Tuesday, July 22, 2025

எம்.ஜி.ஆருக்கு போட்டியாக‌ களம் இறக்கப்பட்ட முத்து


 தமிழகத்தின் முன்னாள்  முதல்வர் கருணாநிதியின் மகன்  மு,க, முத்து கடந்த  சனிக்கிழமை காலமானார்.

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகந்தான்  மு,க, முத்து. முத்து பிறந்த   பின்னர் உடல் நலக் குறைவால் பத்மவதி காலமானார். தாய் இல்லாமல் பாட்டியுடன் வளர்ந்தவர் மு.க.முத்து.

தனது தகப்பன் முத்துவேலின் ஞாபகார்த்தமாக மகனுக்கு முத்து எனப் பெயரிட்டார் கருணாநிதி.

பாட்டு,நடிப்பு என்பனவற்றில் ஆர்வமாக இருந்த மு.க.முத்து , கட்சிக் கூட்டங்களில் தகப்பன் கருணாநிதியுடன் கலந்துகொண்டார்.

கழக நாடகங்கள் ,இயக்கப்பாடல்கள் என்பனவற்றால் மேடையை கலகலப்பாக்கினார் முத்து.

சினிமாக் கவர்ச்சி முத்துவை ஆட்கொண்டதால் நடிப்பதற்கு ஆசைப்பட்டார். க்ருணாநிதி அதற்கு களம் அமைத்துக் கொடுத்தார்.மு.க.முத்துவின் நடை,உடை,பாவனை அனைத்துல்  எம்.ஜி.ஆரைப் போன்று இருந்ததால்  அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டன.எம்.ஜி.ஆருக்கு எதிராக மகனை கருணாநிதி களம் இறக்கி உள்ளார் என் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், முத்து நடிக்கும்  போது படப்பிடிப்பைப் பார்க்கச் சென்ற எம்.ஜி.ஆர்  , கிளப் அடித்து ஆரம்பித்து வைத்தார்.

எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் வேண்டப்படாதவர்களால்  முன் வைக்கப்பட்ட குற்றச் சாடுகள்  இன்றும் தொடர்கிறது.

எம்.ஜி.ஆரும் , கருணாநிதியும் அரசியல் எதிரிகள்தான்  ஆனால், ஒருவரை ஒருவர் தூற்றி பிரசாரம் செய்யவில்லை.

பூக்கார், பிள்ளையோலிள்ளை,சமையல்காரன், அணையாவிளக்கும் இங்கேயும்  மனிதர்கள்  போன்ற படங்களில் முத்து நடைத்தார்.

அனைத்துப் படங்கலிலும் எம்.ஜி.ஆர் போலவே தோன்றினார்.

மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ நீ மூவேந்த வழி வந்த மன்னவனோ என்ற பாடல் மு.க.முத்துக்காக எழுதப்பட்டது. அது எம்.ஜி.ஆரின்  பாடல் என்ற எண்ணம் அன்றே எழுந்தது.

 நடிப்பில் மட்ட்டுமல்லாது பாட்டிலும் எம்.ஜி.ஆரைப் பின்பற்ரினார் முத்து. படங்கள் தோல்வியடைந்ததால் திரை உலகில் இருந்து முத்து காணாமல் போனார்.

கருணாநிதியுடனான தொடர்பையும்  முத்து துறந்தார். கருணாநிதியுடன் கோபித்துக்கொண்டு அதிமுகவில் சேர்வதற்காக எம்.ஜி.ஆரிடன்  சொன்றார். எம்.ஜி.ஆர்  அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார்.  எம்.ஜி.ஆரிடன் அரசியல் அறம் இருந்தது. இன்றைய அரசியல்வாதிகளிடன் அதனை எதிர்பார்க்க முடியாது.

குடிக்கு அடிமையாகிய முத்து குடும்பதை விட்டு வெளியேறினா. இன்னொரு சகோதரனின் திருமணத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

முத்துவின் நிலையை அறிந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பண உதவி செய்தார். தனது அரசியல் எதிரியாகிய கருணாநிதியின் மகனுக்கு ஜெயலலிதாவும் உதவி செய்தார்.


2009 ஆம் ஆண்டு மீண்டும்தகப்பனான கருணாநிதியுடன் சேர்ந்தார் முத்து. அதன் பின்னர் மாட்டுத்தாவணி என்ற படத்தில் நடித்தார்.

 2018 ஆம் ஆண்டு  கருணாநிதி இறந்தபோதும் அவர் மரணச் சடங்கில் கல்ந்துகொள்ளவில்ல. அடுத்தநாள் இருவரின் துணையுடன் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது உடல்  மெலிந்த உடலுடன் மிகவும் சிரமப்பட்டு நடந்தார்.

 மனைவியின் பெயர்  சிவகாம சுந்தரி.அறிவுநிதி,  மகனும், தேன்மொழி என்ற மகளும் முத்துவின் வாரிசுகளாவர்.

ஸ்டாலினும், கனிமொழியும் தமது நிகழ்ச்சிகளை இரத்துச் செய்து  விட்டு இறுதிக் கிரியைகளில் கலந்து  கொண்டனர். 

No comments: