Tuesday, July 29, 2025

மோடிக்கு குடைச்சல் கொடுக்கும் துணை ஜனாதிபதி

 

இந்திய துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர்   திடீரென இராஜினாமாச் செய்துள்ளார். இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்திய ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும்  இந்திய மத்திய அரசினால் தெரிவு செய்யப்படுவார்கள்.  எதிர்க் கட்சிகள் இதற்கு பெயரளவில் ஒப்புதல் கொடுப்பார்கள். மத்திய  அரசின்  கொளகைகளையும், பிரசாரங்களையும் அரசியல் ரீதியாக  மேம்படுத்தும்  வேலைகளையும் ஜனாதிபதி செய்வார். மத்திய‌ அரசு கொண்டு வரும் சட்டமூலங்களுக்கு ஒப்புதலளிப்பதே ஜனாதிபதியும் முக்கியமானபணியாகும். துணை ஜனாதிபதிக்கு  முக்கியத்துவம்  பெரிதாக  இல்லை.சில வேலை அவர் அடுத்த ஜனாதிபதியாகலாம். துணை ஜ்னாதிபதியாகலாம்.

மதிய அரசின் நெருக்கடி காரணமாகவே துணை ஜனாதிபதி இராஜினாமாச் செய்திருக்கல்லம் என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.மோடி அரசு  விரும்பியவாரு அவர் செயற்படவில்லை ஆதலால் எழுந்த நெருக்கடி அவரை இராஜினாமாவுக்குத் தளியது.

  துணைஜனாதிபதி  ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வர்த்தமனி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடர் கடந்தவாரம்  துவங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடரின் முதல் நாளே அலுவல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அன்று  மாலை, ஜெக்தீப் தன்கர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். மருத்துவ காரணங்களால் உடல்நிலையை கருத்தில் கொண்டு பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த திடீர் ராஜினாமா அறிவிப்பு பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது. பகல் 1 மணி முதல் மாலை 5 மணிக்குள் என்ன நடந்தது? துணை ஜனாதிபதி பதவியை ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்ய என்ன காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை எழுப்பி, கேள்வி கேட்டு வந்தன. அதோடு ஜெக்தீப் தன்கர் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.  அவையில் அமளி நீடித்ததால் பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதியின் இராஜினாமாவின் பின்னால் விடை தெரியாத பல கேள்விகள்  இருப்பதாக  காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. அவருடைய அண்மைக் கால நடவ்டிக்கைகள் பாரதீய ஜனதாவுக்கு எரிச்சலை ஏர்படுத்தின. இதனை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது.

 2027 வரை அவர் பதவிக்காலம் உள்ளது. அவர் ராஜ்யசபாவின் தலைவராகவும் இருந்தார். எதிர்க்கட்சிகளுடன் அவருக்கு அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்தன. சில நேரங்களில் அவரது கருத்துக்கள் அரசாங்கத்திற்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் குறித்தும் அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தார். மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது அவரது செயல்பாடுகள் கடும் விமர்சனங்களை சந்தித்தன. இந்த நிலையில்தான்  திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.

 தன்கர் தனது பதவிக் காலத்தில் கம்போடியா, கட்ட்ர், பிரிட்டன்   ஈரான் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளார். அதேபோல் இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தன்னை வந்து சந்திப்பதும் குறைவாகவே இருந்தது என்பது அவரது குமுறலாக இருந்துள்ளது

அதேபோ ஈரான் அதிபர் இப்ரஹிம் ரெய்ஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தபோது, அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் தன்கர் சென்றிருந்தார். அங்கே அவருக்கான ஏற்பாடுகள் குறித்து   துணை ஜனாதிபதி  அலுவலகம் கடும் அதிருப்தியைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 ரசு விழாக்கள் தொடர்பான மரபுகளைப் பின்பற்றப்படுவதிலும் தன்கர் ஒதுக்கப்பட்டதாக கருதுப்படுகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியா வந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட அரசு விருந்து நிகழ்வில் தன்கருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதுபற்றிய  எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றது.

டெல்லியில் கடந்த மே 19‍ம் திக‌தி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகதீப் தன்கர், மரபு ரீதியாக கடைப்பிடிக்கப்படும் மரியாதை குறைபாடு குறித்து சுட்டிக் காட்டியிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கான ப்ரோடோகால் குறைபாடு குறித்து சுட்டிக்காட்டி நானும் அதே பிரச்சினையை எதிர்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

 அரசு அலுவகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி படங்களுடன் தனது படமும் வைக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.

ஜெகதீப் தன்கர் 35 மாதங்கள் இப்பதிவியில் இருந்துள்ளார். ஆனால் 4 முறை மட்டுமே இருநாட்டு நல்லுறவு ரீதியாக அவர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். இதனால் வெளியுறவு அமைச்சுக்கும் அவருக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டுள்ளது. வெளியுறவுக் கொள்கைகள் ரீதியாக ஓரங்கட்டப்பட்டதாக தன்கர் உணர்ந்துள்ளார். அவருக்கு முன்னதாக  துணை ஜனாதிபதியாக இருந்த  வெங்கயா நாயுடு 2017 முதல் 2022 வரை 17 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார், அதற்கு முன்னர் 2007 முதல் 2017 வரை அப்பதவியில் இருந்த ஹமீது அன்சாரி 28 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை ஜனாதிபதிப்  பதவிக்கு மீண்டும் பாஜகவைச் சேர்ந்தவரையே தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

  தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த துணை ஜனாதிபதி பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகிது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் ராம்நாத் தாகூர் உள்ளிட்ட பல பெயர்கள் துணை ஜனாதிபதி பதவிக்கு அடிப்பட்டது. இவர்களில் ராம்நாத் தாகூரின் பெயர் தான் அதிகமாக சொல்லப்படுகிறது. இவர் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அடிக்கடி நடக்கும் இவர்களின் சந்திப்புகளும், இந்த சந்திப்பிற்கு பிறகு நட்டா மற்ற எம்பி,,க்களுடன் ஆலோசனை நடத்தியதையும் வைத்து பார்க்கையில் இவரே அடுத்த துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில்,அடுத்த துணை ஜனாதிபதி பாஜக கட்சியை சேர்ந்தவராக தான் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் ச்ட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாநில மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பீகாரை சேர்ந்த தாகூரை அடுத்த துணை ஜனாதிபதியாக பாஜக தலைமை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகளை துவக்கி விட்டதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் துணை ஜனாதிபதி தேர்தல்  திக‌தி உள்ளிட்ட நடைமுறைகள் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரமணி

27/7/25 

 

 

 

 

0000000000000000

 

 

ஆடுகளத்தில் முசோலினியின் கொள்ளுப் பேரன்


  இத்தாலிய பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் கொள்ளுப் பேரனான  ரோமானோ ஃப்ளோரியானி முசோலினி,  கிரெமோனீஸுடன் சீரி ஏ அறிமுகத்திற்குத் தயாராகிறார்.   22 வயதான ரைட் பேக், இந்த மாத தொடக்கத்தில் கிரெமோனீஸில் சேர்ந்தார்.

ரோமானோ, மௌரோ ஃப்ளோரியானி  இத்தாலிய அரசியல்வாதி அலெஸாண்ட்ரா முசோலினியின் மகன் ஆவார், அவர் ஃபோர்ஸா இத்தாலியா கட்சியின் முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும், பாசிச ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து 1922 முதல் 1943 வரை இத்தாலியின் பிரதமராக இருந்த பெனிட்டோவின் பேத்தியும் ஆவார்

நான் கால்பந்து விளையாட இங்கே இருக்கிறேன். என் குடும்பப்பெயரா? அது என்னை எப்போதும் தொந்தரவு செய்ததை விட மற்றவர்களை அதிகமாக தொந்தரவு செய்துள்ளது. இது மற்றவர்களுக்கு ஒரு கனமான பெயர், ஆனால் எனக்கு அல்ல," என்று ரோமானோ புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.  

Tuesday, July 22, 2025

எம்.ஜி.ஆருக்கு போட்டியாக‌ களம் இறக்கப்பட்ட முத்து


 தமிழகத்தின் முன்னாள்  முதல்வர் கருணாநிதியின் மகன்  மு,க, முத்து கடந்த  சனிக்கிழமை காலமானார்.

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகந்தான்  மு,க, முத்து. முத்து பிறந்த   பின்னர் உடல் நலக் குறைவால் பத்மவதி காலமானார். தாய் இல்லாமல் பாட்டியுடன் வளர்ந்தவர் மு.க.முத்து.

தனது தகப்பன் முத்துவேலின் ஞாபகார்த்தமாக மகனுக்கு முத்து எனப் பெயரிட்டார் கருணாநிதி.

பாட்டு,நடிப்பு என்பனவற்றில் ஆர்வமாக இருந்த மு.க.முத்து , கட்சிக் கூட்டங்களில் தகப்பன் கருணாநிதியுடன் கலந்துகொண்டார்.

கழக நாடகங்கள் ,இயக்கப்பாடல்கள் என்பனவற்றால் மேடையை கலகலப்பாக்கினார் முத்து.

சினிமாக் கவர்ச்சி முத்துவை ஆட்கொண்டதால் நடிப்பதற்கு ஆசைப்பட்டார். க்ருணாநிதி அதற்கு களம் அமைத்துக் கொடுத்தார்.மு.க.முத்துவின் நடை,உடை,பாவனை அனைத்துல்  எம்.ஜி.ஆரைப் போன்று இருந்ததால்  அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டன.எம்.ஜி.ஆருக்கு எதிராக மகனை கருணாநிதி களம் இறக்கி உள்ளார் என் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், முத்து நடிக்கும்  போது படப்பிடிப்பைப் பார்க்கச் சென்ற எம்.ஜி.ஆர்  , கிளப் அடித்து ஆரம்பித்து வைத்தார்.

எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் வேண்டப்படாதவர்களால்  முன் வைக்கப்பட்ட குற்றச் சாடுகள்  இன்றும் தொடர்கிறது.

எம்.ஜி.ஆரும் , கருணாநிதியும் அரசியல் எதிரிகள்தான்  ஆனால், ஒருவரை ஒருவர் தூற்றி பிரசாரம் செய்யவில்லை.

பூக்கார், பிள்ளையோலிள்ளை,சமையல்காரன், அணையாவிளக்கும் இங்கேயும்  மனிதர்கள்  போன்ற படங்களில் முத்து நடைத்தார்.

அனைத்துப் படங்கலிலும் எம்.ஜி.ஆர் போலவே தோன்றினார்.

மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ நீ மூவேந்த வழி வந்த மன்னவனோ என்ற பாடல் மு.க.முத்துக்காக எழுதப்பட்டது. அது எம்.ஜி.ஆரின்  பாடல் என்ற எண்ணம் அன்றே எழுந்தது.

 நடிப்பில் மட்ட்டுமல்லாது பாட்டிலும் எம்.ஜி.ஆரைப் பின்பற்ரினார் முத்து. படங்கள் தோல்வியடைந்ததால் திரை உலகில் இருந்து முத்து காணாமல் போனார்.

கருணாநிதியுடனான தொடர்பையும்  முத்து துறந்தார். கருணாநிதியுடன் கோபித்துக்கொண்டு அதிமுகவில் சேர்வதற்காக எம்.ஜி.ஆரிடன்  சொன்றார். எம்.ஜி.ஆர்  அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார்.  எம்.ஜி.ஆரிடன் அரசியல் அறம் இருந்தது. இன்றைய அரசியல்வாதிகளிடன் அதனை எதிர்பார்க்க முடியாது.

குடிக்கு அடிமையாகிய முத்து குடும்பதை விட்டு வெளியேறினா. இன்னொரு சகோதரனின் திருமணத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

முத்துவின் நிலையை அறிந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பண உதவி செய்தார். தனது அரசியல் எதிரியாகிய கருணாநிதியின் மகனுக்கு ஜெயலலிதாவும் உதவி செய்தார்.


2009 ஆம் ஆண்டு மீண்டும்தகப்பனான கருணாநிதியுடன் சேர்ந்தார் முத்து. அதன் பின்னர் மாட்டுத்தாவணி என்ற படத்தில் நடித்தார்.

 2018 ஆம் ஆண்டு  கருணாநிதி இறந்தபோதும் அவர் மரணச் சடங்கில் கல்ந்துகொள்ளவில்ல. அடுத்தநாள் இருவரின் துணையுடன் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது உடல்  மெலிந்த உடலுடன் மிகவும் சிரமப்பட்டு நடந்தார்.

 மனைவியின் பெயர்  சிவகாம சுந்தரி.அறிவுநிதி,  மகனும், தேன்மொழி என்ற மகளும் முத்துவின் வாரிசுகளாவர்.

ஸ்டாலினும், கனிமொழியும் தமது நிகழ்ச்சிகளை இரத்துச் செய்து  விட்டு இறுதிக் கிரியைகளில் கலந்து  கொண்டனர். 

Monday, July 21, 2025

குழப்பத்தில் தலைவர்கள் அதிர்ச்சியில் தொண்டர்கள்


   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பரதீய ஜனதா ஆகிய  இரண்டு கட்சிகளும்  ஒரே கூட்டணியில் இருப்பதாகப்  பத்திரிகை அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் கட்சித்தலைவர்கள் அனைவரும்  மாற்றி மாற்றி மாற்றிப் பேசுகிகிறார்கள்.

குடும்பப் பிரசனையால் பாட்டாளி மக்கள் கட்சி  இரண்டாகி உள்ளது.   அன்புமணி பாரதீய ஜனதாவின் பக்கம் நின்று கொண்டு ஸ்டாலினை விம்ர்சிக்கிறார்.  ஆனால், அன்புமணியின் தகப்பன் ராமதாஸ் ஸ்டாலினைப் புகழ்கிறார்.

அதிமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளின்  குழப்பத்துக்குப் பின்னணியில் பாரதீய ஜனதா  இருக்கிறது.

மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்  சக்தி மிக்க தலைவரான மல்லை சத்யா தூக்கி எறியப்பட்டார். வைகோவுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம்  பக்கத்துணையாக நின்று பாதுகாத்தவர் மல்லை சத்யா. மகன் துரைக்காக மல்லை சத்யாவை பலிக்கட்டாவாக்கி உள்ளார் வைகோ.

கட்சியை வளர்க்க வேண்டிய தலைவர்களே தமது பதவியைக் காப்ப்பாற்ற உள்ளடி வேலி செய்வதால் கட்சியைத் தூக்கிப் பிடிக்கும் தொண்டர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என  போகும் இடம் எங்கும் அமித்ஷா சொல்கிறார். அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமையும் நான்தான்  முதலமைச்சர் என எடப்பாடி அடித்துச் சொல்கிறார். நம்பிய மாநிலக் கட்சிகளை பாரதீய ஜனதா கபளீகரம் செய்த பட்டியலை     விமர்சகர்கள்  முன்வைக்கிறார்கள். ஜெயலலிதா மறைந்த பின்னர் நடைபெற்ற‌ 11 தேர்தல்களில் எடப்பாடியின் தலைமையிலான அதிமுக மண்ணைக் கெளவியது. இந்த வரலாற்றை மறந்த எடப்பாடி இன்னமும் முதலமைசர் கனவில் மிதக்கிறார்.

எடப்பாடியின்  இன்றைய அரசியல் எதிரி ஸ்டாலின் அல்ல.  அண்ணாமலைதான் எடப்பாடியின்  அரசியல் எதிரி. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின்   கோஷத்துக்கு  அண்ணாமலை பக்கப்பாட்டுப் பாடுகிறார்.

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என சத்தியம் செய்த எடப்பாடி டெல்லியில் ஒரே இரவில் அமித்ஷாவின்  சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதிமுகவை அடகு வைத்துவிட்டார்.

எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொன்னார். கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. இந்த கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். நான் எடுப்பதுதான் முடிவு. அதிமுக ஆட்சி அமைக்கும். இதில் இபிஎஸ் முதலமைச்சர். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறது. இந்த கூட்டணியில் யாரும் விரிசல் ஏற்படுத்த முடியாது. அதிமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி அடையும் தனிப்பெரும் ஆட்சி அமைக்கும். கூட்டணியில் விரிசல் இல்லை. தெளிவா கூட்டணி தான் எடப்பாடி சொல்கிறார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எனச் சொல்லும் அமித்ஷா , முதலமைச்சர் யார் எனச் சொல்லவில்லை. எடப்பாடியின் பெயரை எங்கேயும் அவர் குறிப்பிடவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில்  மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம் என  அமித்ஷா தொடர்ந்து கூரிவருகிறார். அதிமுகவுடன் விஜய்   பேச்சிவார்த்தை நடத்தினார். அவருடைய கோரிக்கைகளை எடப்பாடி ஏற்ருக்கொள்ளவில்லை. தனால்  பேச்சுவார்த்தை  முறிந்தது

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் என்ன நடக்கிறது என அதன் முக்கிய தலைவர்களுக்கே தெரியாது.ஒரு நிர்வாகியை கட்சியை விட்டு நீக்குகிறார்  ராமதாஸ்.  அவரைக் கட்சியில் ச் ஏர்க்கிறார் அன்புமணி.  இன்னொரு நிர்வாகியை அன்புமணி கட்சியை விட்டு நீக்க அன்புமணி அவரைக்கட்சியில் சேர்க்கிறார். அவர் கட்சியில் இருக்கிறாரா  அல்லது வெளியேற்றப் பட்டி விட்டாரா என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது.

ராமதாஸையும், அன்புமணியையும் சமரசம் செய்வதற்கு  குருமூர்த்தி செல்கிறார்.  பார்தீய ஜனதாவின் தமிழக ஏஜென்ட் குருமூர்த்தி என்பது அனைவருக்கும் தெரிந்த  உண்மை.: எனது வீட்டில், நான் அமர்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை யாரோ வைத்துள்ளனர். அதை வைத்தது யார், யாருக்காக ஒட்டுக் கேட்டார்கள் என்பதை விசாரித்து வருகிறோம். சீக்கிரமே அதைக் கண்டுபிடிப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமகவுக்குள் நிலவி வரும் குழப்பங்களும், சண்டையும் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் புதுப் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் தனது வீட்டிலேயே தன்னை ஒட்டுக் கேட்புக் கருவி வைத்து ஒட்டுக் கேட்டதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சிகளுக்குள் நிலவும்  பிரச்சனைகளுக்கு முற்றுப்  புள்ளி வைத்தால் மட்டுமே தொண்டர்கள் சந்தோஷப்படுவார்கள்.  இல்லை என்றால்  கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவது சிரமமாகிவிடும்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். முதல்வர் மு..ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி செயல்பட்டு வருகிறார். அதே போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும்  மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அவர் பிரச்சார பயணத்தை துவங்கி செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் மோடி ஜூலை 27, 28ம் திகதி ஆகிய இரு நாட்களில் தமிழ்நாட்டுக்குச் செல்கிறார்.  கங்கை கொண்ட சோழபுரத்தில் அடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி.  27, 28 ஆகிய  திகதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சில அரசியல் மீட்டிங்குகள், கூட்டணி தொடர்பான சில அலோசனைகளும், இன்னபிற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறும் என்று கூறப்பட்டு வருகிறது.

பிரதமர்  விஜயத்தையொட்டி கங்கைகொண்ட சோழபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக 2ம் திகதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க விருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி என்ன குண்டைத் தூக்கிப் போடுவாரோ என்ற அச்சம் அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ளது.

 

ரமணி

20/7/25 

Friday, July 18, 2025

பெங்களூர் சம்பவத்துக்கு ஆர்சிபி தான் பொறுப்பு கோலிமீதும் குற்றச்சாட்டு


 

 பெங்களூர் சம்பவத்துக்கு

ஆர்சிபி தான் பொறுப்பு

கோலிமீதும்  குற்றச்சாட்டு

 பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட  உயிழிழப்புக்கு ஆர்சிபி அணிதான்  பொறுப்பு என  கர்நாடக  உயர் நீதிமன்றத்தில்  சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வாருங்கள் என கோலி வீடியோ வெளியிட்டதும் விமர்சனத்துகுக்குள்ளாகி இருக்கிறது.

18 வருட காத்திருப்புக்குப் பின்னர்  ஐபிஎல் தொடரில் ஆர்சிபி  சம்பியனாகியது. சென்னை, மும்பை  ஆகிய ஐபிஎன் அணிகளுகுப் போடியாக ஆர்சிபி அணி ரசிகர்களும் சமூகவலைத் தளங்களில்  பிஸியாக  இருக்கின்றனர்.

சென்னையும், மும்பையும் தலா ஐந்து முறை சம்பியனாகி விட்டன. கோலி,கெய்ல்ஸ்,டிவில்லியஸ் போன்ற  கிறிக்கெற் ஜாம்பவான்கள்  இருந்தும் ஆர்சிபியால்  சம்பியனாக முடியவிலை என்ற ஏக்கம் ரசிகர்களிடம்  இருந்தது.

பெங்களூரின் விதிகளிலும், பொது இடங்களிலும் கூடிய ரசிகர்கள் வெற்றிக் கொண்ண்ட்டாட உற்சாகத்தில் மூழ்கினர்.சின்னசாமி ஸ்ரேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டம்  நடைபெறும் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்தது.   கோலியின் அழைப்பும் ரசிகர்களை  உற்சாகப்படுத்தியது.

வெற்றிக்கொண்டாட்டத்தில் கல்ந்துகொள்வதற்மும், சம்பியன் கிண்ணத்தைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். கட்டுக்கடங்காத வெள்ளம் போல ரசிகர்கள் சின்னசாமி  மைதான வீதிகளில் திரண்டனர்.

பொலிஸாரிடம்  முறையாக அனுமதிபெறவில்லை. வெற்றிவிழா நடக்கப்போவதாக தகவல் சொல்லப்பட்டது.இவ்வளவு தொகையாக ரசிகர்கள் கூடுவார்கள் என நிர்வாகமும்,  பொலிஸாரும் எதிர்பாஅர்க்கவில்லை.

மூன்று லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டனர்.

அனைவரும்வருக என்ற பொதுவான அழிப்பு பின்னர் பாஸ் முறையாக மாற்றப்பட்டது. நுழைவாயில்கள் திறப்பதில் ஏற்பட்ட தாமதம் , முறையாகத் திட்டமிடாமை போன்றவையே அசம்பாவிதத்துக்கும்  உயிர் இழப்புக்கும் காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஜோன் டி குன்ஹா த்லைமையிலான விசாரணைக் கமிஷன் தனது  அறிக்கையிச் ச்மர்ப்பித்துள்ளது.  ஊழல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்பளித்தவர் குன்ஹா

 அந்த அறிக்கையில் பெங்களூர் ராயல் சலஞ்ச் அணி, கர்நாடக் கிறிக்கெற் சங்கம் ஆகியவற்றின்  மீது பல்வேறு குற்றாச் சாட்டுகள் சுமத்தப்பட்டன.  ஆர்சிபி, கர்நாடக கிறிக்கெற் சங்கம் ஆகியவற்றின் மீது கிறிமினல் வழக்குத் தொடர கர்நாடக அரசாங்கம்  ஒப்புதலளித்துள்ளது.

 வெற்றிக் கொண்டாட்ட அசம்பாவிதத்தின்  பின்னர்  பெங்களூர்  பொலிஸ்  கமிஷனர் சஸ்பென்ஸ் செய்யப்பட்டார். முக்கிய பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள்  இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

இந்தப் பிரச்ச்னை காரணமாக  ஐபிஎல் இல் பெங்களூர் அணி தடை செய்யப்படலாம்.

ஐபிஎல் சம்பியன் வெற்றிக் கொண்டாட்ட்ம்  பெங்களூர் அனியில் எதிர்  காலத்தைக்  கேள்விக்குறியாக்கி  உள்ளது.

  

Tuesday, July 15, 2025

முன்னாள் அமைச்சர் ராஜிதவைக் காணவில்லை

 பட்டாளம் புடைசூழ,பொலிஸார் சல்யூட் அடித்து பாதுகாப்புக் கொடுக்க  கெத்தாகப் பவனி வந்த  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன‌வைக் காணவில்லை என பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். அவரது தொலைபேசி இயங்கவில்லை எனவும்  தகவல் சொல்லியுள்ளனர்.

இலங்கைப் பொலிஸ், புலனாய்வுத் துறை ஆகியவற்றில் நிலை இப்போது தெளிவாகி விட்டது.

புலஸ்தினி,செவ்வந்தி  வரிசையில் ராஜிதவும் காணாமல் போயுள்ளார்.உயர் பொலிஸ் அதிகாரியையும்  இலங்கைப் பொலிஸ்  கொஞ்ச நாட்களாகத் தேடித்திரிந்தது. அவர் கூலாக நீதிம்ன்றத்தில் சரணடைந்தார்.

மிக அண்மையில்மீநீன்பிடி அமைச்சராக  இருந்து அதிகாரம் செய்தவர் ராஜித சேனாரத்ன.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் நடந்த சர்ச்சைக்குரிய மணல் அகழ்வுத் திட்டத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன  விரைவில் கைது செய்யப்படுவார் என செய்திகள் கசிந்தன. அப்போது  மெத்தனமாக இருந்த பொலிஸார் ராஜிதவைக் கோட்டை விட்ட பின்னர் அவரைத் தேடுகின்றனர்.

கிரிந்த  மீன் பிடித்துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு சட்டவிதிகள் வற்றையும் உரிய முறையில் பின்பற்றாமல் வடகொரிய நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் அனுமதி வழங்கியதால் அரசாங்கத்துக்கு 26.3 மில்லியன் நிதி இழப்பீடு ஏற்படுள்ளதாக ராஜிதவின்   மீது குற்றம் சுமந்தப்பட்டது.

விசாரணைக்கு வருமாரும், வாக்குமூலம் வழங்குமாரில் இலஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழு பலமுறை ராஜிதவுக்கு அழைப்பு விடுத்தது.

அந்த அழைப்புகளுக்கு உரிய முறையில் ராஜித பதிலளிக்காமையினால், இன்று நீதிமனறம் அவரை தேடப்படும்  குற்றவாளி  என நீதிமன்றம்  அறிவித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு  அழைப்பு விடுத்தபோதெல்லாம் அவர்  வெளிநாட்டில் இருப்பதாக ராஜிதவின்  வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இலஞ்ச ஆணைகுழு முன்னிலையில் ஆஜராவதைத் தவிர்ப்பதற்கு ரஜித சேனாரத்த கொடுத்த  மருத்துவச் சான்றிதழ்களை  ஏற்க முடியாது என ஆணைக்குழு நிராகரித்தது.

ராஜிதவைக் கைது செய்யும் அதிகாரம் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு உள்ளது.

ஆனால்,இலஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழு  நீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளது. விசாரணையைத் தாமதப்படுத்தவும்,  நீதிமன்றத்தித் தவறாக வ‌ழிநடத்தவும் ராஜித முயற்சிப்பதாக இலஞ்ச ஆணைக்குழு

நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

  

  

5 பந்துகளில் 5 விக்கெற்கள்


 

 அயர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழில்முறை போட்டியில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அயர்லாந்து ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் பெற்றார்.

 2024 ஆம் ஆண்டு உள்நாட்டு டி20 போட்டியில் ஈகிள்ஸ் மகளிர் அணிக்கு எதிராக ஸிம்பாப்வே யு-19 அணிக்காக தொடர்ச்சியாக ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஸிம்பாப்வேயின் பெண் கிரிக்கெட் வீராங்கனை கெலிஸ் நத்லோவ் தான் இதுபோன்ற சாதனையை முதன்முதலில் பதிவு செய்தார்.

அயர்லாந்தில் நடந்த இன்டர்-மாகாண ரி20 டிராபியின் போது, நார்த்-வெஸ்ட் வாரியர்ஸுக்கு எதிராக முன்ஸ்டர் ரெட்ஸ் அணிக்காக விளையாடியதன் மூலம் கேம்பர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

வாரியர்ஸ் அணி 87  ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து 88  ஓட்டங்கள்  எடுத்து 189 ஓட்டங்கள் இலக்கை துரத்தியதால், வேகப்பந்து வீச்சாளர் இரண்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

12வது ஓவரின் ஐந்தாவது பந்தில், ஜாரெட் வில்சனை வீழ்த்தி அடுத்த பந்தில் கிரஹாம் ஹூனை அவுட் செய்தார். அடுத்த ஓவரில், ஆண்டி மெக்பிரைன், ராபி மில்லர், ஜோஷ் வில்சன் ஆகியோரை வீழ்த்தி ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

ரி20 போட்டிகளில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை   ஆறு பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியுள்ளனர். 

 

Monday, July 14, 2025

களத்தில் இறங்கிய அதிமுக பின்னுக்குத் தள்ளப்பட்ட பாரதீய ஜனதா

தமிழக சட்டசபைத் தேர்தலை மையப்படுத்தி ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற்க் கழகமு, எதிர்க் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பரப்புரையை ஆரம்பித்து விட்டன.

முதலமைச்சர் ஸ்டாலின்  மக்கள்   குறையைக் கேட்பதற்கு வீதியில் இறங்கிவிட்டார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் வைத்திய சாலைகளுக்கு நேரில் சென்று குறைகளைக் கேட்டைந்து  முதல்வன் பாணியில் உடடியாத் தீரவுகாண்கிறார்.  தப்பு செய்தவர்களை வேலையில் இருந்து தூக்குகிறார். அறநிலயத்துறை அமைச்சர்  கோயில்களில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்கிறார்.  தேனீர்க் கடையில் வேலை செய்த சிறுமியைப் பாடசாலையில் அனுமதித்து   செவலை ஏற்கிறார் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். இவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. 

தமிழகத்தின் எதிர்க் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை உறுதி செய்யும் வகையில்  "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்"  எனும் தொனிப் பொருளில் தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி.

தமிழக பாரதீய ஜனதக் கட்சியின் தலைவர் பதவியுல் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்ட‌தன  பின்னர் எடப்பாடியார் சுறுசுறுசுறுப்படைந்துள்ளார். திமுகவின் மீதும் ஸ்டாலினின்  மீதும் தினமும்  ஒரு குற்றச் சாட்டை முனவைத்து ஊடக வெளைச்சத்தைத் தன்மீது  பரவ விட்டுள்ளார்.

 கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர். கோயில் உண்டியலில் போடும் பணத்தை வைத்து கோயிலை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏன் அரசுப் பணத்தில் கல்லூரி கட்டினால் ஆகாதா? நாங்கள் ஆட்சியில் அனைத்து கல்லூரிகளையும் அரசு பணத்தில் கட்டினோம். அறநிலையத்துறை பணத்தை எடுத்து கல்லூரி கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இதை ஒரு சதிச் செயலாக பார்க்கிறோம். கல்விக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அந்தக் கல்வி அரசுப் பணத்தில் கொடுக்க வேண்டும்  என்று எடப்பாடி திமுகவின் மீது குற்றம் சாட்டி உள்ளார்.

 ஸ்டாலின் ஆட்சியை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் சிம்ப்ளி வேஸ்ட், ஸ்டாலின் ஆட்சியை  எடப்பாடி சபதம் செய்தார்.

அதிமுகவை மீட்க முடியாத பழனிசாமி தமிழகத்தை மீட்போம் என பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுள்ளதுள்ளார்.

இதுவரை பாஜகவுக்கு டப்பிங் குரல் கொடுத்த அவர் இப்போது ஒரிஜினல் குரலையே கொடுக்க ஆரம்பித்து விட்டார். அறநிலைத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்குவதற்கு பிரிவு இருக்கிறது.

தமிழ்நாடு என்று சொல்லத் தயங்குகின்ற கூட்டத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார். அதனால் தான் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பயணம் செய்கிறார். அதிமுகவை மீட்க முடியாத அவர். எப்படி தமிழகத்தை மீட்பார். எடப்பாடி பழனிச்சாமி இடம்  இருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விட்டது. செய்த குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவர் தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகு வைத்தார் என்று தெரிவித்துள்ளார்.

கோயில் காசில் ஸ்டாலின் பாடசாலை கட்டுகிறார் என்ற  எடப்பாடியின் குற்றாச் சாட்டை தமிழ் நட்டில் உள்ள  கல்வியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தம்து விவாதத்துக்கு பாரதியாரைத் துணைக்கழைத்துள்ளனர்.

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாரதியாரின் கவி வரிகளை கெட்டியாகப் பிடித்து அறிஞர்கள் எடப்பாடியை  நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கின்றனர்.

என்ன கொடுமை சரவணா பாடசாலை கட்டுவது  ஒரு குற்றமா என மீம்ஸ்கள் பறக்கின்றன.

திராவிட மொடல் ஆட்சி என்ற சொற்தொடர் இந்தியாவையே திரும்பிப் பர்க்க அவைத்தது.

திராவிட மொடல் ஆட்சிக்குப் பதிலாக ஆன்மீக அரசிய என்ற சொற்பதத்தை அண்ணாமலை பிரயோகிக்கத் தொடங்கி விட்டார்.

தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும்; சனாதன தர்மம் காக்க சன்னியாசிகளுடன் பயணிப்பேன்,'' என, பா.ஜ., 

கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின், 31வது ஜெயந்தி விழா  நடந்தது. இதில், சமூக சேவகர்கள், 13 பேருக்கு விருதுகள் வழங்கி  கெள‌ரவிக்கப்பட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  செல்வாக்குடன் தமிழகத்தில் பாரதீய ஜனதா கால் பதித்துள்ளது.

இந்த நிலையில்  அண்ணாமலையின்  கூற்று அதிமுகவுக்கு சவாலாக அமைந்துள்ளது.

ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையேயான தகராரு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

இருவரும் ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களை நடத்துகின்றனர்.

அன்புமணி தனது பெயரைப் பாவிக்கக் கூடாது   விரும்பினால் இனிஷியலைப் போடலாம் என ராமதாஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதல் போக்கு விரைவில் முடிந்துவிடும் என்று பாமகவினர் கூறி வரும் நிலையில், இந்த மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் மாறி மாறி கூறி வருகின்றனர். அது மட்டும் இன்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அன்புமணியின் ஆதரவாளர்களை  ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குவதும், அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்களை அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது. தேவை என்றால் அன்புமணி எனது பெயரை இனிசியலாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தசரதன் ஆணையை ஏற்ற ராமர் வனவாசம் சென்றார்.  ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சிலர் கூறி வருகின்றனர். இந்த ஐந்து வயது குழந்தை தான் மூன்று வருடங்களுக்கு முன்னர் அன்புமணியை பாமக தலைவர் ஆக்கினேன்

தேர்தலை நோக்கி அரசியக் கட்சிகள் வியூகம அமைக்கையில் பாமக மட்டும் குடும்பப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது.

ரமணி 13/7/25 

பிரட்மனின் சாதனைகளை நெருங்கும் கில் 100 வருட சாதனை தகர்க்கப்படுமா?

 

 கிறிக்கெற் உலகின் பிதாமகன் டொன்  பிரட்மன்.அவுஸ்திரேலியரான  பிடரட்மனின் 100 வருட சாதனைகளை   இந்திய அணிக் கப்டனான சுப்மன் கில் உடைக்கும்  வாய்ப்பு உருவாகி உள்ளது.

 இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா  விளையாட உள்ளது. 6 இன்னிங்ச்களில் விளையாட உள்ள கில் பிரட்மன், கோலி, கவாஸ்கர்  ஆகியோரின் சாதனைகளை  முறியடித்து புதிய அவரலாறு படைப்பார் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

 இங்கிலாந்துக்கு எதிரான  முதல் இரண்டு போட்டிகளில்  விளையாடிய சுப்மன் கில் 585 ஓட்டங்கள் அடித்து மிரட்டி உள்ளர். இரண்டாவது போட்டியில்  முதல் இன்னிங்சில்  இரட்டைச் சதமும்  இரண்டாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்களும் அடித்து பல சாதனைகளைத் தகர்த்துள்ளார். 

  டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த கப்டன் என்ற பெருமை பிரட்மனிடம்  இருக்கிறது. 1936 / 37 ஆண்டு ஆஷஸ் தொடரில் பிரட்மன் 810 ஓட்டங்கள் அடித்தார். அதனை முறியடிக்க  கில்லுக்கு  225 ஓட்டங்கள்  மட்டுமே தேவை.  அந்தத் தொரரில் பிரட்மன்  முதன்  முதலாக கப்டனாக களம்  இறங்கினார், சுப்மன் கில்லும் முதன் முதலாக இந்திய  கப்டனாக  களத்தில்  நிற்கிறார்.

 ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் பிரட்மன்  மூன்று சதங்கள் அடித்தார். சுப்மன் கில்  மூன்று சதங்களை அடித்து சமப்படுத்தி உள்ளார்.

1930 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பிரட்மன் 974 ஓட்டங்கள் அடித்தார். 330  ஓட்டங்கள் அடித்தால் கில்  பிரட்மனை  முந்திவிடுவார். அப்போது முதல் இரண்டு போட்டிகளில் பிரட்மன் 394 ஓட்டங்கள் அடித்தார். இரண்டு டெஸ்கலில் கில் 585  ஓட்டங்கள் அடித்துள்ளார்.

 அதி  வேகமாக 11  இன்னிங்ஸ்களில் 1000  ஓட்டங்கள்   அடித்த கப்டன் என்ற பெருமை பிரட்மனிடம்  உள்ளது. 415 ஓட்டங்கள் அடித்தால் அந்தப் பெருமையும்  கில்லிடம் சென்று விடும்.

 ஒரு டெஸ்ட்  தொடரில் ஐந்து சதங்கள் அடித்த சாதனைக்குச் சொந்தக்காரர் மேற்கு இந்தியத் தீவுகளின் வீரரான வால்கோட்.  1955ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு  எதிராக அந்த சாதனை நிலை நாட்டப்பட்டது.

மூன்று சதங்களுடன்  இருக்கும்  கில் அந்தச் சாதனையையும் உடைத் தெறியலாம்.

1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக  பிரட்மன் நான்கு சதங்கள் அடித்தார்.

  ஒரு தொடரில் அதிக  ஓட்டங்கள் அடித்த கப்டன் என்ற சாதனை கவாஸ்கர் வசம் இருக்கிறது. அவர் 732 ஓட்டங்கள் அடித்தார். 144 ஓட்டங்கள் அடித்தால்  அந்த சாதனையும்  கில்லின் வசம் வந்து விடும்.

18 ஓட்டங்கள் மட்டும்  கில் அடித்தால்  இங்கிலாந்தில் ஒரு தொடரில்  அதிக  ஓட்டங்கள் அடித்த ட்ராவிட்டின் சாதனையை   முறியடிப்பார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஜெய்ஷ்வால் அதிக  ஓட்டங்கள் அடித்து முன்னிலையில் இருக்கிறார். அவர் 712 ஓட்டங்கள் அடித்தார். 127 ஓட்டங்கள் அடித்தால் கில்  முந்திவிடுவார்.

இந்தியாவின்  முன்னாள் கப்டன்  கோலி அடித்த 655 ஓட்டங்கள்  என்ற சாதனையைக் கடக்க  இந்தியக் கப்டன்   கில்லுக்கு 91  ஓட்டங்கள் மட்டுமே தேவை.

அதிர்ஷ்டக் காற்று கில் லின்  பக்கம் வீசுகிறது.