Sunday, April 19, 2026

10 ஓட்டங்களால் தோற்றது சென்னை


 ஐபிஎல் 2026 தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10ஓட்டங்களால் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில்  வென்ற சென்னை கப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மின்னல் வேகத் தொடக்கம் தந்து,   15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 22 பந்துகளில் 59 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பிறகு ஹென்ரிச் கிளாசன் தனது அதிரடியைத் தொடர்ந்து 39 பந்துகளில் 59 ஓட்டங்கள் சேர்த்தார். சென்னை தரப்பில் ஜேமி ஓவர்டன் , அன்ஷுல் கம்போஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194  ஓட்டங்கள் குவித்தது.

195  ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு ஆயுஷ் மாத்ரே 13 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து அதிரடி காட்டினார்.  க‌ப்டன் ருதுராஜ் 19,சஞ்சு சாம்சன் 7 ,  மேத்யூ ஷார்ட் 34, சர்பராஸ் கான்  25  ஷிவம் துபே 21 ஜேமி ஓவர்டன் ஓட்டங்கள் எடுத்தனர். ஹைதராபாத் பவுலர் ஈஷான் மலிங்கவின் துல்லியமான பந்துவீச்சால் சென்னையின் வேகம் முடக்கப்பட்டது.

கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிரபுல் ஹிங்கே வீசிய அந்த ஓவரில் சென்னை அணியால் 7  ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184  ஓட்டங்கள் எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் ஈஷான் மலிங்க 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

  

No comments: