Wednesday, March 6, 2013

இந்தியாவா இது?



 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றதன் மூலம் இழந்தெ ப்ந்ருமையை மீண்டும் பெற்றுள்ளது இந்திய கிரிக்கெற் அணி.  அவுஸ்திரேலியாவிலும்,இங்கிலாந்திலும், இந்தியாவிலும் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த இந்தியாவை புரட்டிப்போடலாம் என்ற நம்பிக்கையுடன் களம் புகுந்த அவுஸ்திரேலியாவைப்புரட்டிப்போட்டது இந்தியா.

  சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இனிங்ஸ் வெற்றி பெற வேண்டிய இந்தியாவை தனது துடுப்பாட்டத்தின் முலம் தாமதப்படுத்தினார் ஹின்றிகுயிஸ்.  சென்னையில் போராடிய அவுஸ்திரேலியா ஹைதராபாத்தில் போராடும் என எதிர் பார்க்கப்பட்டது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. அஸ்வின்‌ வீர‌ர்க‌ளை நிலைகுலைய‌ வைத்தார். ஒன்ப‌து விக்கெற்க‌ளை இழ‌ந்து 237 ஓட்ட‌ங்க‌ள் எடுத்த‌ நிலையில் ஆட்ட‌த்தை நிறுத்திக்கொண்டு இந்தியாவை விளையாடும்ப‌டி ப‌ணித்தார் அவுஸ்திரேலிய‌ அணீத்த‌லைவ‌ர் கிளாக்.

   முத‌ல் நாளில் ஐந்து ஓவ‌ர்க‌ள் பாக்கியுள்ள‌ நிலையில் அவுஸ்திரேலியா ஆட்ட‌த்தை நிறுத்திய‌து ர‌சிக‌ர்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌த்தை ஏற்ப‌டுத்திய‌து.முத‌ல் நாள் ஆட்ட‌த்தை முடிப்ப‌த‌ற்கிடையில் ஒரு விக்கெற்றை‌ வீழ்த்த‌வேண்டும், இந்திய‌ அணியை 230 ஓட்ட‌ங்க‌ளுக்குள் சுருட்ட‌வேன்டும் என்ற‌ கிளாக்கின் திட்ட‌ம் த‌விடுபொடியான‌து. முர‌ளிவிஜ‌யும் புஜாராவும் எழுச்சி பெற்று அவுஸ்திரேலிய‌ ப‌ந்துவீச்சாள‌ர்க‌ளை துவ‌ம்ச‌ம் செய்த‌ன‌ர். புஜாரா 204 ,விஜை 167 ஓட்ட‌ங்க‌ள் எடுத்து ந‌ம்பிக்கையூட்டின‌ர்.த‌லைவ‌ர் ப‌த‌வியிலிருந்து டோனியை நீக்க‌வேண்டும். ச‌ச்சினின் ப‌வ‌ர் அவ்வ‌ள‌வுதான் என்ற‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் வாய‌டைத்துவிட்ட‌ன‌ர்.  
க‌ம்பீர் நீக்க‌ப்ப‌ட்டு முர‌ளி விஜய் ஆர‌ம்ப‌த்துடுப்பாட்ட‌வீர‌ராக‌க் க‌ள‌மிற‌ங்கினார்.கொடுத்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை விஜய்  ச‌ரியாக‌ப்ப‌ய‌ன்ப‌டுத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான புஜாராவும் தமிழகத்தின் முரளி விஜய்யும் சரித்திரம் பேசக் கூடிய சாதனைகளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நிகழ்த்தியிருக்கின்றனர்.
தமிழக வீரரான முரளி விஜய் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும் விளையாடாமலேயே இருந்து வந்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் க‌ம்பீர் நீக்கப்பட்டு தொடக்க வீரராக சேவாக்குடன் களம் இறக்கப்பட்டார் முரளி விஜய். சென்னை டெஸ்ட் போட்டியில் சோபிக்கவில்லை முரளி. சொற்ப ரஓட்டங்களில்ஆட்டமிழந்தார் புஜாராவைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக்குரிய இளம் வீரர். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் முரளி விஜய்யுடன் சேர்ந்தும் தனித்தும் ஹைதராபாத்தில்    சாதனை செய்துள்ளார்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டும் விவிஎஸ் லஷ்மணும் இணைந்து 376 ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.அதன் பின்னர் தற்போது ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் புஜாரா, முரளி விஜய் ஜோடி 370 ரஓட்டங்களைக்  குவித்திருக்கிறது
இதற்கு முன்னதாக 1956-ம் ஆண்டு சென்னையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வினோ மன்கட்டும் பங்கஜ் ராயும் இணைந்து 413 ஓட்டங்களைக்  குவித்ததுதான் இதுவரையிலான இந்திய அணியின் சாதனையாக இருக்கிறது. இதன் பின்னர் 2006-ம் ஆண்டு லக்னோவில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராகுல் டிராவிட்டும் சேவாக்கும் இணைந்து 410 ஓட்டங்களைக்  குவித்திருந்தனர்.
இந்திய அணியில் மிகக் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிரடியாக ஆயிரம் ஓட்டங்களைத்தொட்ட   வீரர்களில் மூன்றாம் இடத்தை  பெற்றிருக்கிறார் புஜாரா.

சுனில் கவாஸ்கர் 21 இன்னிங்ஸ் விளையாடி 1,000 ஓட்டங்களையும் வினோத் கம்ப்ளி 14 இன்னிங்ஸ் விளையாடி 1,000 ஓட்டங்களையும் எட்டினர். இவர்களுக்கு அடுத்தபடியாக புஜாரா 18 இன்னிங்ஸ்கள் விளையாடி 1,000 ஓட்டங்களை எட்டி சாதித்திருக்கிறார்.

கங்குலியை முந்தியடோனி
ஹைதராபாத்தில் வென்றதன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் டோனி (45 டெஸ்ட், 22 வெற்றி). இவர் முன்னாள் கப்டன் கங்குலியை (49 டெஸ்ட், 21 வெற்றி) முந்தினார்.

முதல் வீரர் 
அவு ஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கை (91, 16), இரண்டு இன்னிங்சிலும் "போல்டாக்கிய' முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் ஜடேஜா. இதற்கு முன் கடந்த, 2009ல் கேப்டவுனில் நடந்த டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டைன், கிளார்க்கை, இரண்டு இன்னிங்சிலும் "போல்டாக்கினார்'. 
* இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் ஜடேஜா (3, 3 விக்கெட்) டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார்.
முதல் இந்தியர் 
இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் அஸ்வின், டெஸ்ட் அரங்கில் எட்டாவது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது முறையாக இம்மைல்கல்லை எட்டினார்.
* தவிர, 14 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் (81 விக்கெட்) கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் அஸ்வின். சர்வதேச அரங்கில் மூன்றாவது வீரர் என்ற சாதனை படைத்தார். இங்கிலாந்தின் ரிச்சர்ட்சன் (14 டெஸ்ட், 88 விக்கெட்), அவு ஸ்திரேலியாவின் டர்னர் (14 டெஸ்ட், 83 விக்கெட்) ஆகியோர் முதல் இரண்டு இரண்டு இடங்களில் உள்ளனர். 
* இத்தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் அஸ்வின் (18 விக்கெட்) முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா (11 விக்கெட்) இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இரண்டாவது சிறந்த வெற்றி
இரண்டாவது டெஸ்டில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது இரண்டாவது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1998ல் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 219ஓட்டங்ககள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
* சர்வதேச அரங்கில் இந்தியாவின் 6வது சிறந்த வெற்றி இது. கடந்த 2007ல் பங்களாதேஷுக்கு எதிராக தாகாவில் நடந்த டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ், 239 ஓட்டங்ககளில் இந்தியா வென்றது. 
4வது முறை 
அவு ஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி, ஐதராபாத் (இன்னிங்ஸ்,135 ஓட்டங்கள் 2013), கோல்கட்டா (இன்னிங்ஸ், 219 ஓட்டங்கள் 1998), மும்பை (இன்னிங்ஸ், 100 ஓட்டங்கள் 1979), சிட்னி (இன்னிங்ஸ், 2 ஓட்டங்கள் 1978) என நான்காவது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் 131 ஓட்டங்களுக்கு "விக்கெற்களையும் இழந்த‌ அவு ஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில், தனது 5வது மோசமான டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 2004ல் மும்பையில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 93 ஓட்டங்களுக்கு "ஆல் அவுட்டானது'. 
* தவிர, இந்திய அணிக்கு எதிராக 7வது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1981ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் அவு ஸ்திரேலிய அணி 83 ஓட்டங்களுக்குவிக்கெற்களையும்' இழந்த‌து;

.  ரன் "மிஷின்' புஜாரா
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில், 204 ஓட்டங்களைக்  குவித்து அணியின்  ஓட்ட எண்ணிக்கை  உயர முக்கியக் காரணமானார் சேதேஷ்வர் புஜாரா. டெஸ்ட் போட்டியில் அவர் தனது 2-வது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்ததுடன், விரைவாக ஆயிரம் ஓட்டங்களைக்  கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 18 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரஓட்டங்களைக்  கடந்தார். வினோத் காம்ப்ளி, 14 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ஓட்டங்களைக்  கடந்ததே இந்திய வீரர்கள் மத்தியில் இன்றளவும் சாதனையாக உள்ளது. அவு ஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதமடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் புஜாரா பெற்றார்.

34  ஆண்டு சாதனை முறியடிப்பு
ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் விஜய்-புஜாரா ஜோடி 2-ம் விக்கெட்டுக்கு 370ஓட்டங்கள் எடுத்தது. இதனால், 34 ஆண்டுகளுக்கு முன்பு (1978) மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சுநீல் கவாஸ்கர் (182), திலீப் வெங்சர்க்கர் (157) ஜோடி 2-ம் விக்கெட்டுக்கு 344 ஓட்டங்கள் எடுத்த சாதனையை இந்த ஜோடி முறியடித்தது. எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லட்சுமன், திராவிட் ஜோடி எடுத்த 376 ரஓட்டங்கள்  முறியடிக்க முடியவில்லை.

போட்டித் துளிகள்
* டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் தனது அதிக பட்சஓட்டங்களை (162) இப்போட்டியில் பதிவு செய்தார். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக 139 ஓட்டங்களைக்கள் எடுத்திருந்தார்.

* இந்த ஆட்டத்தில் சச்சின் வெறும் 7 ஓட்டங்களே எடுத்திருந்தாலும் அவரும் ஒரு சாதனை புரிந்திருந்தார். 3-ம் விக்கெட்டாக களமிறங்க பெவிலியனில் சச்சின் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததுவே அந்த சாதனையாகும்.

* இப்போட்டியில் கோலி 34ஓட்டங்களைகள் எடுத்திருந்தபோது, ஆயிரம்ஓட்டங்களைக்  கடந்தார். அவர் 16 டெஸ்டில் விளையாடி இந்த ஓட்டங்களைகளை எடுத்தார்

No comments: