Monday, November 29, 2021

பீபா அரபு கிண்ணப் போட்டி இன்று ஆரம்பம்


 அரபு நாடுகளுடையே பீபா நடத்தும் பீபா அரபு கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நாளை 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல்  டிசம்பர்  18 ஆம் திகதி வரை கட்டாரில் நடைபெறும். 

24 அரபு உதைபந்தாட்ட நாட்டு உதைபந்தாட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் தகுதி பெற்ற 16 நாடுகள் அரபு கிண்ணத்துக்காகப் போட்டியிடுகின்றன.  பீபாவின் தர வரிசையில் முன்னிலையில் உள்ள துனிசியா [27], மொரோக்கோ [29],அல்ஜீரியா [30], எகிப்து [44], கட்டார் [44]  ஆகிய நாடுகள்  அரபு கிண்ணப் போட்டியில் விளையாடுகின்றன. 

1957 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் அரபு கிண்ணப் போட்டியில் இதுவரை 1,992 போட்டிகள் நடைபெற்றுள்ளன. 4,817 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி கட்டாரில் நடைபெறுவதற்கு ஒரு வருடம் இருக்கும் வேளையில் அரபுகிண்ணப் போட்டி நடைபெற உள்ளது. ஆகையால் உதைபந்தாட்ட உலகம் இதனை உன்னிப்பாக அவதானிக்க உள்ளது.  அரபுக் கிண்ணப் போட்டியின் மூலம் மைதானங்கள், ரசிகர்களின் ஆதரவு, வசதிகள் என்பனவற்றை  அறியமுடியும். 

அரபு கிண்ணப் போட்டியில் விளையாடும் நாடுகளின் விபரம்:

குழு

கட்டார்

ஈராக்

ஓமான்

பஹ்ரேன்

குழு பீ

துனிசியா

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

சிரியா

மொரிட்டானியா

 

  குழு சி

மொரோக்கோ

சவுதி அரேபியா

ஜோர்தான்

பலஸ்தீனம்

குழு டி

அல்ஜீரியா

எகிப்து

லெபனான்

சூடான்


 

 

No comments: