Friday, June 22, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 35


மகனாக நினைக்க வேண்டிய மூத்த தாரத்து மகனை மணாளனாக நினைத்து உருகிய காமுகியின் கதை தான் அசோக்குமார். எம்.கே. தியாகராஜபாகவதர் கதாநாயகனாக நடித்த இப் படம் 1941 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழாக் கொண்டாடியது. 
யுத்த களத்தில் எதிரிகளை துவம்சம் செய்து நாடடைக் கைப்பற்றி வெற்றி வீரனாக திரும்புகிறார் எம்.கே தியாகராஜபாகவதர். வெற்றி புருஷனான எம்.கே தியாகராஜ பாகவதர். தனது இரண்டாவது மனைவிக்கு அறிமுகம் செய்கிறார் சக்கரவர்த்தி வி. நாகைய்யா. வெற்றி திலகமிட்டு சக்கரவர்த்தியின்

மூத்த மனைவியின் மகன் எம்.கே தியாகராஜ பாகவதரை வரவேற்கிறாள் கண்ணாம்மாள். தியாகராஜ பாகவதரின் உடலில் விரல்பட்டதும் அந்த ஸ்பரிசத்தினால் தன்னிலை மறந்த கண்ணம்மாவின் உடலில் காமத்தீ பற்றி எரிகிறது. தியாகராஜ பாகவதர் தன் கணவனின் மகன் என்பதையும் மறந்து அவருடன் படுக்கையை பகிர வேண்டும் என்ற ஆசை கண்ணம்மாவின் மனதில் எழுகிறது.
 தியாகராஜ பாகவதருக்கு திருமணம் முடிந்து விட்டது, அவரும் மனைவியும் ஒன்றாக இருப்பதை பார்த்த கண்ணம்மாவின் காமத்தீ மேலும் கிளர்ந்து விட்டு எரிகிறது. தியாகராஜ பாகவதருடன் உறவு கொள்ள வேண்டும் என்று எண்ணம் கண்ணம்மாவின் மனதில் கனன்று கொண்டிருக்கிறது. அதனை நிறைவேற்றும் நாள் அவள் எதிர்பாராது ஒரு நாள் கிடைத்தது.
Œக்கரவர்த்திக்கு சிறிய தாயாருக்கும் முன்னால் எம்.கே தியாகராஜபாகவதர் பாடிக் கொண்டிருக்கையில் மந்திரி அழைப்பதாக சேவகன் கூறியதும் சக்கரவர்த்தி எழுந்து செல்கிறார். அந்த சமயத்தில் தன் இச்சைக்கு இணங்கும்படி கண்ணம்பாள் எம்.கே தியாகராஜபாகவதரிடம் கூறுகிறாள். சிறிய தயாரின் உண்மை ரூபம் தெரிந்த எம்.கே தியாகராஜபாகவதர் மறுக்கிறார். இதனால் வெறுப்படைந்த கண்ணம்மா சக்கரவர்த்தியிடம் எம்.கே தியாகராஜபாகவதரை பற்றி தப்பாக கூறுகிறாள்.
கண்ணம்பாவினால் வீண் பழிசுமத்தப்பட்ட தியாகராஜ பாகவதர் கண்கள் பிடுங்கப்பட்டு நாட்டை விட்டு துரத்தப்படுகிறார் கர்ப்பவதியான மனைவி குமுதினியையும் துரத்தி விடுகிறார் சக்கரவர்த்தி.
தியாகராஜ பாகவதரும் மனைவி குமுதினியும் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வாழ்கிறார்கள் நாடோடியாகத் திரியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. ஒரு நாள் குழந்தை இறந்து விடுகிறது. மனைவி கண்ணம்பாவின் Œதியால் மகனை துரத்திய உண்மை சக்கரவர்த்திக்கு தெரிய வருகிறது. செய்த பாவத்தால் மனம் உடைந்த கண்ணம்பா விஷம் அருந்தி உயிர் இழக்கிறாள்.
புத்த பிரானின் கருணையால் தியாகராஜ பாகவதர் இழந்த கண்களை பெறுகிறார்.
எம்.கே தியாகராஜ பாகவதர் வீ. நாகையா, கண்ணம்மா, டீ.வி. குமுதினி, என்.எஸ் கிருஷ்ணன், டீ.கே மதுரம் ஆகியோர் நடித்தனர். வீ. நாகையாவின் முதல் படம் இது. கண்ணம்மாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. சிறிய வேடத்தில் எம். ஜி ஆர் நடித்தார். எம்.கே தியாகராஜ பாகவதரின் புகழைப் பரப்பிய படங்களில் இதுவும் ஒன்று. கதை வசனம் இளங்கோவன் இயக்கம் ராஜா சந்திரசேகர்.
 உன்னைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ, பூமியில் மானுட ஜன்மம் எடுத்து ஆகிய பாடல்களின் மூலம் தியாகராஜ பாகவதரின் குரல் இன்றும் ஒலிக்கிறது.
ரமணி
மித்திரன்17/06/12

No comments: