கணவனுக்குத்தெரியாதுதாய்இன்னொருவனுடன்கூடிக்குலாவுவதைப்பார்க்கும் சிறுமி,அது பற்றி தகப்பனிடம் சொல்லத்தெரியாது தவிக்கிறாள்.தாயின் கள்ளக்காதலனின் பார்வை தன் மீது விழுவதை வெளியேசொல்லமுடியாது தவிக்கிறாள்.வளர்ந்தபின்ஒருவனைக்காதலிக்கிறாள்.சகோதரிக்காகஅவளைக்கை விடுகிறான் அவன்.தன்னை நேசித்த ஒருவனிடம் தன்னை இழக்கிறாள். அவனோ சகோதரி என்கிறான்.ஆண்களின் வக்கிரபுத்தியால் விரக்தி அடைந்த அவளை ஒருவன் காதலிக்கிறான்.இந்தச்சிக்கலான கதையுடன் 1978 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்ற படம்தான் "அவள் அப்படித்தான்."
பெண்களைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கும் கமலுக்கு உதவியாக தனது அலுவலகத்தில்வேலைசெய்யும்ஸ்ரீப்ரியாவை அனுப்புகிறார் ரஜினிகாந்த்.சிறு வயதுமுதலேஆண்களால்வஞ்சிக்கப்பட்டஸ்ரீப்ரியாவுக்குஆண்களைக்கண்டாலேவெறுப்பு.பெண்களைப்பற்றி ஆவணப்படம் தாயாரிக்கும்கமலையும் எள்ளி நகையாடுகிறார். ஸ்ரீப்ரியாவின் அலட்சியப்போக்கை அமைதியாக ரசித்தபடி தனது கடமையை முன்னெடுக்கிறார் கமல்.
சமூகத்தால்வஞ்சிக்கப்பட்ட,ஆண்களால்ஏமாற்றப்பட்டபெண்களைப்பராமரிக்கும் இல்லத்தை நடத்தும் பெண்மணியை கமல் பேட்டி கண்ட பாணி ஸ்ரீப்ரியாவை வெகுவாகக்கவர்ந்தது. ஆண்களால் ஏமாற்றப்பட்டு உங்கள் உங்கள் இல்லத்தில் தங்கி இருக்கும் இளம் பெண் ஒருவருக்கு உங்கள் மகனைத்திருமனம் செய்து வைப்பீர்களா என்று கமல் கேட்டதால் அதிர்ச்சியடைந்த சமூகசேவகி எரிச்சலடைந்து வெளியேறுகிறார்.அந்த ஒரே ஒரு கேள்வியின் மூலம் கமலை மதிக்கத்தொடங்குகிறார் ஸ்ரீப்ரியா. நெஞ்சில் ஈரம் இருக்கும் ஆண்களும் உலகிலிருப்பதை முதன் முதலாகக் காண்கிறார் ஸ்ரீப்ரியா.
நெற்றியில் விபூதி , கையில் மதுக்கிண்ணம் ஆகியவற்றுடன் பெண்களுக்கு வலை வீசும் ரஜினியையும், பெண்களூக்கு மதிப்புக்கொடுத்து அவர்களை உயர வைக்க விரும்பும் கமலையும் கண்டு வியப்படைகிறார் ஸ்ரீப்ரியா. எல்லோருடனும் வெடுக்கென எடுத்தெறிந்துபேசும்
ஸ்ரீப்ரியாவுக்கு கமல் புரியாத புதிராக இருந்தார்.ஸ்ரீப்ரியாவைப்பற்றி ரஜினியுடன் கமல் உரையாடியபோது ஸ்ரீப்ரியாவுக்குத்தேவை ஒரு ஆம்பளை என்கிறார் ரஜினி அதை ஏற்க மறுக்கிறார் கமல்.ஸ்ரீப்ரியாவின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பாதிப்பு இருக்கிறது. அதனால் தான் இப்படி இருக்கிறார் என கமல் கூறுகிறார்.
கமலைப்பற்றி ஓரளவுக்குத்தெரிந்தபின்னர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களைக்கூறுகிறார்ஸ்ரீப்ரியா.சிறுவயதில்வீட்டிலேதகப்பனில்லாதபோது இன்னொரு ஆணுடன் தாய் படுக்கையில் இருப்பதைப்பார்க்கிறார்.இந்த விசயம் மெல்லமெல்ல கசிந்து அயலவர்களுக்கும் தெரிய வருகிறது.ஸ்ரீப்ரியாவுடன் படிப்பவர்கள் கேலி செய்கிறார்கள்.
தாயுடன் திருட்டுத்தனமாக உறவுகொள்பவனின் பார்வை ஸ்ரீப்ரியாவின் மீது விழுகிறது. இதைப்பற்றி தகப்பனிடன் சொல்ல முடியாது தவிக்கிறார் ஸ்ரீப்ரியா.தகப்பனுக்குத்தெரிந்தபோதும் அவரால் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. வாழ்ககையில் வெறுப்படைந்த ஸ்ரீப்ரியாவை ஒருவன் காதலிக்கிறான்.தன் வாழ்க்கையில் புதியதொரு ஒளி வந்ததென நினைத்து அவன் மீது உயிரை வைக்கிறார் ஸ்ரீப்ரியா. சகோதரிகளின் எதிர்காலத்துக்காக பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து ஸ்ரீப்ரியாவை கைவிடுகிறார் காதலன்.
மனமுடைந்த ஸ்ரீப்ரியா சேர்ச்சுக்குச் செல்கிறார்.பாதிரியார் ஸ்ரீப்ரியாவை கண்டு நலம் விசாரிக்கிறார்.அப்போது பாதிரியாரின் மகன் சிவச்சந்திரன் அங்கே வருகிறார்.மூவரும் பாதிரியாரின் வீட்டுக்குச்செல்கின்றனர். சிவச்சந்திரனின் பியானோ இசை ஸ்ரீப்ரியாவுக்கு புதிய தெம்பைக்கொடுக்கிறது. அன்பு நெருக்கமாகி சிவச்சந்திரனிடம் தன்னை இழக்கிறார் ஸ்ரீப்ரியா.நடந்த சம்பவத்துக்கு வருத்தப்பட்டு மன்னிப்புக்கேட்கிறார் சிவச்சந்திரன். உன்னைத்தானே திருமணம் செய்யப்போகிறேன் ஏன் வருத்தப்படுகிறாய் என்கிறார் ஸ்ரீப்ரியா.
ஒருநாள் இரவுவீட்டிலே நடைபெற்ற கலவரத்தினால் வீட்டைவிட்டு வெளியேறிய ஸ்ரீப்ரியா சிவச்சந்திரனைத்தேடிச்செல்கிறார்.வீட்டிலே நடைபெற்ற சம்பவத்தைக்கூறி தான் இனிமேல் வீட்டுக்குப்போகப்போவதில்லை எனவும் சிவச்சந்திரனின் வீட்டில் தங்கப்போவதாகவும் கூறுகிறார் ஸ்ரீப்ரியா.இரவு சாப்பாடு எடுத்துக்கொண்டு நண்பனைப்பார்த்துவருவதாகக்கூறிச்சென்ற சிவச்சந்திரன், ஸ்ரீப்ரியாவின் தகப்பனை அழைத்து வருகிறார்.
வீட்டைவிட்டு வெளியேறிய தன் மகளை பாதுகாப்பாக ஒப்படைத்ததற்கு நன்றிகூறுகிறார் ஸ்ரீப்ரியாவின் தகப்பன். அப்போது ஸ்ரீப்ரியாவைச் சகோதரி என்கிறார் சிவச்சந்திரன்.தன்னை சகோதரி என சிவச்சந்திரன் அழைத்ததால் அதிர்ச்சியடைகிறார் ஸ்ரீப்ரியா. இரண்டு ஆண்கள் தன்னை ஏமாற்றியதால் ஆண்கள்மீது ஸ்ரீப்ரியாவுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
அலுவலகத்தில்வேலைசெய்பவர்கள்தன்னைப்பற்றி அவதூறாகப்பேசியதால் அவர்களுடன் பிரச்சினைப்படுகிறார் ஸ்ரீப்ரியா.பிரச்சினைகளுக்கு நீதான் காரணம் என ரஜினி கூறியதால் ஆத்திரமடைந்த ஸ்ரீப்ரியா வேலையை இராஜினாமாச்செய்கிறார். ஸ்ரீப்ரியா இராஜினாமாச்செய்ததைஅறிந்த கமல் அவரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் வேலையில் சேரும்படியும் ரஜினியுடன் தான் கதைப்பதாகவும் கூறுகிறார்.ரஜினியைச்சந்தித்த கமல்,ஸ்ரீப்ரியாவை மீண்டும் வேலையில் சேர்க்கும்படி கேட்கிறார். ஸ்ரீப்ரியா வேலையில் சேர்ந்து எட்டு மணி நேரமாச்சு என ரஜினி கூரியதும் அதிர்ச்சியடைகிறார் கமல்.ஸ்ரீப்ரியாவிடம் இது பற்றி கமல் கேட்டபோது போகணும்னு தோணிச்சு போனேன்.வரணும்னு தோணிச்சு வந்தேன் என அலட்சியமாகக்கூறினார்.
ஸ்ரீப்ரியாவைத்திருமணம் செய்ய கமல்விரும்புகிறார். இதேவேளை கமலுக்குத்திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. திருமணத்துக்காக ஊருக்கு வரும்படி கமலுக்கு கடிதம் வருகிறது. ஸ்ரீப்ரியாவை மணம்முடிக்கும்தனதுவிருப்பத்தைஸ்ரீப்ரியாவின்தோழியிடம்கூறியகமல்ஸ்ரீப்ரியாவுக்காகக்காத்திருப்பதாகவும்ஸ்ரீப்ரியாவரவில்லைஎன்றால்ஊருக்குப்போகப்போவதாகவும் கூறுகிறார்.
கமலை வெறுப்பேற்றுவதற்காக ரஜினியுடன் விருந்துக்குப்போகிறார் ஸ்ரீப்ரியா.விருந்திலே தனிமையில் இருக்கும் ஸ்ரீப்ரியாவை நெருங்குகிறார் ரஜினி.முதலாளி என்று பார்க்காது கன்னத்தில் அடிக்கிறார் .ஸ்ரீப்ரியா. கமலின் உண்மையான அன்பை காலதாமதமாக உணர்கிறார் ஸ்ரீப்ரியா. திருமணம் முடித்துமனைவி சரிதாவுடன் சென்னைக்குச் செல்கிறார் கமல்.
.புதுமணப்பெண் சரிதாவிடம் பெண்கள் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக்கேட்கிறார்ஸ்ரீப்ரியா. பெண்களிடம் கமல் கேட்கும் அக்கேள்விக்கு எனக்கு அதைப்பற்றி எதுவும்தெரியாது என அப்பாவியாகப்பதிலளிக்கிறார் சரிதா.
கமல்,ரஜினி,ஸ்ரீப்ரியாஆகியமூவரும்போட்டிபோட்டுநடித்தனர்.ஸ்ரீப்ரியாவின் நடிப்பு பெண் ரசிகைகளைக்கவர்ந்தது.மாப்ளே என்று கமலை அடிக்கடி கலாய்த்து தன் முத்திரையைப்பதித்தார் ரஜினி.
கமல்,ரஜினி,ஸ்ரீப்ரியா,சிவச்சந்திரன்,இந்திர,பேபி சித்ரா,குட்டி பத்மினி,சரிதா ஆகியோர் நடித்தனர்.
கண்ணதாசன் எழுதிய வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை எனும் பாடலை எஸ்.ஜானகிபாடினார்.கங்கை அமரன் எழுதிய உறவுகள் தொடர் கதை உணர்வுகள்சிறுகதை எனும் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடினார்.கங்கை அமரனின் பன்னீர் புஸ்பங்களே எனும் பாடலை கமல் பாடினார். இலையராஜாவின் இசை படத்துக்கு மெருகூட்டியது.
கதை,திரைக்கதை உரையாடல் வண்ண நிலவன்,சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா.இயக்கம்,தயாரிப்பு ருத்ரய்யா.
ரமணி
மித்திரன் 17/03/04
1 comment:
uravukal song by Jeyachandran not Jeyasudas
Post a Comment