Monday, November 15, 2021

ரி20 உலகக்கிண்ண துளிகள்


 

போட்டிகள்; 45

சம்பியன் அவுஸ்திரேலியா

ரன்னர் நியூஸிலாந்து 

அவுஸ்திரேலியா  ஐசிசியின் 8 போட்டிகளில் சம்பியன்

50 ஓவர் உலகக்கிண்ணம்

1987,1999,2003,2007,2015

சம்பியன்ஸ்ட்ரபி

2006,2009

ரி20  உலகக்கிண்ண ஆறாவது  சம்பியன் ஐந்தாவது நாடு.

இந்தியா 2007

பாகிஸ்தான் 2009

இங்கிலாந்து 2010

மேற்கு இந்தியா  2012

இலங்கை  2014

மேற்கு இந்தியா  2016

ஆரோன் பிஞ்சின் 6 ஆவது நாணயச்சுழற்சி வெற்றி. ஆறு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா  வென்றது.  நாணய‌ச் சுழற்சியில் இங்கிலாந்துக்கு எதிராகத் தோல்வி. போட்டியிலும் தோல்வி

                        அதிக  ஓட்டங்கள்


பாபர் அஸாம் 303  ஓட்டங்கள்.  பாகிஸ்தான்

 

அதிக விக்கெட்கள்

 ஹஸரங்க டி சில்வா  16 இலங்கை

 வில்லியம்ஸன் 32 பந்துகளில் 50 ஓட்டங்கள்.  முன்னதாக சங்ககார  [இலங்கை].ஜோரூட் [இங்கிலாந்து] 33 பந்துகலில் 50 ஓட்டங்கள்.

ரி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த  சாமுவேல்ஸுடன், வில்லியம்சன் 85 ஓட்டங்கள் எடுத்து இணைந்தார். அடுத்த இடங்களில் சாமுவேல்ஸ் 78 ஓட்டங்கள், கோலி 77 ஓட்டங்கள், கம்பீர் 75 ஓட்டங்கள்

ரி20 உலக்கிண்ண இறுதிப் போட்டியில் அதிக  ஒட்டங்கள் எடுத்த கப்டன் வில்லியம்ஸன் 85 ஓட்டங்கள். சங்ககார 64 ஓட்டங்களுடன் இரன்டாவது இடத்தில் உள்ளார். 

அதிக ஓட்டங்கள் கொடுத்த வீரர்

அவுஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டாக் 4 ஓவர்களில் 60 ஓட்டங்கள் கொடுத்தார். ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் கொடுத்த பந்து வீச்சாளர் இவர்தான். முன்னதாக மலிங்க 4 ஓவர்களில் 55  ஓட்டங்கள் கொடுத்தார்.

ஐபிஎல்லில் அசத்திய வீரர்கள் ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் காணாமல் போய்விட்டார்கள். ஐபிஎல்லிக் கப்டன் பதவி பறிக்கப்பட்டு அணியில் இருந்து விரட்டப்பட்ட டேவிட் வானர் தொடர் நாயகனானார்

No comments: