Monday, July 21, 2025

குழப்பத்தில் தலைவர்கள் அதிர்ச்சியில் தொண்டர்கள்


   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பரதீய ஜனதா ஆகிய  இரண்டு கட்சிகளும்  ஒரே கூட்டணியில் இருப்பதாகப்  பத்திரிகை அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் கட்சித்தலைவர்கள் அனைவரும்  மாற்றி மாற்றி மாற்றிப் பேசுகிகிறார்கள்.

குடும்பப் பிரசனையால் பாட்டாளி மக்கள் கட்சி  இரண்டாகி உள்ளது.   அன்புமணி பாரதீய ஜனதாவின் பக்கம் நின்று கொண்டு ஸ்டாலினை விம்ர்சிக்கிறார்.  ஆனால், அன்புமணியின் தகப்பன் ராமதாஸ் ஸ்டாலினைப் புகழ்கிறார்.

அதிமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளின்  குழப்பத்துக்குப் பின்னணியில் பாரதீய ஜனதா  இருக்கிறது.

மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்  சக்தி மிக்க தலைவரான மல்லை சத்யா தூக்கி எறியப்பட்டார். வைகோவுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம்  பக்கத்துணையாக நின்று பாதுகாத்தவர் மல்லை சத்யா. மகன் துரைக்காக மல்லை சத்யாவை பலிக்கட்டாவாக்கி உள்ளார் வைகோ.

கட்சியை வளர்க்க வேண்டிய தலைவர்களே தமது பதவியைக் காப்ப்பாற்ற உள்ளடி வேலி செய்வதால் கட்சியைத் தூக்கிப் பிடிக்கும் தொண்டர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என  போகும் இடம் எங்கும் அமித்ஷா சொல்கிறார். அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமையும் நான்தான்  முதலமைச்சர் என எடப்பாடி அடித்துச் சொல்கிறார். நம்பிய மாநிலக் கட்சிகளை பாரதீய ஜனதா கபளீகரம் செய்த பட்டியலை     விமர்சகர்கள்  முன்வைக்கிறார்கள். ஜெயலலிதா மறைந்த பின்னர் நடைபெற்ற‌ 11 தேர்தல்களில் எடப்பாடியின் தலைமையிலான அதிமுக மண்ணைக் கெளவியது. இந்த வரலாற்றை மறந்த எடப்பாடி இன்னமும் முதலமைசர் கனவில் மிதக்கிறார்.

எடப்பாடியின்  இன்றைய அரசியல் எதிரி ஸ்டாலின் அல்ல.  அண்ணாமலைதான் எடப்பாடியின்  அரசியல் எதிரி. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின்   கோஷத்துக்கு  அண்ணாமலை பக்கப்பாட்டுப் பாடுகிறார்.

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என சத்தியம் செய்த எடப்பாடி டெல்லியில் ஒரே இரவில் அமித்ஷாவின்  சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதிமுகவை அடகு வைத்துவிட்டார்.

எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொன்னார். கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. இந்த கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். நான் எடுப்பதுதான் முடிவு. அதிமுக ஆட்சி அமைக்கும். இதில் இபிஎஸ் முதலமைச்சர். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறது. இந்த கூட்டணியில் யாரும் விரிசல் ஏற்படுத்த முடியாது. அதிமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி அடையும் தனிப்பெரும் ஆட்சி அமைக்கும். கூட்டணியில் விரிசல் இல்லை. தெளிவா கூட்டணி தான் எடப்பாடி சொல்கிறார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எனச் சொல்லும் அமித்ஷா , முதலமைச்சர் யார் எனச் சொல்லவில்லை. எடப்பாடியின் பெயரை எங்கேயும் அவர் குறிப்பிடவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில்  மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம் என  அமித்ஷா தொடர்ந்து கூரிவருகிறார். அதிமுகவுடன் விஜய்   பேச்சிவார்த்தை நடத்தினார். அவருடைய கோரிக்கைகளை எடப்பாடி ஏற்ருக்கொள்ளவில்லை. தனால்  பேச்சுவார்த்தை  முறிந்தது

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் என்ன நடக்கிறது என அதன் முக்கிய தலைவர்களுக்கே தெரியாது.ஒரு நிர்வாகியை கட்சியை விட்டு நீக்குகிறார்  ராமதாஸ்.  அவரைக் கட்சியில் ச் ஏர்க்கிறார் அன்புமணி.  இன்னொரு நிர்வாகியை அன்புமணி கட்சியை விட்டு நீக்க அன்புமணி அவரைக்கட்சியில் சேர்க்கிறார். அவர் கட்சியில் இருக்கிறாரா  அல்லது வெளியேற்றப் பட்டி விட்டாரா என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது.

ராமதாஸையும், அன்புமணியையும் சமரசம் செய்வதற்கு  குருமூர்த்தி செல்கிறார்.  பார்தீய ஜனதாவின் தமிழக ஏஜென்ட் குருமூர்த்தி என்பது அனைவருக்கும் தெரிந்த  உண்மை.: எனது வீட்டில், நான் அமர்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை யாரோ வைத்துள்ளனர். அதை வைத்தது யார், யாருக்காக ஒட்டுக் கேட்டார்கள் என்பதை விசாரித்து வருகிறோம். சீக்கிரமே அதைக் கண்டுபிடிப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமகவுக்குள் நிலவி வரும் குழப்பங்களும், சண்டையும் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் புதுப் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் தனது வீட்டிலேயே தன்னை ஒட்டுக் கேட்புக் கருவி வைத்து ஒட்டுக் கேட்டதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சிகளுக்குள் நிலவும்  பிரச்சனைகளுக்கு முற்றுப்  புள்ளி வைத்தால் மட்டுமே தொண்டர்கள் சந்தோஷப்படுவார்கள்.  இல்லை என்றால்  கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவது சிரமமாகிவிடும்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். முதல்வர் மு..ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி செயல்பட்டு வருகிறார். அதே போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும்  மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அவர் பிரச்சார பயணத்தை துவங்கி செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் மோடி ஜூலை 27, 28ம் திகதி ஆகிய இரு நாட்களில் தமிழ்நாட்டுக்குச் செல்கிறார்.  கங்கை கொண்ட சோழபுரத்தில் அடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி.  27, 28 ஆகிய  திகதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சில அரசியல் மீட்டிங்குகள், கூட்டணி தொடர்பான சில அலோசனைகளும், இன்னபிற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறும் என்று கூறப்பட்டு வருகிறது.

பிரதமர்  விஜயத்தையொட்டி கங்கைகொண்ட சோழபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக 2ம் திகதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க விருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி என்ன குண்டைத் தூக்கிப் போடுவாரோ என்ற அச்சம் அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ளது.

 

ரமணி

20/7/25 

No comments: