Tuesday, May 5, 2009
டில்லியை வீழ்த்தியது சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டில்லி அணி களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
முதலில்முகாயம் காரணமாக டில்லி அணித் தலைவர் ஷேவக்விளையாடவில்லை. கம்பீர் அணித் தலைவராகக் கடமையாற்றினார். சென்னை அணியில் பர்தீவ் பட்டேல் நீக்கப்பட்டு விஜய் முரளி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினார்.
விஜய், ஹைடன் ஜோடி 36 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது நெஹ்ராவின் பந்தை பாத்தியாவிடம் பிடி கொடுத்த விஜய் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய ஹைடன் சர்வாவின் பந்தை டிவில்லியஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹை டன் ஒரு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்கள் எடுத்தõர். மூன்றாவது இணை ப்பாட்டத்தில் விளையாடிய ரைனாபத்திரிநாத் ஜோடி அட்டகாசமாக விளையாடி டெல்லி அணி வீரர்களுக்கு கலக்கத்தைக் கொடுத்தது. இவர்களின் அதிரடிக்கு பாத்தியா முற்றுப்புள்ளிவைத்தார்.12.3 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 112 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ரைனா ஆட்டமிழந்தார்.
21 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைனா இரண்டு சிக்ஸர், இரண்டு பௌண்டரி அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்தார். பத்திரிநாத்தையும் பாத்தியா வெளியேற்றியதும் சென்னை அணியின் ஓட்ட வீதம் குறையத் தொடங்கியது. 34 பந்துகளுக்கு முகம் கொடுத்த பத்திரிநாத் இரண்டு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்தார். மோர்கல் 6, டோனி 6, ஓரம் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சென்னை அணி கடைசி ஐந்து ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை பறிகொடுத்து 33 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.
நனீஸ், நெஹ்ரா ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளையும் பாத்தியா இரண்டு விக்கட்டுகளையும் சவ்லா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
164 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான தியாகி டெல்லி அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தினார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கம்பீர் 13 ஓட்டங்களுடன் தியாகியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் ஓட்டமெதுவும் எடுக்காது தியாகியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 13 பந்துகளைச் சந்தித்த டில்ஷான் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
வார்னர், டினேஷ் கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடியை தியாகி பிரித்தார். 51 ஓட்டங்கள் எடுத்த வார்னர் தியாகியின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
31 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் அடித்த டினேஷ் கார்த்திக், தியாகியின் பந்தை முரளியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்த டெல்லி 145ஓடங்கள் எடுத்தது.ஜகாதி நான்கு விக்கட்டுகளையும் தியாகி இரண்டு விக்கட்டுகளையும் மார்சல், முரளி ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஜகாதி தெரிவு செய்யப்பட்டார்.
000
பெங்களூரிடம் வீழ்ந்தது மும்பை
ஜொஹன்னஸ் பேக்கில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் பெங்ளூர் அணி மிக எளிதாக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பாய் 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.
டெண்டுல்கர் 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். ஐ.பி.எல் போட்டியில் முதன் முதலாக களமிறங்கிய தென்னாபிரிக்க வீரரான டிலான் பெரஸ் மும்பை அணிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார். டெண்டுல்கரை வெளியேற்றிய இவர் அடுத்த பந்தில் ரகானேயை வெளியேற்றினார்.
ஒரு ஓட்டத்துடன் டுமினியை யும் டிலன்டி பெரஸ் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். 14.1 ஓவர் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 23 ஓட்டங்கள் எடுத்த போது களத்தில் நின்ற ஜயசூரிய பிரõவோ ஜோடி கௌரவமான இலக்கை எட்ட உதவியது. 43 பந்துகளைச் சந்தித்த ஜயசூரிய ஒரு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுத்த வேளை வன்டிமேரின் பந்தை விஜய்குமாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மும்பாய் அணியின் நான்கு விக்கெட்கள் 83 ஓட்டங்களில் வீழ்ந்தது. பிராவோ சுமித் நாயர் ஜோடி இறுதிவரை போராடி 145 ஓட்டங்கள் எடுக்க உதவியது. பிராவோ 50 ஓட்டங்களுடனும், நாயர் 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிலன் பெரஸ் மூன்று விக்கெட்டுக்களையும், வன்டேமெமேன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
150 என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 18.1 ஓவரில் ஒரு விக்கட்டை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜவ்பர் ஏழு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கலிஸ், உத்தப்பா ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 59 பந்துகளுக்கு முகம்கொடுத்த கலிஸ் இரண்டு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்களாக 89 ஓட்டங்கள் எடுத்தார். 42 பந்துகளுக்கு முகம் கொடுத்த உத்தப்பா இரண்டு சிக்ஸர் எட்டு பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டநாயகனாக கலிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
எட்டாவது போட்டியில் விளையாடிய பெங்களூர் நான்காவது வெற்றியைப் பெற்றது.
ஏழாவது போட்டியில் விளையாடிய மும்பை மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.
வானதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment