Tuesday, July 15, 2025

முன்னாள் அமைச்சர் ராஜிதவைக் காணவில்லை

 பட்டாளம் புடைசூழ,பொலிஸார் சல்யூட் அடித்து பாதுகாப்புக் கொடுக்க  கெத்தாகப் பவனி வந்த  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன‌வைக் காணவில்லை என பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். அவரது தொலைபேசி இயங்கவில்லை எனவும்  தகவல் சொல்லியுள்ளனர்.

இலங்கைப் பொலிஸ், புலனாய்வுத் துறை ஆகியவற்றில் நிலை இப்போது தெளிவாகி விட்டது.

புலஸ்தினி,செவ்வந்தி  வரிசையில் ராஜிதவும் காணாமல் போயுள்ளார்.உயர் பொலிஸ் அதிகாரியையும்  இலங்கைப் பொலிஸ்  கொஞ்ச நாட்களாகத் தேடித்திரிந்தது. அவர் கூலாக நீதிம்ன்றத்தில் சரணடைந்தார்.

மிக அண்மையில்மீநீன்பிடி அமைச்சராக  இருந்து அதிகாரம் செய்தவர் ராஜித சேனாரத்ன.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் நடந்த சர்ச்சைக்குரிய மணல் அகழ்வுத் திட்டத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன  விரைவில் கைது செய்யப்படுவார் என செய்திகள் கசிந்தன. அப்போது  மெத்தனமாக இருந்த பொலிஸார் ராஜிதவைக் கோட்டை விட்ட பின்னர் அவரைத் தேடுகின்றனர்.

கிரிந்த  மீன் பிடித்துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு சட்டவிதிகள் வற்றையும் உரிய முறையில் பின்பற்றாமல் வடகொரிய நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் அனுமதி வழங்கியதால் அரசாங்கத்துக்கு 26.3 மில்லியன் நிதி இழப்பீடு ஏற்படுள்ளதாக ராஜிதவின்   மீது குற்றம் சுமந்தப்பட்டது.

விசாரணைக்கு வருமாரும், வாக்குமூலம் வழங்குமாரில் இலஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழு பலமுறை ராஜிதவுக்கு அழைப்பு விடுத்தது.

அந்த அழைப்புகளுக்கு உரிய முறையில் ராஜித பதிலளிக்காமையினால், இன்று நீதிமனறம் அவரை தேடப்படும்  குற்றவாளி  என நீதிமன்றம்  அறிவித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு  அழைப்பு விடுத்தபோதெல்லாம் அவர்  வெளிநாட்டில் இருப்பதாக ராஜிதவின்  வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இலஞ்ச ஆணைகுழு முன்னிலையில் ஆஜராவதைத் தவிர்ப்பதற்கு ரஜித சேனாரத்த கொடுத்த  மருத்துவச் சான்றிதழ்களை  ஏற்க முடியாது என ஆணைக்குழு நிராகரித்தது.

ராஜிதவைக் கைது செய்யும் அதிகாரம் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு உள்ளது.

ஆனால்,இலஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழு  நீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளது. விசாரணையைத் தாமதப்படுத்தவும்,  நீதிமன்றத்தித் தவறாக வ‌ழிநடத்தவும் ராஜித முயற்சிப்பதாக இலஞ்ச ஆணைக்குழு

நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

  

  

No comments: