Sunday, June 10, 2012

திரைக்குவராதசங்கதி39நடிகர் திலகம்சிவாஜி கணேசன்> கலைஞர் கருணாநிதி>கண்ணாம்பா> டி.ஆர். ராஜகுமாரி ஆகியோருக்கு பெரும் பெயரைப் பெற்றுக்கொடுத்தபடம் மனோகரா. மனோகராவில் டி.ஆர். ராஜகுமாரியின் அசட்டு மகனாக நடித்துஅனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி பாராட்டுப் பெற்றவர் காக்கா ராதா கிருஷ்ணன்.
எம்.கே. தியாகராஜாவின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் சிந்தாமணி. சிந்தாமணி படம் வெளியான போதுராதா கிருஷ்ணனுக்கு எட்டு வயது. எம்.கே.தியாகராக பாகவதர் பாடிய பாடல்களைஅட்சரம் பிசகாமல் பாடினார் றுவனானராதாகிருஷ்ணன்.ராதா கிருஷ்ணன் பாடியதைக் கேட்டவர்கள் அவன் சினிமாவில்சேர்ந்தால் புகழ்பெறுவான் என்று ராதாகிருஷ்ணனின் தாயிடம் கூறினார்கள். தன்மகனை நடிகனாகப் பார்க்க வேண்டும்என்ற ஆசை ராதா கிருஷ்ணனின் தாயாரின் மனதிலும் எழுந்தது.
மகனையும் அழைத்துக் கொண்டு தியாகராஜா பாகவதரின் வீட்டுக்குச் சென்றார்ராதா கிருஷ்ணனின் தாயார். என் பையன்நன்றாகப் பாடுவான். அவன் சினிமாவில்நடிக்க விரும்புகிறான். ஒரு சந்தர்ப்பம்தாருங்கள் என்று ராதாகிருஷ்ணனின் தாயார் கேட்டார்.
சினிமாவில் நடிக்க வேண்டுமானால் நாடகத்தில் நடித்த அனுபவம் வேண்டும். நாடகஅனுபவம் இல்லாதவர்கள் சினிமாவில்நடிக்க முடியாது எனதியாகராஜபாகவதர்கூறினார்.மகனின்சினிமாக் கனவுஇலகுவானது அல்லஎன்பதை தாயார்புரிந்துகொண்டார். அவர் அதற்காக சோர்ந்து போய்விடவில்லை. நாடகக்குழுவில் மகனைச் சேர்க்க வேண்டும் என்றுவிரும்பினார். யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை நடத்திய மதுரை ஸ்ரீபாலகான சபாஎன்ற நாடகக் கம்பனியில் மகனைச் சேர்க்கவேண்டும் என்று தாயார் விரும்பினார்.
மகன் ராதாகிருஷ்ணனுடன் அந்த நாடகக்கொம்பனிக்குச் சென்றார். அதனை நடத்தியவரான யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளைதான்நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நாடகஆசிரியர்ராதாகிருஷ்ணனைப் பார்த்து நாடக மனேஜர் ஒரு பாட்டுப் பாடு என்றார். சற்றும் தயங்காமல் சிறுவனான ராதா கிருஷ்ணன் சிந்தாமணி படத்தில் பாகவதர் பாடிய ஞானக்கண் இருக்கும் போதிலே என்று பாடினான்.
கூடியிருந்த அனைவரும் வாய்விட்டுச்சிரித்தனர்.ஒன்றரைக் கண்ணனான இவனுக்குஞானக் கண் வேண்டுமா என்றுஅனைவரும் கேலியாகச் சிரித்ததைப்பொருட்படுத்தாது ராதா கிருஷ்ணன்தொடர்ந்து பாடினான். அவனின் சாரீரத்தைகேட்ட அனைவரும் சிறிது நேரத்தில்சிரிப்பை அடக்கினார்கள். குரல்வளம் நன்றாக இருந்ததனால் ராதாகிருஷ்ணனுக்கு நடிப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நடிகர் திலகத்தின் வீடும் ராதாகிருஷ்ணனின்வீடும் அருகருகே இருந்ததனால்நாடகக் கொம்பனியில் இணைந்து அவர்களது நட்பு மேலும் இறுக்கமாகியது.1940 ஆம் ஆண்டு கலைவாணர்என்.எஸ். கிருஷ்ணன் சந்திரஹரி என்றபடத்தைத் தயாரித்தார். அரிச்சந்திரனுக்கு நேர்மாறானவன் சந்திரஹரிஅவன் உண்மை சொல்லவே மாட்டான்.அப்படத்தில் நடிப்பதற்காக சிறுவன் ஒருவனை என்.எஸ்.கிருஷ்ணன் தேடினார்அப்போது ராதா கிருஷ்ணனைப்பற்றி கூறினார்கள். என்.எஸ். கிருஷ்ணனுக்குராதா கிருஷ்ணனின் நடிப்புபிடித்ததால் சந்திரஹரி படத்தில் சிறுவனாகநடித்தார்.
சந்திரஹரி ஒரு மணி நேரம் மட்டுமேஓடக்கூடிய படம். ஆகையினால்இழந்த காதல் என்னும் நாடகத்தையும்படமாக்கி இரண்டு கதைகளையும்இணைத்து சந்திரஹரி இணைந்த காதல்எனும் தலைப்பில் வெளியிட்டார்என்.எஸ். கிருஷ்ணன்.தியாகராஜ பாகவதரின் "அசோக்குமார்'> பி.யு. சின்னப்பாவின் "ஆர்யமாலா'> எம்.எஸ். சுப்புலட்சுமியின் "சாவித்திரி' ஆகிய படங்களுடன் வெளியானசந்திரஹரி இழந்த காதல் வெற்றிபெற்றது.
சிங்காரி என்ற படத்தில் ராதா கிருஷ்ணன்பாடிய ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்தஉலகில் ஏது கலாட்டா. அரிசிப் பஞ்சமேவராட்டா நம்ம உயிரை வாங்குமே பராட்டாஎன்ற பாடல் மூலை முடுக்கெங்கும் ஒலித்தது.மங்கையர்க்கரசி என்ற படமே அவருக்குகாக்கா ராதா கிருஷ்ணன் என்ற பட்டத்தைவழங்கியது. அப்படத்தில் நடித்தார் ராதாகிருஷ்ணன். உங்கப்பா அரசாங்கத்தில்வேலை பாத்தவர்டா> காக்கா கீக்கா பிடிச்சுஅரசாங்க வேலை வாங்கு மகனே என மகனுக்குமதுரம் கூறுவார்.
தாயின் சொல்லை வேதவாக்காகக் கருதியராதா கிருஷ்ணன் மரத்தில் ஏறி காகம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வந்து காக்கா பிடிச்சிட்டேன்அரசாங்க வேலை கிடைச்சிடும்என்று சத்தம் போட்டார். அன்றிலிருந்து காக்காராதா கிருஷ்ணன் என்ற பெயர் அவருக்கு ஒட்டிக்கொண்டது.
ரமணி
மித்திரன்10.12.2006

No comments: