Monday, July 14, 2025

பிரட்மனின் சாதனைகளை நெருங்கும் கில் 100 வருட சாதனை தகர்க்கப்படுமா?

 

 கிறிக்கெற் உலகின் பிதாமகன் டொன்  பிரட்மன்.அவுஸ்திரேலியரான  பிடரட்மனின் 100 வருட சாதனைகளை   இந்திய அணிக் கப்டனான சுப்மன் கில் உடைக்கும்  வாய்ப்பு உருவாகி உள்ளது.

 இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா  விளையாட உள்ளது. 6 இன்னிங்ச்களில் விளையாட உள்ள கில் பிரட்மன், கோலி, கவாஸ்கர்  ஆகியோரின் சாதனைகளை  முறியடித்து புதிய அவரலாறு படைப்பார் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

 இங்கிலாந்துக்கு எதிரான  முதல் இரண்டு போட்டிகளில்  விளையாடிய சுப்மன் கில் 585 ஓட்டங்கள் அடித்து மிரட்டி உள்ளர். இரண்டாவது போட்டியில்  முதல் இன்னிங்சில்  இரட்டைச் சதமும்  இரண்டாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்களும் அடித்து பல சாதனைகளைத் தகர்த்துள்ளார். 

  டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த கப்டன் என்ற பெருமை பிரட்மனிடம்  இருக்கிறது. 1936 / 37 ஆண்டு ஆஷஸ் தொடரில் பிரட்மன் 810 ஓட்டங்கள் அடித்தார். அதனை முறியடிக்க  கில்லுக்கு  225 ஓட்டங்கள்  மட்டுமே தேவை.  அந்தத் தொரரில் பிரட்மன்  முதன்  முதலாக கப்டனாக களம்  இறங்கினார், சுப்மன் கில்லும் முதன் முதலாக இந்திய  கப்டனாக  களத்தில்  நிற்கிறார்.

 ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் பிரட்மன்  மூன்று சதங்கள் அடித்தார். சுப்மன் கில்  மூன்று சதங்களை அடித்து சமப்படுத்தி உள்ளார்.

1930 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பிரட்மன் 974 ஓட்டங்கள் அடித்தார். 330  ஓட்டங்கள் அடித்தால் கில்  பிரட்மனை  முந்திவிடுவார். அப்போது முதல் இரண்டு போட்டிகளில் பிரட்மன் 394 ஓட்டங்கள் அடித்தார். இரண்டு டெஸ்கலில் கில் 585  ஓட்டங்கள் அடித்துள்ளார்.

 அதி  வேகமாக 11  இன்னிங்ஸ்களில் 1000  ஓட்டங்கள்   அடித்த கப்டன் என்ற பெருமை பிரட்மனிடம்  உள்ளது. 415 ஓட்டங்கள் அடித்தால் அந்தப் பெருமையும்  கில்லிடம் சென்று விடும்.

 ஒரு டெஸ்ட்  தொடரில் ஐந்து சதங்கள் அடித்த சாதனைக்குச் சொந்தக்காரர் மேற்கு இந்தியத் தீவுகளின் வீரரான வால்கோட்.  1955ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு  எதிராக அந்த சாதனை நிலை நாட்டப்பட்டது.

மூன்று சதங்களுடன்  இருக்கும்  கில் அந்தச் சாதனையையும் உடைத் தெறியலாம்.

1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக  பிரட்மன் நான்கு சதங்கள் அடித்தார்.

  ஒரு தொடரில் அதிக  ஓட்டங்கள் அடித்த கப்டன் என்ற சாதனை கவாஸ்கர் வசம் இருக்கிறது. அவர் 732 ஓட்டங்கள் அடித்தார். 144 ஓட்டங்கள் அடித்தால்  அந்த சாதனையும்  கில்லின் வசம் வந்து விடும்.

18 ஓட்டங்கள் மட்டும்  கில் அடித்தால்  இங்கிலாந்தில் ஒரு தொடரில்  அதிக  ஓட்டங்கள் அடித்த ட்ராவிட்டின் சாதனையை   முறியடிப்பார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஜெய்ஷ்வால் அதிக  ஓட்டங்கள் அடித்து முன்னிலையில் இருக்கிறார். அவர் 712 ஓட்டங்கள் அடித்தார். 127 ஓட்டங்கள் அடித்தால் கில்  முந்திவிடுவார்.

இந்தியாவின்  முன்னாள் கப்டன்  கோலி அடித்த 655 ஓட்டங்கள்  என்ற சாதனையைக் கடக்க  இந்தியக் கப்டன்   கில்லுக்கு 91  ஓட்டங்கள் மட்டுமே தேவை.

அதிர்ஷ்டக் காற்று கில் லின்  பக்கம் வீசுகிறது.

 


No comments: