தமிழக
சட்டசபைத் தேர்தலை மையப்படுத்தி ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற்க் கழகமு, எதிர்க்
கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பரப்புரையை ஆரம்பித்து விட்டன.
முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் குறையைக் கேட்பதற்கு வீதியில் இறங்கிவிட்டார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் வைத்திய சாலைகளுக்கு நேரில் சென்று குறைகளைக் கேட்டைந்து முதல்வன் பாணியில் உடடியாத் தீரவுகாண்கிறார். தப்பு செய்தவர்களை வேலையில் இருந்து தூக்குகிறார். அறநிலயத்துறை அமைச்சர் கோயில்களில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்கிறார். தேனீர்க் கடையில் வேலை செய்த சிறுமியைப் பாடசாலையில் அனுமதித்து செவலை ஏற்கிறார் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். இவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழகத்தின்
எதிர்க் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" எனும் தொனிப் பொருளில் தேர்தல் சுற்றுப் பயணத்தை
தொடங்கியுள்ளார் எடப்பாடி.
தமிழக
பாரதீய ஜனதக் கட்சியின் தலைவர் பதவியுல் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்டதன பின்னர் எடப்பாடியார் சுறுசுறுசுறுப்படைந்துள்ளார்.
திமுகவின் மீதும் ஸ்டாலினின் மீதும் தினமும் ஒரு குற்றச் சாட்டை முனவைத்து ஊடக வெளைச்சத்தைத்
தன்மீது பரவ விட்டுள்ளார்.
கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர். கோயில்
உண்டியலில் போடும் பணத்தை வைத்து கோயிலை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏன் அரசுப் பணத்தில்
கல்லூரி கட்டினால் ஆகாதா? நாங்கள் ஆட்சியில் அனைத்து கல்லூரிகளையும் அரசு பணத்தில்
கட்டினோம். அறநிலையத்துறை பணத்தை எடுத்து கல்லூரி கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?
இதை ஒரு சதிச் செயலாக பார்க்கிறோம். கல்விக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அந்தக்
கல்வி அரசுப் பணத்தில் கொடுக்க வேண்டும் என்று
எடப்பாடி திமுகவின் மீது குற்றம் சாட்டி உள்ளார்.
ஸ்டாலின் ஆட்சியை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்
சிம்ப்ளி வேஸ்ட், ஸ்டாலின் ஆட்சியை எடப்பாடி
சபதம் செய்தார்.
அதிமுகவை மீட்க முடியாத பழனிசாமி தமிழகத்தை மீட்போம் என பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுள்ளதுள்ளார்.
இதுவரை
பாஜகவுக்கு டப்பிங் குரல் கொடுத்த அவர் இப்போது ஒரிஜினல் குரலையே கொடுக்க ஆரம்பித்து
விட்டார். அறநிலைத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்குவதற்கு பிரிவு இருக்கிறது.
தமிழ்நாடு
என்று சொல்லத் தயங்குகின்ற கூட்டத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சேர்ந்துவிட்டார். அதனால் தான் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பயணம் செய்கிறார்.
அதிமுகவை மீட்க முடியாத அவர். எப்படி தமிழகத்தை மீட்பார். எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விட்டது. செய்த
குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவர் தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகு வைத்தார்
என்று தெரிவித்துள்ளார்.
கோயில்
காசில் ஸ்டாலின் பாடசாலை கட்டுகிறார் என்ற
எடப்பாடியின் குற்றாச் சாட்டை தமிழ் நட்டில் உள்ள கல்வியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தம்து
விவாதத்துக்கு பாரதியாரைத் துணைக்கழைத்துள்ளனர்.
'அன்ன
சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
என்ற பாரதியாரின் கவி வரிகளை கெட்டியாகப் பிடித்து அறிஞர்கள் எடப்பாடியை நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கின்றனர்.
என்ன
கொடுமை சரவணா பாடசாலை கட்டுவது ஒரு குற்றமா
என மீம்ஸ்கள் பறக்கின்றன.
திராவிட
மொடல் ஆட்சி என்ற சொற்தொடர் இந்தியாவையே திரும்பிப் பர்க்க அவைத்தது.
திராவிட
மொடல் ஆட்சிக்குப் பதிலாக ஆன்மீக அரசிய என்ற சொற்பதத்தை அண்ணாமலை பிரயோகிக்கத் தொடங்கி
விட்டார்.
தமிழகத்தில்
விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும்; சனாதன தர்மம் காக்க சன்னியாசிகளுடன் பயணிப்பேன்,'' என,
பா.ஜ.,
கோவை
காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின், 31வது ஜெயந்தி
விழா நடந்தது. இதில், சமூக சேவகர்கள், 13 பேருக்கு
விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்குடன்
தமிழகத்தில் பாரதீய ஜனதா கால் பதித்துள்ளது.
இந்த
நிலையில் அண்ணாமலையின் கூற்று அதிமுகவுக்கு சவாலாக அமைந்துள்ளது.
ராமதாஸுக்கும்
மகன் அன்புமணிக்கும் இடையேயான தகராரு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
இருவரும்
ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களை நடத்துகின்றனர்.
அன்புமணி
தனது பெயரைப் பாவிக்கக் கூடாது விரும்பினால்
இனிஷியலைப் போடலாம் என ராமதாஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
பாமக
நிறுவனர் டாக்டர் ராமதாஸிக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸிக்கும் இடையே மோதல் போக்கு
நீடித்து வருகிறது. இந்த மோதல் போக்கு விரைவில் முடிந்துவிடும் என்று பாமகவினர் கூறி
வரும் நிலையில், இந்த மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியின்
முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் மாறி மாறி கூறி வருகின்றனர். அது மட்டும்
இன்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குவதும், அடுத்த
சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்களை அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அன்புமணி
பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது. தேவை என்றால் அன்புமணி எனது பெயரை இனிசியலாக
மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் என் பெயரை யாரும்
பயன்படுத்தக் கூடாது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தசரதன் ஆணையை ஏற்ற ராமர் வனவாசம்
சென்றார். ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக
சிலர் கூறி வருகின்றனர். இந்த ஐந்து வயது குழந்தை தான் மூன்று வருடங்களுக்கு முன்னர்
அன்புமணியை பாமக தலைவர் ஆக்கினேன்
தேர்தலை
நோக்கி அரசியக் கட்சிகள் வியூகம அமைக்கையில் பாமக மட்டும் குடும்பப் பிரச்சனையில் சிக்கித்
தவிக்கிறது.
ரமணி 13/7/25
No comments:
Post a Comment