Thursday, May 7, 2009
ரோஹித் சர்மா ஹட்ரிக்; வீழ்ந்தது மும்பை
செஞ்சூரியனில் நடைபெற்ற மும்பை டெக்கான் அணிகளுக்கிடையிலான ஐ.பி.எல்.போட்டியில் ரோஹித் சர்மாவின் ஹட்ரிக்கினால் டெக்கான் அணி 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது.
டெக்கான் அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் தொடர்ந்து மூன்றாவது முறையாகக் சறுக்கியது. குல்கர்னியின் பந்தை ஸ்லிப்பில் நின்ற சச்சினிடம் பிடி கொடுத்த கிப்ஸ் ஓட்டம் எதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கில்கிறிஸ்டுடன் சுமன் இணைந்தார். ஹர்பஜனின் பந்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்திய சுமன் பிராவோவின் பந்தை ஷாவிடம் பிடி கொடுத்து 20 ஓட்டங்களில் வெளியேறினார். 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த சுமன் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி அடங்கலாக 20 ஓட்டங்கள் எடுத்தார்.
அதிரடியின் மூலம் எதிரணிகளை மிரட்டிய கில்கிறிஸ்ட் மும்பை வீரர்களின் பந்தில் அதிரடி காட்டாது தடுமாறினார். 29 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்த கில்கிறிஸ்ட் ராஜுவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
10 ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து 63 ஒட்டங்கள் எடுத்த டெக்கான் அணி அடுத்த 10 ஓவர்களில் விரைவாக ஒட்டங்களைக் குவித்தது. ஸ்மித் 16 ஓட்டங்களில் ஜயசூரியவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஐந்தாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய ரோஹித் சர்மா, வேணு கோபால் ராவ் ஜோடி கௌரவமான இலக்கை எட்ட உதவியது. ரோஹித் சர்மா 38 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். வேணு கோபால் ராவ் 28 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் டெக்கான் அணி ஆறு விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது. மலிங்க, குல்கர்னி, பிராவோ ராஜு, ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்öகட்டை வீழ்த்தினர்.
146 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜயசூரிய 5 ஓட்டங்களிலும் சச்சின் டெண்டுல்கர் இரண்டு ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஆர்.பி.சிங் வீசிய முதலாவது ஓவரில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் மும்பை அணி அதிர்ச்சியடைந்தது.
மும்பை அணி இரண்டு விக்öகட்களை இழந்து ஏழு ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஜோடி சேர்ந்த ஷாவும், டுமினியும் விரைவாக ஓட்டங்களைச் குவித்து நம்பிக்கை ஏற்படுத்தினர். சுமனின் பந்தை ஸ்மித்திடம் பிடிகொடுத்த ஷா 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டில் இந்த ஜோடி 53 ஓட்டங்கள் எடுத்தது. நான்காவது விக்கெட்டில் டுமினியுடன் இணைந்து பிராவோவும் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினார். பிராவோ 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க களமிறங்கினார் நாயர்.
16 ஆவது ஓவரை வீசுவதற்கு ரோஹித் சர்மாவை அழைத்தார். அணித் தலைவர் இரண்டு அணியும் வெற்றி பெறும் சந்தர்ப்பம் சம அளவில் இருந்த வேளை ரோஹித் சர்மா வீசிய ஓவர் மும்பாயை வீழ்த்தி டெக்கானுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. 15.5 ஆவது ஓவரில் ரோஹித்தின் பந்தில் ஒரு ஓட்டத்துடன் நாயர் ஆட்டமிழந்தார். 15.6 ஆவது பந்தில் ஹர்பஜன் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 17 ஆவது ஓவர் வீசியபோது முதல் பந்தில் டுமினி 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவின் ஹட்ரிக் சாதனையுடன் மும்பை வீழ்ந்தது.
20 ஓவர்களில் எட்டு விக்öகட்களை இழந்து மும்பை 126 ஓட்டங்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா நான்கு விக்கெட்களையும் ஆர்.பி.சிங், சுமன் ஆகியோர் தலா இரண்டு விக்öகட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட
நாயகனாக ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார். தென்னாபிரிக்காவில் நடைபெறும் இரண்டாவது ஐ.பி.எல். போட்டியில் இது
வரை இரண்டு வீரர்கள் ஹட்ரிக் சாதனை செய்துள்ளனர். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணித் தலைவர் யுவராஜ் முதலில் ஹட்ரிக் சாதனை செய்தார். டெக்கான் ஐந்தாவது வெற்றியைப் பெற்றது. மும்பை நான்காவது போட்டியில் தோல்வியடைந்தது.
ரமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment