Friday, November 26, 2021

நி யூசிலாந்து அணியில் இந்திய வீரர் அஜாஜ் படேல்


 

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்  நியூசிலாந்து அணி சார்பில் சுழற்பந்துவீச்சாளராக அஜாஸ் படேல் களமிறங்குகிறார். இவர் இந்தியாவில் பிறந்தவர் ஆவார். 33 வயதாகும் இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவருக்கு  எட்டு வயதாக இருக்கும்போது இவர்கள் குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது.

  இடது கை சுழற்பந்து வீச்சாளரான அஜாஜ் படேல் நியூசிலாந்து அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக அஜாஜ் படேல் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஓர் சிறப்பான உணர்வாக உள்ளது. இந்தியாவில் நான் முன்பு பார்க்காத இடங்களை பார்க்கும்பாது அழகாக உள்ளது. இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடும் போது அது எந்த அணிக்கும் சவாலானதாக தான் இருக்கும். இந்திய மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக இருக்கும். இதனால் நான் இந்திய அணிக்கு எதிராக எனது அதிகபட்ச பங்களிப்பை அணிக்காக அளிப்பேன் என்றார்.

No comments: