Sunday, November 14, 2021

ஸ்பெயினில் தங்கம் வென்ற இந்திய மங்கை

ஸ்பெயினில் நடைபெற்ற ஓபன் படகுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன்.

சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மெகானிக்கல் பிரிவில் பொறியியல் படிப்பு படித்து வருபவர் நேத்ரா குமணன். இவர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கிரான் கனேரியா சாம்பியன்ஷிப் படகுப் போட்டித் தொடரில் கலந்து கொண்டு லேசர் ரேடியல் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி சாம்பியன் பட்டம் பெற்று தங்கம் வென்றுள்ளார். இது ஐரோப்பாவின் மண்டல அளவிலான ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியாகும்.

இந்தப் போட்டியில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 3 வீரர்கள் உட்டட 3 நாடுகளைச் சேர்ந்த 20 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்

ஏற்கனவே டோக்யோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்று, படகுப் பந்தய பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் ஒட்டுமொத்த அளவில் 10வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் 23 வயதாகும் நேத்ரா குமணன்.

இவர் 2020ம் ஆண்டு அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற உலகக் கோப்பை படகுப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்

தற்போது இவர் ஸ்பெயினில் தங்கியிருந்து படகுப் பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு பயிற்சி அளிக்கும் ஹங்கேரியின் டமாஸ் எஸ்செஸ் இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டவர் ஆவார்.

No comments: