இந்திய கிரிக்கெற் அணி பெற்ற பல வெற்றிகளுக்குக்காரணமாக இருந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான ஷேவக் கம்பீர் ஆகியோர் இல்லாது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது இந்திய கிரிக்கெற் அணி.
சச்சின், ட்ராவிட், லக்ஷ்மன், கங்குலி, ஷேவக், கம்பீர் ஆகிய அனுபவவீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி சில போட்டிகளில் தோல்வியடைந்தது.மூத்த வீரர்களின் பங்களிப்புக்குறைவடந்ததே தோல்விக்குக் காரணம் என்று டோனி வெளிப்படையாகக்கூறினார். நட்சத்திர வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்ததும்,களத்தடுப்பில் தாமதமாகச்செயல்படுவதும்தோல்விக்குக் காரணம் என டோனி கருத்துத்தெரிவித்தார்.
கங்கிலி,லக்ஷ்மன்,ட்ராவிட் ஆகியோர் ஓய்வுபெற்றதால்சச்சினும் ஓய்வுபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஒருநாள் போட்டியில் ஓய்வுபெற்ற சச்சின் டெஸ்ட்போட்டிகளில் விளையாடப்போவதாகத்தெரிவித்தார். ஷேவக்,கம்பீர், சச்சின் ஆகிய மூவரும் தொடர்ச்சியாக குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.மூவரையும் ஒரே நேரத்தில் அணியில் சேர்க்கமுடியாதுசிரமப்பட்டடோனிசுழச்சிமுறையில் ஒருவருக்கு ஓய்வுகொடுத்து இரண்டு பேருக்கு விளையாடச்சந்தர்ப்பம் கொடுத்தார் டோனி.
ஷேவக்,கம்பீர் ஆகிய இருவரும் அண்மைக்காலமாகப் பிரகாசிக்கவில்லை.அவுஸ்திரேலியாவுக்குஎதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.கம்பீருக்குப்பதிலாக முரளி விஜய் ஆரம்பத்துடுப்பாட்டவீரராகக் களமிறங்கினார்.தேர்வாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய விஜய் தனது இடத்தைத்தக்கவைத்துள்ளார்.ஷேவக்கின்மீது நம்பிக்கை இழந்த தேர்வாளர்கள் எஞ்சிய இரண்டுபோட்டிகளுக்கு ஷேவக்கைத்தேர்வுசெய்யவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது நான்காவது போட்டிகளுக்கான வீரர்களின்பட்டியலைவெளியிட்ட இந்திய தேர்வுக்குழு ஷேவக்கின் பெயரை நீக்கி 14 வீரர்களின் பெயரை வெளியிட்டது.
ஷேவக்கின் பெயரை நீக்கிய தேர்வுக்குழு அவருக்குப்பதிலாக இன்னொருவரின் பெயரை சேர்க்கவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பரீட்சார்த்தமாக் ஒரு வீரரை ஆரம்பத்துடுப்பாட்ட வீரரொருவரைகளமிறக்க இந்தியா முடிவெடுத்துள்ளதுஅந்த வீரர் சிறப்பாகச்செயற்பட்டால் ஷேவக் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலை எற்படும்.
இந்திய அணியின் ஆரம்பத்துடுப்ப்பாட்டவீர
ர்களான ஷேவக், கம்பீர் ஜோடி 87 இன்னிங்ஸ்களில் விளையாடி4412 ஓட்டங்களைக்குவித்துள்ளது.இவர்களது அசராசரி 52.25 ஆகும்.சிறந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் இந்த ஜோடி 5ஆவது இடத்தில் உள்ளது.எதிரணி பந்து வீச்சாளர்களூக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இவர்கள்விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என எதிரணி ரசிகர்கள் வேண்டுதல் செய்வார்கள்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் விளையாடிய ஷேவக் 27 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.2011 ஆம் ஆண்டு சதமடித்தபின்னர் ஷேவக் சிறப்பாக விளையாடவில்லை.2004 ஆம் ஆண்டு கங்குலியின் பரிந்துரையின் பிரகாரம் ஆரம்பத்துடுப்பாட்டவீரராகக்களமிறங்கினார் ஷேவக்.
மத்தியதரவரிசை வீரரான ஷேவக்கை ஆரம்பத்துடுப்பாட்டவீரராக அறிமுகப்படுத்தினார் கங்குலி. கும்ப்ளே அணித்தலைவராக இருந்தபோது அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷேவக் மீண்டும் திரும்பிவந்து அடிலெய்ட்டில் 151 ஓட்டங்கள் அடித்து டெஸ்ட்போட்டியைச் சமப்படுத்தினார்.அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ஷேவக்.
டுலீப் ட்ராபியில் ஒரு சதமும்,அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப்போட்டியில்63 ஓட்டங்களும் எடுத்த தவான் மீது தேர்வுக்குழுவின் பார்வை விழுந்துள்ளது. விஜயும்தவானும் பல போட்டிகளில் இணைந்து விளையாடியதும்,இடது வலது கைதுடுப்பாட்ட வீரர்களாக இருப்பதும்சாதகமாக உள்ளது.விஜயும் ,தவானும் சாதித்தால் ஷேவக் மத்தியவரிசை வீரராக களம் இறங்குவார். அல்லது டெஸ்ட் போட்டிக்கான கதவைத்தட்டும் ரெய்னா நுழைந்து விடுவார்.
சென்னை, ஹைதராபாத் மைதானங்கள் சுழல் பந்து வீச்சாளர்களின் சொர்க்காபுரியாக இருந்தன.துடுப்பாட்ட வீரர்களும் சோடைபோகாது தமது திறமையை வெளிப்படுத்தினர். அஸ்வின் 18,ஜடேஜா 11,ஹர்பஜன் 5,மக்வெல்ஸ், லயன் தலா 4,தோகட்டி மூன்று விக்கெற்களை வீழ்த்தியுள்ளனர். மூன்றாவது போட்டி நடைபெறும் மொகாலி மைதானம் துடுப்பாட்டம் பந்துவீச்சு ஆகியவற்றுக்குச் சாதகமாக இருக்கும் என மொகாலி மைதான பராமரிப்பாளர் கூறியுள்ளா
அவுஸ்திரேலிய அணியை எப்படி வீழ்த்தலாம் என இந்திய அணியின் பயிற்சியாளரும் வீரர்களும் தலையைப்பிச்சுக்கொண்டிருக்கையில் உப தலைவர் ஷேன் வட்சன், பெட்டிசன்.ஜோன்சன்,சுவாஜா ச்ச்கிய வீரர்கலை அணியிலிருந்து வெளியேற்றி அதிர்ச்சி அளித்துள்ளது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்ல என்ன செய்யவேன்டும் என வீரர்களிடம் பயிற்சியாலர் ஆலோசனை கேட்டுள்ளார்.வட்சன்,பெற்றிசன் ஜோன்சன்,சுவாஜா ஆகிய நான்கு வீரர்களுமாலோசனை வழங்காது பயிற்சியாளரின் ஆலோசனையைப்புறக்ணித்தனர்.ஆகையால் நான்கு வீரர்களும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இது அவுஸ்திரேலியாவுப்புப்பின்னடைவையும் இந்தியாவுக்கு தெம்பையும் அளித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் நால்வர் வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தியத் தொடருக்குப்பின்னர் இப்பிரச்சைனை விஸ்வரூபம் எடுக்கும்.
No comments:
Post a Comment