Wednesday, November 24, 2021

கட்டாரில் வெற்றி பெற்ற ஹமில்டன்


 இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 20-வது சுற்றான கட்டார் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள லுசாயில் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.66 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினர்.

இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 24 நிமிடம் 28. 471 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றதுடன் அதற்குரிய 25 புள்ளிகளையும் தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவரது 7-வது வெற்றி இதுவாகும். அவரை விட 25.743 வினாடி பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வது இடத்தை பிடித்து 19 புள்ளிகளை பெற்றார். ஸ்பெயினின் பெர்னாண்டோ அலோன்சா 3-வதாக வந்தார்.

இதுவரை நடந்துள்ள 20 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் வெர்ஸ்டப்பென் 351.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அவரை நெருங்கி விட்ட ஹாமில்டன் 343.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 21-வது சுற்று பந்தயம் சவுதி அரேபியாவில் வருகிற 5‍ஆம் திகதி  நடக்கிறது. 

No comments: