ஆங்கிலத்தில் வெளியான டார்ஸான் திரைப்படங்களை பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்களுக்கு வனராஜ கார்ஸன் என்ற தமிழ்ப் படம் பெருவிருந்தாக அமைந்தது. 1938ஆம் ஆண்டு வெளியான வனராஜகார்ஸன் எனும் இப்படத்தில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ் நடிகை இப்படி ஆபாசமாக நடிக்கலாமா என்றும் பத்திரிகைகள் போர்க்கொடி தூக்கின.
சிறுவயதில் இருந்து காட்டில் வாழும் ஒருவன் மிருகங்களுடன் நேசமாகப் பழகுவதும் மனிதர்களைக் கண்டதும் அஞ்சுவதும் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையாக இருந்தது. பேசத் தெரியாத கதாநாயகன் சந்தோசம் துக்கம் ஏமாற்றம் என்பனவற்றை "ஆ', "ஓ' என்ற சொற்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்.
சிறுவயதில் இருந்தே காட்டில் வாழும் ஜோன் சுவாஸ் குரங்குபோல் மரத்திற்கு மரம் தாவி பல சாகசங்களைச் செய்கிறார். மனிதக்குரங்கு, நாய் என்பன ஜோன் சுவாஸின் உற்ற தோழனாக விளங்கின. தனக்குத் தேவையானவற்றை சைகை மூலம் வெளிப்படுத்துவார் ஜோன் சுவாஸ் குரங்கும் நாயும் அவற்றை நிறைவேற்றின.
ஒருநாள் நீச்சல் உடையில் அருவியில் குளிக்கும் கே.ஆர்.செல்வத்தைக் கண்டு அதிசயித்த ஜோன் சுவாஸ் அவரை அலாக்காக தூக்கிச் செல்கிறார். காட்டு மனிதனிடம் அகப்பட்ட கே. ஆர்.செல்வம் செய்வதறியாது தடுமாறுகிறார். நீச்சல் உடையில் சேகதா நாயகியை கண்ட ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கதாநாயகி கே. ஆர்.செல்வம், கதாநாயகன் ஜோன் சுவாஸுக்கு நாகரிகத்தைப் புரிய வைக்கிறார். காட்டு மனிதனிடம் மனதைப் பற்றி கொடுத்த கே.ஆர்.செல்வம் ஜோன் சுவாஸை மணம் முடிக்கிறார்.
சிறுவயதில் காணாமல் போன கே.ஆர்.செல்வத்தின் முறைப் பையன் தான் ஜோன் சுவாஸ் என்ற உண்மை தெரிய வருகிறது. இறுதிக்காட்சியில் மணமகனாக வேட்டி சால்வையுடனும் நாயகி சேலையுடனும் காட்சியளிக்கின்றனர்..
பல ஸ்டன் படங்களில் நடித்த ஜோன் சுவாஸ் ஆங்கில நடிகர்களுக்கு ஈடாக நடித்தார். மனிதக்குரங்கும், நாயும் சிறுவர்களையும் பெரியவர்களையும் கவர்ந்தன. கே.ஆர்.செல்வத்தின் கவர்ச்சிக் காட்சிகளின் போது ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தாலும் பத்திரிகைகள் காரசாரமாக விமர்சனம் செய்தன. காட்டு வாழ்க்கையை வெளிப்படுத்தும் முதலாவது தமிழ்ப் படமான வனராஜ கார்ஸனை வாடியா மூவிடோன் நிறுவனம் தயாரித்து. கே.சுப்பிரமணியம் இப்படத்தை இயக்கினார்.
ரமணி
மித்திரன் 25/03/12
6 comments:
நண்பரே, தடம் மாறிய தமிழ் படங்கள் என்பதற்கு பதிலாக
"தடம் மாற்றிய தமிழ் படங்கள் " என்பதுதான் பொருத்தமாக
இருக்கும்.
நண்பரே, தடம் மாறிய தமிழ் படங்கள் என்பதற்கு பதிலாக
"தடம் மாற்றிய தமிழ் படங்கள் " என்பதுதான் பொருத்தமாக
இருக்கும்.
நண்பரே, தடம் மாறிய தமிழ் படங்கள் என்பதற்கு பதிலாக
"தடம் மாற்றிய தமிழ் படங்கள் " என்பதுதான் பொருத்தமாக
இருக்கும்
தங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பரே
அன்புடன்
வர்மா
தங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பரே
அன்புடன்
வர்மா
தங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பரே
அன்புடன்
வர்மா
Post a Comment