Friday, March 1, 2013

வலையில் விழுந்த வேட்டைக்காரன்


சத்தியமங்கலம், மாதேஸ்வர காட்டுப்பகுதியில் தமிழக,கர்நாடக அதிரடிப்படைகளை அச்சுறுத்தி வந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் தமிழக அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதால் இரண்டு மாநிலங்களும் நிம்மதிப்பெரு மூச்சு விட்டுள்ளன.

  சந்தனக்கடத்தல் வீரப்பன்,சேத்துக்குளி கோவிந்தன்,சேதுமணி,சந்திர கெளடா ஆகிய நான்கு பேரையும் தமிழக அதிரடிப்படைத்தலைவர் விஜயகுமார் தலைமையிலான குழு திட்டமிட்டு காட்டுக்கு வெளியே வரவழைத்து சுட்டுக்கொன்றுள்ளது.

  யானையை வேட்டையாடும் வீரப்பனின் வேட்டையில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழக கர்நாடக அதிரடிப்படைகள் ஈடுபட்டன. இரண்டு மாநில அதிரடிப்படைகளுக்கும் தண்ணிகாட்டிய வீரப்பனின் அட்டகாசத்தை அடக்கி ஒடுக்கஎடுக்க‌ப்ப‌ட்ட‌முய‌ற்சிக‌ள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்த‌ன‌.

  வீரப்‌ப‌னின் முத‌ல்வேட்டை சிறு வ‌ய‌திலேயே ஆர‌ம்பித்து விட்ட‌தாக‌வும் சிறுவ‌ய‌திலேயே த‌ந்த‌த்துக்காக‌ யானையைக்கொன்றதே முதல்,வேட்டைஎன‌வும், சுமார் 300 யானைக‌ளை வீர‌ப்ப‌ன் சுட்டுக்கொன்றிருப்ப‌தாக‌வும் சில‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.
 
1984 ஆம் ஆண்டு நான்குக‌ர்நாட‌க‌ வ‌ன‌த்துறை அதிகாரிக‌ளை வீர‌ப்‌ப‌ன் சுட்டுக்கொலை செய்த‌தே முத‌ல் கொலை. என்றாலும், 1987 ஆம் ஆண்டு ச‌த்திய‌ம‌ங்க‌ல‌ வ‌ன‌த்துறை அதிகாரியான‌ சித‌ம்ப‌ர‌த்தை வீர‌ப்ப‌ன் சுட்டுக்கொலை செய்த‌பின்ன‌ரே வீரப்‌ப‌ன் ப‌ற்றிய‌ அச்ச‌ம் அதிகாரிக‌ள் ம‌த்தியில் எழுந்த‌து.

  ந‌ம்பிக்கையான‌ ஒருசில‌ரின் துணையுட‌ன் வீர‌ப்ப‌ன் த‌லைம‌றைவாக‌ இருந்த‌போது வீர‌ப்ப‌னைப்பிடிக்கும் ப‌ணி தீவிர‌மான‌து. வீர‌ப்பனுக்கு உத‌வி செய்த‌வ‌ர்க‌ள் சித்திர‌வ‌தை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். அதிர‌டிப்ப‌டைவீர‌ர்க‌ளால் பெண்க‌ளில் ப‌ல‌ர் பாலிய‌ல்வ‌ல்லுற‌‌வுக்குட்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தாக‌ ம‌னித‌ உரிமைக‌ள் ஆணைக்குழு குற்ற‌‌ம் சாட்டிய‌து.  வீரப்‌ப‌னுக்கு அவ்வ‌ப்போது உத‌விவ‌ந்த‌ நூற்றுக்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் க‌ர்நாட‌க‌த்திலும் த‌மிழ‌க‌த்திலும் சிறை வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். த‌ன‌க்கு வேண்டிய‌வ‌ர்க‌ளை க‌ர்நாட‌க‌,த‌மிழ‌க‌ அதிர‌டிப்ப‌டையின‌ரால் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாலும் சித்திர‌வ‌தை செய்ய‌ப்ப‌ட்ட‌தாலும் சீற்ற‌ம‌டைந்த‌ வீரப்‌ப‌ன் உள‌வாளிக‌ளைக்கொலை செய்தான்.


  பொலிஸாருக்கும் வீர‌ப்ப‌னுக்கும் இடையில் ந‌ட‌ந்த‌ நேர‌டி மோத‌லில் இரு ப‌குதியிலிம் ப‌ல‌ர் உயிரிழ‌ந்த‌ன‌ர். பொலிஸாரினால் வீர‌ப்‌ப‌னைப்பிடிக்க‌முடியாதென‌ உண‌ர்ந்ததமிழக முதல்வர்ஜெய‌ல‌லிதா அதிர‌டிப்ப‌டையைக‌ள‌த்தில் இற‌க்கினார்.தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌பொலிஸார் சிற‌ப்புப்ப‌யிற்சிக‌ளின் பின்ன‌ர் அதிர‌டிப்ப‌டையில் இணைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அதேபோன்றே க‌ர்நாட‌க‌ அர‌சும் த‌ன் ப‌ங்குக்கு அதிர‌டிப்ப‌டையை உருவாக்கிய‌து.

 அதிரடிப்ப‌டையின‌ரின் கிடுக்கிப்பிடியினால் வீர‌ப்ப‌னுக்கு உத‌வி செய்த‌வ‌ர்க‌ள் பெரும் துன்ப‌த்தை அனுப‌வித்த‌ன‌ர்.த‌ன‌க்கு உத‌விசெய்த‌வ‌ர்க‌ளைத்துன்புறுத்திய‌ பொலிஸாரையும் வ‌ன‌த்துறை அதிகாரிக‌ளையும் வீரப்‌ப‌ன் தேடிச்சென்று ப‌ழிவாங்கினான்.வீர‌ப‌ப‌னுக்கு உத‌வி செய்த‌வ‌ர்க‌ள்மீது டி.எஸ்.பி சித‌ம்ப‌ர‌நா‌த‌ன் க‌டுமையான‌ சித்திர‌வ‌தை செய்தார்.சித‌ம்ப‌ர‌நாத‌னைப்பிடித்த‌ வீர‌ப்‌ப‌ன் அவ‌ர‌து த‌லையை வெட்டி எடுத்துச்சென்று காட்டிலே புதைத்தான்.
இந்த‌ச்செய‌ல் பொலிஸார்மீது வீர‌ப்ப‌னுக்கு இருந்த‌ கோப‌த்தை வெளிக்காட்டிய‌ அதேவேளை வீர‌ப்‌ப‌னைக்கொல்ல‌வேண்டும் என்ற‌வெறியை பொலிஸாருக்கு ஊட்டிய‌து.


  வீரப்‌‌ப‌னின் த‌ம்பி அர்ஜுனைப் பொலிஸார் விசார‌னை செய்த‌போது ச‌ய‌னைற் அருந்த் தி ம‌ர‌ண‌மான‌தாக‌ப்பொலிஸார் தெரிவித்த‌ன‌ர்.அர்ஜுனுட‌ன் விசாரிக்க‌ப்ப‌ட்ட‌ மேலும் இருவ‌ர் ச‌ய‌னைற் அருந்தி உயிரிழ‌ந்த‌தாக‌ப்பொலிஸார் கூறினார்க‌ள்.பொலிஸாரின் பிடியிலிருந்த‌வ‌ர்க‌ளிட‌ம் ச‌ய‌னைற் எப்ப‌டி வந்த‌து என்ற‌கேள்விக்கு இதுவ‌ரை விடை கிடைக்க‌வில்லை.
 


வீர‌ப்ப‌ன் யார்? அப்ப‌டி ஒருவ‌ன் இருக்கிறானா? என்ற‌ கேள்வி எழுந்த‌போது ந‌க்கீர‌ன் ஆசிரிய‌ர் கோபால் காட்டுக்குச்சென்று வீர‌ப்‌ப‌னைப்பேட்டிக‌ண்டு  வீரப்‌ப‌னின் உருவ‌த்தை அம்ப‌ல‌ப்ப‌டுத்தினார்.ஜெய‌ல‌லிதாவின் ஆட்சிக்கால‌த்தில் வீரப்‌ப‌னின் சிற‌ப்புப்பேட்டி ச‌ன் தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்பான‌து.வீர‌ப்ப‌னின் சிற‌ப்பு ஒளிப‌ர‌ப்பு அனைவ‌ரையும் விய‌ப்படைய‌‌ வைத்த‌து. கோபாலின் துணிச்ச‌லினால் நக்கீர‌னின் புல‌னாய்வுத்த‌க‌வ‌ல்க‌ள் துல்லியமான‌து என்ற‌ எண்ண‌ம் ஏற்ப‌ட்ட‌து.

 காட்டிலே இருக்கும் வீர‌ப்ப‌னை நெருங்க‌ முடியாதுஎன்ப‌தை உண‌ர்ந்த‌ அதிர‌டிப்ப‌டைத்த‌லைவ‌ர் விஜ‌ய‌குமார் காட்டிலிருக்கும் வீர‌ப்ப‌னை வெளியே வ‌ர‌வ‌ழைக்கும் உத்தியைத்திட்ட‌மிட்டார்.வீரப்‌ப‌னின் க‌ண் பார்வை குறைவ‌டைந்த‌த‌னால் முடிவெடுக்கும் நிலைக்குத்த‌ன்னை உய‌ர்த்திக்கொண்ட‌ சேத்துக்குளி கோவிந்த‌னின் ந‌ட‌வ‌டிக்கையே வீரப்‌ப‌னின் உயிருக்கு உலை வைத்த‌து.

   முக‌த்தைப்பார்த்தாலே ந‌ண்ப‌ன் யார் எதிரியார் என்ப‌தைக்கூறிவிடும் திற‌மை வீர‌ப்ப‌னிட‌ம் உள்ள‌து.ப‌ற‌வைக‌ளின் வில‌ங்குக‌ளின் அசைவு ஒலி என்ப‌ன‌வ‌ற்றைக்கொண்டே காட்டுக்குள் ந‌ட‌ப்ப‌தைக்கூறும் திற‌மை வீர‌ப்ப‌னிட‌ம் உள்ள‌து.வீர‌ப்ப‌னுட‌ன் இருந்த‌ப‌ல‌ர் கொல‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌ர்,சில‌ர் சிறைப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.  வீர‌ப்ப‌னைப்பிடிக்கும் ப‌ணியிலீடுப‌ட்ட‌ அதிர‌டிப்ப‌டையின‌ர்தின‌மும் 20 கிலோ மீற்ற‌ர் ப‌ய‌ன‌ம் சென்று தேடுத‌ல் செய்த‌ன‌ர். யானை,பாம்பு என‌ப‌ன‌வ‌ற்றிட‌மிருந்து பெரும் அச்சுறுத்த‌ல்க‌ளை எதிர்கொண்ட‌ன‌ர்.

  ம‌லைவாழ்ம‌க்களின் ந‌ம்பிகையைப்பெற்ற‌ வீரப்‌ப‌னிப்பிடிக்க‌ வீர‌ப்ப‌னின் வ‌ழியிலேயேசெல்ல‌வேண்டும் என‌ நினைத்த‌ விஜ‌ய‌குமார் ம‌லைவாழ் ம‌க்க‌ளுக்கு இல‌வச  முகாம்க‌ளை ந‌ட‌த்தினார். அங்குள்ள‌ இளைஞ‌ர் யுவ‌திக‌ளுக்கு பொலிஸில் வேலைவெற்றுக்கொடுத்தார்.விஜ‌ய‌குமாரின் ந‌ட‌வ‌டிக்‌கையில் ம‌ய‌ங்கிய‌சில‌ர் வீர‌ப்ப‌னைப்ப‌ற்றி துப்புக்கொடுத்த‌ன‌ர்.

  வீர‌ப்ப‌ன் க‌ண் தெரியாம‌ல் த‌டுமாறுகிறான்,சேத்துக்குளி கோவிந்த‌ன் த‌லைமைப்ப‌த‌வியைப்பிடுக்க‌ முய‌ற்சிசெய்கிறான்.ப‌ண‌க்கையாட‌ல் செய்த‌ சேதும‌ணி வீரப்‌ப‌னிட‌ம் கெட்ட‌ பெய‌ர் வாங்கியுள்ளான் குடும்ப‌த்தைப்பார்ப்ப‌த‌ற்கு ச‌ந்திர‌கெள‌டா ஆர்வ‌மாக‌ உள்ளான்போன்ற‌ த‌க‌வ‌ல்க‌ளை வீர‌ப்ப‌னின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ம‌த்தியில் ஊடுருவியவ‌ர்க‌ளின் மூல‌ம் விஜ‌ய‌குமார் அறிந்து கொண்டார்.

  க‌ண்பார்வையைச்சரி செய்ய‌ ச‌த்திர‌சிகிச்சை செய்வ‌வேண்டும் என்ப‌த‌னால் ச‌த்திர‌சிகிச்சை என்ற‌வ‌லையில் வீர‌ப்ப‌னைச்சிக்க‌வைக்க‌ அதிர‌டிப்ப‌டையின‌ர் திட்ட‌மிட்ட‌ன‌ர். விஜ‌ய‌குமாரின் கார்ச்சார‌தியான‌ ச‌ர‌வ‌ன‌ன் வீர‌ப்ப‌னை வைத்திய‌சாலைக்குக்கொண்டுசெல்லும் அம்புல‌ன்ஸ் சார‌தியாக‌ மாறினார்.எஸ்.கே.எஸ் ஹிஸ்பிர‌ல் சேல‌ம் என்ற‌ எழுத்துட‌ன் பொலிஸ்வாக‌ன‌ம் அம்புல‌ன்ஸாக‌ மாறிய‌து. திட்ட‌ங்க‌ள் அனைத்தும் மிக‌வும் இர‌க‌சிய‌மாக‌ ந‌டைபெற்றன‌.

   திட்ட‌மிட்ட‌ அந்த‌ நாள் வ‌ந்த‌து.பொலிஸ் உள‌வாளியான‌ சார‌தி வீர‌ப்ப‌ன் குழுவின‌ரை அம்புல‌ன்ஸில் ஏற்றிக்கொண்டு வைத்திய‌சாலையை நோக்கிச்சென்றார்.வீர‌ப்ப‌ன் குழுவை எதிர்பார்த்துக்காத்திருந்த‌ அதிர‌டிப்ப‌டையின‌ர் வீர‌ப்ப‌ன் வ‌ரும் அம்புல‌ன்ஸ் த‌ம‌து பொறிக்குள் வ‌ரும்வ‌ரை காத்திருந்த‌ன‌ர்.

   எதிர்பார்த்த‌ இட‌ம் வ‌ந்த‌தும் ச‌ந்தேக‌மின்றி அம்புல‌ன்ஸைப்பின் தொடர்ந்த‌ லொறி ஒன்று அத‌னை முந்திச்சென்ற‌து.அதிர‌டிப்ப‌டையின் திட்ட‌ப்ப‌டி இர‌ண்டு லொறிக‌ள் வீர‌ப்ப‌ன் சென்ற‌ அம்புல‌ன்ஸின் இர‌ண்டு ப‌க்க‌மும் நெருங்கிச்சென்ற‌ன‌.ஏற்கென‌வே திட்ட‌மிட்ட‌ப‌டி அம்புல‌ன்ஸின் சார‌தி வாக‌ன‌த்தை நிறுத்திவிட்டு திற‌ப்‌பையும் எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்.இர‌வு 10.30 ம‌ணி எங்கும் இருள். பொலிஸாரின் ஒலி பெருக்கி ச‌ர‌ண‌டையுமாறு உத்த‌ர‌விட்ட‌து.ச‌ர‌ண‌டைய‌ ம‌றுத்த‌ வீர‌ப்ப‌ன் கோஷ்டி சுட்ட‌த‌னால் அதிர‌டிப்ப‌டையும் சுட்ட‌து.துப்பாக்கிச்சூட்டில் சந்தனக்கடத்தல் வீரப்பன்,சேத்துக்குளி கோவிந்தன்,சேதுமணி,சந்திர கெளடா ஆகிய நான்குபேரும் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

   20 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலான் போராட்ட‌த்துக்கு முடிவுக‌ட்ட‌ப்ப‌ட்டுவிட்ட‌து.ஆனால்,வீர‌ப்ப‌னின் ம‌ர‌ண‌த்தில் ச‌ந்தேக‌ம் இருப்ப‌தாக‌வும் ச‌ர‌ண‌டைய‌ விரும்பிய‌ வீரப்ப‌ன் ச‌ண்டையை ஆர‌ம்பித்திருக்க‌மாட்டான் என்றும் வீர‌ப்ப‌னுக்குச்சார்பான‌வ‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர்.வீரப்ப‌னுட‌ன் ப‌ல‌ ம‌ர்ம‌ங்க‌ளும் மூடிம‌றைக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌.

  வீர‌ப்ப‌னின் ம‌ர‌ன‌ம் த‌மிழ‌க‌, க‌ர்நாட‌க‌ அர‌சுக‌ளுக்கு ச‌ந்தோச‌த்தைக்கொடுத்துள்ள‌து.ஆனால் ம‌லைவாழ் ம‌க்க‌ளுக்கும் க‌ர்நாட‌க‌த்தில் உள்ள‌ த‌மிழ‌ர்க‌ளுக்கும்வீர‌ப்ப‌னின் ம‌றைவு பேரிழ‌ப்பு.த‌மிழ‌க‌த்தின்  கெள‌ர‌வ‌த்தை வீர‌ப்ப‌னின் ம‌ர‌ண‌ம் தூக்கிநிறுத்தியுள்ள‌து.
வ‌ர்மா
மெட்ரோநியூஸ் 22/09/2004

No comments: