Friday, July 18, 2025

பெங்களூர் சம்பவத்துக்கு ஆர்சிபி தான் பொறுப்பு கோலிமீதும் குற்றச்சாட்டு


 

 பெங்களூர் சம்பவத்துக்கு

ஆர்சிபி தான் பொறுப்பு

கோலிமீதும்  குற்றச்சாட்டு

 பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட  உயிழிழப்புக்கு ஆர்சிபி அணிதான்  பொறுப்பு என  கர்நாடக  உயர் நீதிமன்றத்தில்  சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வாருங்கள் என கோலி வீடியோ வெளியிட்டதும் விமர்சனத்துகுக்குள்ளாகி இருக்கிறது.

18 வருட காத்திருப்புக்குப் பின்னர்  ஐபிஎல் தொடரில் ஆர்சிபி  சம்பியனாகியது. சென்னை, மும்பை  ஆகிய ஐபிஎன் அணிகளுகுப் போடியாக ஆர்சிபி அணி ரசிகர்களும் சமூகவலைத் தளங்களில்  பிஸியாக  இருக்கின்றனர்.

சென்னையும், மும்பையும் தலா ஐந்து முறை சம்பியனாகி விட்டன. கோலி,கெய்ல்ஸ்,டிவில்லியஸ் போன்ற  கிறிக்கெற் ஜாம்பவான்கள்  இருந்தும் ஆர்சிபியால்  சம்பியனாக முடியவிலை என்ற ஏக்கம் ரசிகர்களிடம்  இருந்தது.

பெங்களூரின் விதிகளிலும், பொது இடங்களிலும் கூடிய ரசிகர்கள் வெற்றிக் கொண்ண்ட்டாட உற்சாகத்தில் மூழ்கினர்.சின்னசாமி ஸ்ரேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டம்  நடைபெறும் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்தது.   கோலியின் அழைப்பும் ரசிகர்களை  உற்சாகப்படுத்தியது.

வெற்றிக்கொண்டாட்டத்தில் கல்ந்துகொள்வதற்மும், சம்பியன் கிண்ணத்தைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். கட்டுக்கடங்காத வெள்ளம் போல ரசிகர்கள் சின்னசாமி  மைதான வீதிகளில் திரண்டனர்.

பொலிஸாரிடம்  முறையாக அனுமதிபெறவில்லை. வெற்றிவிழா நடக்கப்போவதாக தகவல் சொல்லப்பட்டது.இவ்வளவு தொகையாக ரசிகர்கள் கூடுவார்கள் என நிர்வாகமும்,  பொலிஸாரும் எதிர்பாஅர்க்கவில்லை.

மூன்று லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டனர்.

அனைவரும்வருக என்ற பொதுவான அழிப்பு பின்னர் பாஸ் முறையாக மாற்றப்பட்டது. நுழைவாயில்கள் திறப்பதில் ஏற்பட்ட தாமதம் , முறையாகத் திட்டமிடாமை போன்றவையே அசம்பாவிதத்துக்கும்  உயிர் இழப்புக்கும் காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஜோன் டி குன்ஹா த்லைமையிலான விசாரணைக் கமிஷன் தனது  அறிக்கையிச் ச்மர்ப்பித்துள்ளது.  ஊழல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்பளித்தவர் குன்ஹா

 அந்த அறிக்கையில் பெங்களூர் ராயல் சலஞ்ச் அணி, கர்நாடக் கிறிக்கெற் சங்கம் ஆகியவற்றின்  மீது பல்வேறு குற்றாச் சாட்டுகள் சுமத்தப்பட்டன.  ஆர்சிபி, கர்நாடக கிறிக்கெற் சங்கம் ஆகியவற்றின் மீது கிறிமினல் வழக்குத் தொடர கர்நாடக அரசாங்கம்  ஒப்புதலளித்துள்ளது.

 வெற்றிக் கொண்டாட்ட அசம்பாவிதத்தின்  பின்னர்  பெங்களூர்  பொலிஸ்  கமிஷனர் சஸ்பென்ஸ் செய்யப்பட்டார். முக்கிய பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள்  இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

இந்தப் பிரச்ச்னை காரணமாக  ஐபிஎல் இல் பெங்களூர் அணி தடை செய்யப்படலாம்.

ஐபிஎல் சம்பியன் வெற்றிக் கொண்டாட்ட்ம்  பெங்களூர் அனியில் எதிர்  காலத்தைக்  கேள்விக்குறியாக்கி  உள்ளது.

  

No comments: