய அரசு இதை விட மோசமாக தமிழர்களை அவமானப்படுத்த முடியாது.சொந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கையில் இனப்படுகொலைக்கு ஆலோசனை வழங்குவதில் இன்பம் காண்கிறார்கள்.புலிகள் பயங்கரவாதிகளானால் சொந்த நாட்டு மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் ராஜபக்சே என்ன அமைதி புறாவா?இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு ஒரு இடம் கிடைத்தால் கூட அதைவிட அவமானகரமான விஷயம் வேறு எதுவுமில்லை.இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை ஏதோ புலிகளுக்கும் அரச பயங்கரவாத படைகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று ஒதுக்கி விட முடியாது.லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உண்ண உணவின்றி கை கால்களையும் சொந்த பந்தங்களையும் இழந்து வாடும் ஒரு மனிதாபிமான பேரவலத்தை கை காட்டி வேடிக்கை பார்ப்பது இந்தியாவிற்கு அழகல்ல.இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்விஸ் வங்கிகளில் ராஜீவ் குடும்பம் பல கோடிகளை பதுக்கி வைத்திருப்பதை ஆதாரங்களோடு வெளியிட்டுருக்கிறது.இப்படிப்பட்டவர்கள் தமிழர்களுக்கு இறையாண்மை குறித்தும் தேசபக்தி குறித்தும் பாடம் எடுப்பது வெட்க கேடு.க்வாட்ரச்சியை விடுவிப்பதற்கு சோனியா எடுத்த முயற்சிகளை ஈழ தமிழர்களை பாதுகாக்க ஏன் எடுக்கவில்லை என்ற ஜெவின் கேள்வி நியாயமானதே.

Deyeskay

காங்கிரசை எதிர்க்கும் துணிவு எப்படி வரும்? நிறைய உப்பைத் தின்றிருக்கிறார்கள்; தண்ணீர் குடித்துத் தானே ஆக வேண்டும்?

Eniyan Ambigapathy

Dear Editor, Vanakkam.Selvi Jayalalitha's announcements hurting all Tamilans Hearts.Kindly refer her past fifteen years statements.She is always aganist the Tamil Eelam and anti to Ltte activities.To occupy the supreme chair she changes her political stands temperorly.Dr Ramdoss.Vaikko.Left paties and othe allaince parties well known her timely stands.But people not depending any political never belive her false informations.NEVER CAST THEIR VOTES.

Jude

சோனியாவின் தமிழ்நாடு விஜயம் ரத்து என்பதில் இருந்தே கருணாநிதியின் தோல்வி பயம் தொடங்கிவிட்டது, காங்கிரஸ் இம்முறை தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் வெல்லமுடியாது bpயின் கருத்து இன்றே பொய்த்துவிட்டது
Gnana Prakash

இன்னும் எத்தனை காலம்தான் இல௯௯௯ங்கை பிரச்சனையை வைத்து இங்கே அரசியல் நடக்குமோ.

srini m

There is no relation to the title and its article. Looks like a DMK reader had written this article.

Venu

த்முக பதவி பெரிதல்ல என்ரு நினைத்து காங்கிரசுக்கு கொடுதுவந்த ஆதரவை வாபஷ் வான்கீருந்தால் இந்த கதி வந்திருக்குமா?

srinivas

அண்ட புழுகு என்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. ஆனால் தற்பொழுதோ அனைவரும் அதில் டாக்டர் பட்டம் பெற்று விட்டனர். அதனால் அது எடுபடவில்லை. உண்ணா விரதத்தை கேலி கூத்தாக்கி, இலங்கை பிரச்சனையை அப்பளமாக நொறுக்கி விட்டார். மீடியாக்கள் எல்லாம் பல் இளித்து கருணாநிதிக்கு பல்லவி பாடும் போது, ஜெய லலிதா துணிச்சலாக கருணாநிதியின் கடந்த கால வெட்டி பேச்சுகளையும், காவேரி பிரச்சனை, ஒக்கனேகல், தமிழக வளர்ச்சி திட்டம், இலங்கை பிரச்சனை என்று எதிலுமே உருப்படியாக எதுவுமே செய்யாத கருணாநிதி என பிடி பிடி என பிடிக்கிறார். கருணாநிதி போல் இவரும் பொய்யான வாக்குறுதிகளை பொல பொலவென கொட்டினாலும், கருணாநிதியின் உண்மையான முகத்தை உரித்து காட்டுவதால் மக்கள் ரசிக்கிறார்கள். எம்.ஜி.யாரோ, மற்ற எதிர் கட்சிகளோ இது வரை இதுபோல கருணாநிதி உண்மையாக விமர்சித்தது இல்லை.

naga

எல்லாம் அவரவர் சூழல்........

Venkatesan

Dear friend, Do you think that any of this politicians will do anything for any Tamilian. Leave MK and Soniya. We kind of know what they did and what they did not do. What was madam JJ doing until now? Sitting in Otty and enjoying for Ooty weather for 9 months in a year. She comes out only during election If she wins she will in Kotai if not in Kodanadu. Until last month did she make any statement for Tamil Eelam/ Sri Lankan Tamils? Nothing. Now all of a sudden she got lot of sympathy for her fellow tamilians in sri lanka. It is funny. Make a note. In this election if congress becomes a single major party and they agree to dissolve TN government JJ will join them dumping all Tamil Eelam support. What was Dr Ramadoss doing until now? Enjoyed all power for 4 year 9 months? And now blaming the same government? What did communist do? Did any of them take the issues to the public on the street? Did they do any strike to get attention? Did they take it to UN? They did nothing for Sri Lankan Tamils. What is/was the stand of MrVijayakanth? All of them are doing(Acting) now for vote. So DO NOT DECIDE YOUR VOTE based on their current stand on Sri Lankan issue. None of them has any stand on this issue. They all have one stand , that is do what ever it takes to cheat public and get vote. Not even 0.1 % difference. DECIDE and vote BASED ON YOUR CANDIDATE in your area. Please note that I am not saying that what is happening for Sri Lankan Tamils are correct. All I am saying is do not expect this vote beggars to support real humans

bp
இவர் சொல்லும் கட்டுறை நாளை பொய்யாகிவிடும்.

Sindhu
See still many people even educated people are supporting and thinking about Jaya that she will do something for Tamil people in TN and Srilanka. Pathetic. She can't do anything for people. She needs only power. People try to understand.. No vision for her, She is acting for election.... See Ramdoss, hahahahaha worst than any politician in TN.... they are going to do something for Tamils. Ask Ramdoss to spend few days in Jail for Tmails then he will run from politics.. such a great leader!!!! Tamils are still fools, so getting kicks where ever they live.............. see supporting Jaya... then how come?

Ramana
காங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக மு.க வும் தி. மு.க வும் உள்ளனர்.

Sethu Subramanian
மனதில் சுத்தம் உள்ளவர்களும், எப்போதும் நேர் வழியே செல்பவர்களும் தடுமாறுவதில்லை.

Sriraman
Yes! When family oriented politicians look into the welfare of their kith and kin in their family, they don't have the time to look into the welfare or any act doing good to the public. Teach all the family based political parties a real lesson now and in future.

sekes
என்ன பால்? கள்ளீப்பாலா?

தமிழ்த்தம்பி
கலைஞர் காணாத தோல்வியா..? அப்படியே 40-ம் கவிழ்த்தாலும் நாளையே வீறு கொண்டு எழுவார். அன்றும் சரி.. இன்றும் சரி.. இலங்கைப் பிரச்சினைக்காக அதிகம் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி என்றால் அது கலைஞராகத்தானிருக்கும்! ஜெயித்துவிட்டதாகவே அலட்டிக்கொள்ளும் அம்மையார் அவர்களையும் பார்க்கத்தானே போகிறோம்.. ஜெயித்தபின் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கண்றாவி காட்சியை! (சசிகலா அம்மையாரை வைத்துக்கொண்டு ஜெ. சாதிப்பார் என்பதெல்லாம் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான்) அப்போது தெரியும் தொங்கும் தோட்டங்களாம்.. ராமதாஸ், வைகோ மற்றும் இடதுசாரிகளின் வெட்டிப்பேச்சு வீரசாகசங்கள்!

aravindan
Guys, To all the Tamilians/Indians who are not aware of the history of srilanka & Eelam.I would like to share some details which i got from my bro. Dont frame me as a pro ltte or anti srilankan...just a tamilian who shed tears(what else i can do) for another tamilian who is being brutally murdered by animals called rajapakshe & bros. FYI : Source BBC 1948 - Ceylon gains full independence. Sinhala nationalism 1949 - Indian Tamil plantation workers disenfranchised and many deprived of citizenship. 1956 - Solomon Bandaranaike elected on wave of Sinhalese nationalism. Sinhala made sole official language and other measures introduced to bolster Sinhalese and Buddhist feeling. More than 100 Tamils killed in widespread violence after Tamil parliamentarians protest at new laws. 1958 - Anti-Tamil riots leave more than 200 people dead. Thousands of Tamils displaced. 1959 - Bandaranaike assassinated by a Buddhist monk. Succeeded by widow, Srimavo, who continues nationalisation programme. 1965 - Opposition United National Party wins elections and attempts to reverse nationalisation measures. 1970 - Srimavo Bandaranaike returns to power and extends nationalisation programme. 1972 - Ceylon changes its name to Sri Lanka and Buddhism given primary place as country's religion, further antagonising Tamil minority. 1976 - Liberation Tigers of Tamil Eelam (LTTE) formed as tensions increase in Tamil-dominated areas of north and east. 1977 - Separatist Tamil United Liberation Front (TULF) party wins all seats in Tamil areas. Anti-Tamil riots leave more than 100 Tamils dead. 1981 Sinhala policemen accused of burning the Jaffna Public Library, causing further resentment in Tamil community. 1983 - 13 soldiers killed in LTTE ambush, sparking anti-Tamil riots leading to the deaths of an estimated several hundred Tamils. Start of what Tigers call "First Eelam War". You can see from the way the srilankan government has systematically put down the rights and aspirations of Tamil which has fueled the rise of many rebels. Which is inevitable ! STOP THE GENOCIDE. Aravind, Coimbatore

thiru
்பொறுப்புள்ள தலைவர்கள் கலைஞர்போல் செயல்படுவார்கள். பித்தலாட்டங்கள் தப்பாட்டம் ஆடலாம் அது தேர்தல். இவர் தேர்தல்களைத் தாண்டி வந்து கொண்டிருப்பவர். தாய் குழந்தைக்குப் பால் தரும்போது அந்த ஒரு கவனம்தான் அவளுக்கு இருக்கும்.

No comments: