Wednesday, March 20, 2013

புதிய சாதனைகளூடன் இந்தியா வெற்றிஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்களினால் வெற்றி பெற்ற இந்தியா சாதனை படைத்துள்ளது.

  இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ஷேவக், கம்பீர் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு முரளி விஜய், ஷிகார் தவான் ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக்களம் இறங்கினர்.இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஷேவக், கம்பீர் இருவரும் இல்லாத நிலையில் புதிய வீரர்கள் இருவரும் எப்படி முகம் கொடுப்பார்கள் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது. அனுபவ வீரர் ஒரு முனையில் நிற்கும்போது, அவரின் வழி காட்டலோடு அறிமுக வீரர் மறு முனையில் களம் இறங்குவதே வழமையான நடை முறை.அனுபவம் இல்லாத முரளி விஜயுடன் ஜோடி சேர்ந்த தவான் தயக்கம் எதுவும் இன்றி அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்கலைப் பந்தாடினார்.
  டோனி வ‌குத்த‌ வியூக‌த்தை விஜ‌யும் த‌வானும் க‌ன‌க‌ச்சித‌மாக‌ நிறைவேற்றின‌ர். விஜ‌யுட‌ன் இணைந்தும் த‌னியாக‌வும் ப‌ல‌ சாத‌னைக‌ளைப்ப‌டைத்துள்ளார் அறிமுக‌வீர‌ர் த‌வான். ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு  எதிராக‌க் க‌ள‌ம் இற‌ங்கிய‌ த‌வான், டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டியில் அறிமுக‌மானார். விஜய் ப‌ந்தை எதிர் பார்த்திருக்க‌ ப‌ந்து வீச்சாள‌ரின் முனையில் நின்ற‌ த‌வான் ஓட்ட‌மெடுக்க‌த்த‌யாரானார். ப‌ந்து ந‌ழுவி விக்கெற்றில் விழுந்த‌து. அப்போது த‌வான் கிரிஸுக்கு வெளியே நின்றார். த‌வான் ஆட்ட‌மிழந்த‌தால் அர‌ங்க‌மே அமைதியான‌து.அவுஸ்திரேலிய‌ அணித்த‌லைவ‌ர் கிளாக் அத‌னைப்பெரிது ப‌டுத்தாது ஆட்ட‌மிழ‌ப்பைக்கோர‌வில்லை.கிளாக்கின் பெருந்த‌ன்மைக்கு த‌ன‌து துடுப்பால் ப‌தில‌டி கொடுத்தார் த‌வான்.   
  டெஸ்ட் தொப்பியை சச்சினிடமிருந்து பெற்றதை பெருமையாகக்கருதுகிறார் தவான்.த‌வானின்ம‌னைவிமுக‌ர்ஜீபெங்காலியைச்சேர்ந்த‌வ‌ர்,ஆங்கிலேய‌ப்பெற்றோருக்குப்பிற‌ந்த‌ முக‌ர்ஜீ அவுஸ்திரேலிய‌க்குடிஉரிமை பெற்று அங்கு  வ‌சிகிறார்.
 விஜ‌ய், த‌வான் ஜோடி முத‌ல் விக்கெற் இணைப்பாட்ட‌த்தில் 287 ஓட்ட‌ங்க‌ள் பெற்று சாத‌னை ப‌டைத்த‌து.க‌வாஸ்க‌ர், சேட்ட‌ன் ச‌வுகான் ஜோடி மும்பை‌யில் அடித்த‌ 192 ஓட்ட‌ங்க‌ளைமுறிய‌டித்த‌துஇந்த‌ஜோடி.மொகாலியில்இங்கிலாந்துக்கு எதிரான‌ டெஸ்ட் போட்டியில் க‌ம்பீர் அடித்த‌ 179 அதி கூடிய‌ ஓட்ட‌ங்க‌ளை முறிய‌டித்த த‌வான் 187 ஓட்ட‌ங்க‌ள் எடுத்தார்.
  சாத‌னைக‌ளின் சொந்த‌க்கார‌ரான‌ ச‌ச்சின் மொகாலிமைதான‌த்திலும்புதிய‌ சாத‌னை ஒன்றை நிலை நாட்டியுள்ளார்.மொகாலியில் ஒன்ப‌து போட்டிக‌ளில் விளையாடிய‌ ட்ராவிட் 735 ஓட்ட‌ங்க‌ள் அடித்தார்.  11 போட்டிக‌ளில் விளையாடிய‌ ச‌ச்சின் 777 ஓட்ட‌ங்க‌ள் அடித்து அச்சாத‌னையை முறிய‌டித்தார்.அவுஸ்திரேலியாவுக்கு  எதிரான‌ 81 வ‌ருட‌ கால‌ டெஸ்ட் போட்டியில் 3 -0 முன்னிலை பெற்ற இந்தியா சாத‌னை செய்துள்ள‌து. 
1993 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக‌வும், 1994 ஆம் ஆண்டு இல‌ங்கைக்கு எதிராக‌வும் அஸாருதீன் த‌லைமையிலான‌ இந்திய‌ அணி 3- 0 க‌ண‌க்கில் வெற்றிபெற்று சாத‌னை புரிந்த‌து. அச்சாத‌னையை டோனி ச‌ம‌ப்ப‌டுத்தியுளார். நான்காவ‌து டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றால் டோனி புதிய‌ச‌த‌னை படைடிப்பார்ர்.

  மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பித்தபோது நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 408 ஓட்டங்களெடுத்தது.சிமித் 92ஓட்டங்களிலும் ஸ்ரொட் 99 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்து சத‌த்தைத்தவறவிட்டனர். இஷாந் சர்மா ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெற்களையும்,அஸ்வின், ஓஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களையும் வீழ்த்தினர். 
 இந்திய அணி முதல்இன்னிங்ஸில்499ஓட்டங்கள்எடுத்தது.ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான விஜயும், தவானும் அவுஸ்திரேலிய வீரர்களைத்துவம்சம் செய்தனர்.தவான் 187,87 பந்துகளில் சதம் அடித்த அறிமுக வீரர் என்ற சாதனை செய்தார்.விஜய் 153,டோனி76,சச்சின் 37 ஓட்டங்கள் அடித்தனர்.சிடில் ஐந்து விக்கெற்களையும், ஸ்ரொட் இரண்டு விக்கெற்றையும்ரெக்கியூஸ்,சிமித்,லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெற்களையும் வீழ்த்தினர்.
 இர‌ண்டாவ‌து இன்னிங்சில் க‌ள‌ம் இற‌ங்கிய‌ அவுஸ்திரேலியா 233 ஓட்ட‌ங்க‌ளில் ஆட்ட‌ம் இழ‌ந்த‌து.புவ‌னேஸ்குமார்,ஜ‌டேஜா ஆகியோர் த‌லா மூன்று விக்கெற்க‌ளையும் அஸ்வின் ,ஓஜா ஆகியோர் த‌லா இர‌ண்டு விக்கெற்களைலையும் வீழ்த்தின‌ர்.
 133 ஓட்ட‌ வெற்றி இல‌க்குட‌ன் க‌ள‌ம் இற‌ங்கியா இந்தியா மூன்று விக்கெற்க‌ளை இழ‌ந்து 136 ஓட்ட‌ங்க‌ள் எடுத்து  வெற்றி பெற்ற‌து. எதிர‌ணியின் முன் வ‌ரிசை வீர‌ர்க‌ளை மிக‌ விரை‌வாக‌ வெளியேற்றும் இந்திய‌ வீர‌ர்க‌ள் க‌டைசி வ‌ரிசை வீர‌ர்க‌ளை வெளியேற்ற‌ சிரம‌ப்ப‌ட்ட‌ன‌ர்.அவுஸ்திரேலியாவின் இறுதி ஜோடி 65 நிமிட‌ங்க‌ள் க‌ள‌த்தில் நின்று 18.4 ஓவ‌ர்க‌ளைச்ச‌ந்தித்து 44 ஓட்ட‌ங்க‌ள் எடுத்த‌து.
  இல‌குவான வெற்றி இல‌க்குட‌ன் க‌ள‌ம் இற‌ங்கிய‌ இந்தியா ச‌ற்று சிர‌ம‌ப்ப‌ட்டே  வெற்றி பெற்ற‌து.த‌வான் காய‌ம‌டைந்த‌தால் விஜ‌யுட‌ன் ஆர‌ம்ப‌த்துடுப்பாட்ட‌வீர‌ராக‌ புஜாரா க‌ள‌ம் இற‌ங்கினார்.விஜ‌ய் 26 ,புஜாரா 28, கோக்லி 38, ச‌ச்சின் 21 ஓட்ட‌ங்க‌ளில் ஆட்ட‌ம் இழ‌ந்த‌ன‌ர்.17 ப‌ந்துக‌ளில் 24 ஓட்ட‌ங்க‌ள் அடிக்க‌வேண்டிய‌ போது ச‌ச்சின் ஆட்ட‌ம் இழ‌ந்தார்.டோன்மியின் ம‌ந்த‌மான‌ விளையாட்டு ர‌சிக‌ர்களை வெறுப்பேற்றிய‌து. ஜ‌டேஜா அடுத்த‌டுத்து இர‌ண்டு ப‌வுண்ட‌ரிக‌ளும் டோனி தொட‌ர்ச்சியாக‌ மூன்று ப‌வுண்ட‌ரிக‌ளும் அடித்து வெற்றியை உறுதி செய்த‌ன‌ர்.

  ஆட்ட‌நாய‌க‌னாக‌ த‌வான் தேர்வு செய்ய‌ப்ப‌ட்டார். க‌வாஸ்க‌ர் போட‌ர் கிண்ண‌த்தை தொட‌ர்ந்து மூன்றாவ‌து முறைய‌க‌ இந்தியா கைப்ப‌ற்றிய‌து. 2008/09,2010/11 ஆம் ஆண்டுக‌ளும் இந்தியா கிண்ண‌‌த்தை வென்ற‌து.

இந்தியாவின் டெஸ்ட் வெற்றியை ர‌சிக‌ர்க‌ள் ம‌கிழ்ச்சியாக‌க்கொண்டாடிய‌ வேளையில் பிளெட்ச‌னின் ஒப்பந்த‌த்தை மேலும் ஒருவ‌ருட‌ம் நீடித்து அத்கிர்ச்சிய‌ளித்துள்ள‌து இந்திய‌ கிரிக்கெற் க‌ட்டுப்பாட்டுச்ச‌பை.உல‌க‌க்கிண்ண‌த்தை வென்று இந்திய‌ அணி  உச்ச‌த்தில் இருந்த‌வேளையில் பிளெச்ச‌ர் ப‌யிற்சியாள‌ராக‌ நிய‌ம‌ன‌ம் பெற்றார்.  10 போட்டிக‌ளில் தோல்விய‌டைந்த‌து.  பிளெட்ச‌ரின் ஒப்ப‌ந்த‌ம் நீடிக்க‌ப்ப‌ட‌மாட்டாதென்றே அனைவ‌ரும் எதிர்பார்த்த‌ன‌ர். ஜூலையில் ந‌டைபெற‌ உள்ள‌ ச‌ம்பிய‌ன் கிண்ண‌ப் போட்டியை‌க்க‌ருத்தில் கொண்டே பிளெட்ச‌ருக்கு மேலும் ஒரு வ‌ருட‌ நீடிப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

  புதிய‌ ப‌யிற்சியாள‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டால் வீர‌ர்க‌ளை அவ‌ர் புரிந்துகொள்வ‌த‌ற்கு கால‌ அவ‌காச‌ம் போதாது என்ற‌ கா‌ர‌ண‌த்துக்காக‌வே  பிளெட்ச‌ர்க்கு மீண்டும் வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப்ட்டுள்ள‌து.இத‌ன் பின்ன‌ணியிலும் டோனி இருப்ப‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டுகிற‌து.
ஹர்பஜனுக்கு கெüரவம்!

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த ஹர்பஜன் சிங் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கெüரவிக்கப்பட்டார்.
  3-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்ட உணவு இடைவேளையின்போது இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலர் எம்.பி.பாண்டோவ், ஹர்பஜனுக்கு சால்வை அணிவித்ததோடு, வெள்ளித் தட்டையும் பரிசாக வழங்கினார்.

போட்டித் துளிகள்..

* இந்தப் போட்டியில் 187 ரன்கள் குவித்ததன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 6-வது இடத்தைப் பிடித்தார் ஷிகர் தவன்.

* அறிமுகப் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் ஷிகர் தவன். 1987-ல் கொழும்பில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் பிரென்டன் குருப்பூ ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் குவித்ததே, அறிமுகப் போட்டியில் தொடக்க வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் ஆகும்.

* அறிமுகப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை தவன் பெற்றுள்ளார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது முறையாக 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் முரளி விஜய். டெஸ்ட் போட்டியில் விஜய் அடித்த 3 சதங்களுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவையாகும்.

* இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவன் ஆகிய இருவருமே 150 ரன்களுக்கு மேல் குவித்தனர். டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்கள் இருவரும் 150 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 114-வது முறையாகும். இந்திய வீரர்கள் 2-வது முறையாக இந்த சாதனையை செய்துள்ளனர். முன்னதாக 1955-56-ல் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர்கள் வினு மன்கட் 231, பங்கஜ் ராய் 173 ரன்கள் எடுத்துள்ளனர்.

* ஆஸ்திரேலியாவின் பீட்டர் சிடில் டெஸ்ட் போட்டியில் 7-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாட்டு மண்ணில் 2-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. நான்காவது முறையாக, ஒரு தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முன்னதாக நியூசிலாந்து (3-1, 1968), இங்கிலாந்து (3-0, 1993), இலங்கை (3-0, 1994) அணிகளுக்கு எதிராக இச்சாதனை படைத்தது.
* இந்தியாவுக்கு எதிரான "ஹாட்ரிக்' தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி, சுமார் 25 ஆண்டுகளுக்கு பின், ஒரு டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டியில் தோல்வி அடைந்தது. கடைசியாக 1988-89ல் சொந்த மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. பின் நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, கடைசி போட்டியை "டிரா' செய்தது.

மொகாலி டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான், அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற 4வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக பிரவீண் ஆம்ரே, ஆர்.பி. சிங், அஷ்வின் ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், இத்தொடரில் 5வது முறையாக ரவிந்திர ஜடேஜாவின் "சுழலில்' அவுட்டானார். இதன்மூலம் கிளார்க்கை அதிக முறை அவுட்டாக்கிய இந்திய பவுலர்கள் வரிசையில் 3வது இடத்தை ஜாகிர் கானுடன் (5 முறை) பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடத்தில் இஷாந்த் சர்மா (7 முறை), அனில் கும்ளே (6 முறை) ஆகியோர் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணி, 13வது முறையாக முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் எடுத்து தோல்வி அடைந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தலா 5 முறை தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் (2 முறை), தென் ஆப்ரிக்கா (ஒரு முறை) அணிகளுக்கு எதிராகவும் இதுபோன்ற தோல்வியை சந்தித்தது.
  இந்திய அணி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய கடைசி 6 போட்டியிலும் வெற்றி பெற்றது. கடைசியாக விளையாடிய 10 போட்டியில் ஒரு முறை கூட தோல்வி அடையவில்லை. எட்டு போட்டியில் வென்ற இந்தியா, 2 போட்டியை "டிரா' செய்தது. 

No comments: