Thursday, November 11, 2021

சாதனை படைத்த இந்திய -பாகிஸ்தான் போட்டி

ரி20 உலகக் கிண்ணத்  தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இதுவரையில் நடைபெற்ற ரி20 போட்டிகளில் அதிகமானோர் பார்த்த  போட்டி என்ற சாதனையை படைத்துள்ளது

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான  ரி20 கிரிக்கெட் போட்டியை  16.7 கோடி (167 மில்லியன்) மக்கள் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரையிலான ரி20 உலகக்  கிண்ண  கிரிக்கெட் தொடரின் ஆட்டங்களை 23.8 கோடி ( 238மில்லியன்) மக்கள் பார்த்துள்ளனர். மேலும், இதுவரை நடைபெற்ற ரி20 ஆட்டங்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற ஆட்டம் என்ற சாதனையையும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் படைத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ரி20 உலகக்  கிண்ணத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா‍ மேற்கு இந்திய  அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை 13.6 கோடி பேர் பார்த்திருந்தனர். அதிக பார்வையாளர்களை பெற்ற ஆட்டம் என்ற சாதனையையும் இந்த ஆட்டம் பெற்றது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

 

No comments: