Thursday, November 25, 2021

கிரிக்கெட்டை அழிக்கிறது ரி20- இயன் ச‌ப்பல் வேதனை

ரி20 கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட்டின் அடிப்படையான விழுமியங்களை புறக்கணித்து வெறும் பொழுது போக்கு, கேளிக்கை அம்சமாகவே இருக்கிறது, இத்தகையபோக்கு மாற வேண்டும் என்று கூறுகிறார் முன்னாள் அவுஸ்திரேலியா ப்டன் இஇயன் ப்பல்.

இது தொடர்பாக அவர் ஈஎஸ்பிஎன் - கிரிக் இன்போ இணையதளத்தில் எழுதிய பத்தியில்,

 விளையாட்டு என்பதற்கும் பொழுது போக்கு, அல்லது கேளிக்கை என்பதற்கும் சரிசம விகித முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். விளையாட்டு:கேளிக்கை விகிதாச்சாரம் 60:40 என்றாவது இருக்க வேண்டும் அதாவது விளையாட்டு 60% இருக்க வேண்டும், கேளிக்கை 40% இருக்கலாம் தவறில்லை. ஆனால் தற்போது ரி20 கிரிக்கெட் வெறும் கேளிக்கை வடிவமாக மட்டுமே சீரழிந்துள்ளது.

பேட்டுக்கும் பந்துக்கும் இடையே கடும் போட்டி, சவால் இருப்பதை நிர்வாகிகள்தான் உறுதி செய்ய வேண்டும். ரசிகர்களிடத்தில் கிரிக்கெட் குறித்த விழுமியங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நன்றாக மட்டையில் மிடில் ஆகும் பந்துகள் ஸ்டாண்டில் போய் விழுவது சரிதான், ஆனால் நன்றாக சிக்காத, மிஸ் ஹிட் எல்லாம் சிக்ஸ் ஆகும்போது பவுலர்களுக்கு கோபமேற்படுத்தும் அளவுக்கு அநீதி நிகழ்கிறது.

அவுஸ்திரேலிய மைதானங்களில் இந்த பிரச்சனை இல்லை ஏனெனில் எக்காரணம் கொண்டு பவுண்டரி நீளம் குறைக்கப்பட மாட்டாது. ஆனால் பவர் பேட்கள், மிஸ் ஹிட் ஆனாலும் சிக்ஸ் போக வேண்டும் என்ற பவர் மட்டைகள், ஆனால் எல்லைக்கோடுகளும் முன்னால் நகர்த்தப்படும்  மடஜீனியஸ்ஆலோசனைக்குச் சொந்தக்காரர் யார் என்று எனக்குத் தெரியவில்லை.

இது  பந்துவீச்சாலர்களை  வெறும் பவுலிங் மெஷின்களாக்கி விட்டது. இது நல்ல பந்துவீச்சாளர்கள்  மீதான பலத்த அடியாகும் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஓட்டங்களை கட்டுப்படுத்த மிகவும் வைடாக வீசுவது பார்க்க அசிங்கமாக இருப்பதோடு கிரிக்கெட்டை கீழ்மை படுத்துகிறது. ஸ்டம்ப்களை நோக்கி  வீச வேண்டும், அது துடுப்பாட்ட வீரர்களை  பிரஷரில் வைத்திருக்கும் உத்தியாகும்.

பந்தை வைடாக வீசுவது, பேட்டர் மிஸ்டேக் செய்யும் வரை காத்திருப்பது போட்டித்தன்மையை இழுக்காக்கி விடுகிறது.

பேஸ்பால், டென்னிஸ், கால்ஃப் போன்ற ஆட்டங்களிலும் குறுகிய வடிவங்கள் உண்டு ஆனால் அவை ஆட்டத்தின் நுட்பங்களை நுணுக்கங்களை, மதிப்புகளை கெடுப்பதில்லை. கிரிக்கெட் கேளிக்கையாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் அதன் வேர்களிலிருந்து அதனை பிடுங்கி எறிதல் கூடாது. ஆகவே கிரிக்கெட் நிர்வாகிகள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்என்றார் இயன் ப்பல்.

 

No comments: