டெல்லியில் எடுக்கப்படும் முடிவுகளால் தமிழகத்தைக் கட்டுப்படுத்தமுடியாது
இறுதிக் கட்ட தேர்தல் பரப்புரையில் முக்கியத்துவம்
பெறும் தொகுதி மறுவரையறை
முதல்வர் கனவில் எடப்பாடி. எடப்பாடிதான்
முதல்வர் என பாஜக சொல்லவில்லை.
ஸ்டாலினுடன் கைகோர்த்து பிரசாரம் செய்வாரா ராகுல்காந்தி?
இந்திய
நாடாளுமன்றத் தேர்தல் அல்லது தமிழக சட்டசபைத் தேர்தல் எதுவாக இருந்தாலும் திமுக எதிர் அதிமுகவாகவ்ர்ர் இருக்கும்.
ஆனால், இன்றைய தமிழக சட்டசபைத் தேர்தல் டெல்லி வரை வியாபித்துள்ளது. அதிமுக்வின் தலமையிலான கூட்டணி எ நச் சொல்லப்பட்டாலும், முடிவுகள் அனைத்தும் டெல்லியில் அமித்ஷாவின் தலமைமையிலேயேதான் எடுக்கப்பட்டன.
திமுக,
அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் வீத்த்ப்
போவதாகச் சபதம் செய்த தவெக பிரசாரத்தில் தடுமாறுகிறது. விஜய்க்குப் பின்னால் பெரும் கூட்டம் கூடுகிறது. தவெகவும் மற்றைய வேட்பாளர்களான. ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் போன்றோரின்
தேர்தல் பரப்ப்புரைகளில் பெரும் கூட்டத்தைக் காணமுடியவில்லை.
தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவால் தமிழ் நாட்டுக்கு எற்படப்போகும் ஆபத்தைச் சுட்டிக் காட்டிய ஸ்டாலின் தீ பரவட்டும் எனும் கோஷத்துடன் போராட்டத்தை நடத்தினார். திமுகவின் கூட்ட்டணிக் கட்சிகளும் ஸ்டாலினுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கு பற்றின.
தவெக தலைவர்
விஜய் இந்த
மசோதாவை எதிர்க்குக் குரல் கொடுத்துள்ளார். எடப்பாடியும்,
அவரது கூட்டனியில் உள்ள கட்சித் தலைவர்களும் மெளனம்
காக்கின்றனர். தமிழக சட்ட சபைத் தேர்தலுகு இன்னமும் மூன்று நாட்கள் இருக்கும்
வேளையில் பாரதீய ஜனதாவின் இந்தச் செயல் தமிழகத் தேர்த்லில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடும்.
இந்திய
நாடாளுமன்றத்தின்
சிறப்புக்கூட்டத்
தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 16, 2026) நாட்டின் எதிர்கால அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற இன்றைய அமர்வில், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது சுமார் 15 முதல் 18 மணி நேரம் விரிவான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தொகுதி
மறுவரையறை தொடர்பான 131-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தன. மின்னணு முறையிலான வாக்குப்பதிவில் ஏற்பட்ட சில குழப்பங்கள் காரணமாக, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று வாக்குச்சீட்டு (Ballot
Paper) மூலம் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார்.
நீண்ட
இழுபறிக்குப் பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவான வாக்கு விபரம்,
ஆதரவு
வாக்குகள்: 207,எதிர்ப்பு வாக்குகள்: 126,மொத்தம் பதிவான வாக்குகள்: 333,பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா வெற்றிகரமாக மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இது ஒரு அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா என்பதால், இதனை நிறைவேற்ற அவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். தற்போது நிலவரப்படி:
மக்களவையில்
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 293 உறுப்பினர்கள் உள்ளனர்.எதிர்க்கட்சிகள் தரப்பில் 234 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, மசோதாவை இறுதி கட்டமாக நிறைவேற்றுவதில் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி
மறுவரையறையுடன் சேர்த்து மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் இந்த விவாதத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், வரும் காலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எல்லைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் ஒட்டுமொத்த இந்திய அரசியலும் தற்போது நாடாளுமன்றத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
தொகுதி
மறுவரையறை என்பது தமிழ்நாட்டில் நிச்சயம்
பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். வட
மாநிலத்திற்கு என்ன ஆதாயம், தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு என்று திமுக விளக்குவதை பார்க்கும் போது, திமுகவிற்கு
பாஜக வெற்றி வாய்ப்பை
உருவாக்கி கொடுத்தது போல் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2026-க்குப் பிறகு தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை முறைய
வாய்ப்பு இல்லை. தொகுதி
எண்ணிக்கை உயரும், ஆனால் பலம் குறையும். 1971 பாணியில் 2011 மக்கள் தொகை அடிப்படையில் எல்லா மாநிலங்களுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த விரும்புகிறது. எந்தமாநிலத்திற்கு சிக்கல் வரக்கூடாது என்று நினைத்தே 1971ல் என்ன முறை கடைபிடிக்கப்பட்டதோ அதே பாணியில் தான் மக்களவை தொகுதி நிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதன்படி பார்த்தால் தமிழகத்தின் தற்போதைய
எம்பிக்கள் 39-லிருந்து
சுமார் 59 ஆக அதிகரிக்கும். இது பார்க்க உயர்வாகத் தெரிந்தாலும், மொத்த நாடாளுமன்ற பலத்தில் தமிழகத்தின் பங்கு குறையும்.
நாம்
இருவர் நமக்கு இருவர், ஒன்றே
போதும் என மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்கு பாரதீய ஜனதா தமிழகத்துக்குக் கொடுக்கும் பரிசு என்கிறது திமுக. அன்றைய
மத்திய அரசிக் கொள்கைப்படி மக்கள்
தொகையைக் கட்டுப்படுத்தாத உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இடங்கள் மிக அதிகப்படியாக உயரும். , உத்தரப்
பிரதேசத்தின் இடங்கள் 80-லிருந்து 140-க்கும் மேலாக அதிகரிக்கக்கூடும். ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில் (சுமார் 848 இடங்கள் எனில்), வடமாநிலங்கள் மட்டும் நினைத்தால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வரும். அப்போது தமிழகத்தின் 59 இடங்கள் என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது என்கிறது திமுக.
கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, கல்வியில் முன்னேறிய தமிழகத்திற்கு, இடங்களைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசு ஒரு "அரசியல் தண்டனை" வழங்குவதாகவே மக்களிடையே திமுக வலுவாக பிரச்சாரம் செய்கிறது. நடுநிலை வாக்காளர்களை திமுகவின் போராட்டம் கவரும் எனப்தில் சந்தேகம் இல்லை."தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் திட்டமாக இதனை மக்களிடையே கொண்டு செல்ல திமுக எல்லா பலத்தையும் பயன்படுத்துகிறது.
பாஜகவின்
இந்ததிட்டத்திற்கு
அதிமுக துணை போகிறது" என்ற பிம்பத்தை உருவாக்கி வருகிறது திமுக. இது அதிமுக-வை மக்கள் மத்தியில் பலவீனப்படுத்தும் என்பது தான் அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 28 இடங்களில் நிற்கும் பாஜகவிற்குமே இது சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். சொந்த
காசியில் பாஜக சூனியம் வைத்திருப்பதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏனெனில் தமிழகத்திற்கு இடங்கள் 59 ஆகக் கூடினாலும், வடமாநிலங்களில் மிக அதிகமாக கூடும்போது, டெல்லியில் பேரம்
பேசும் சக்தி முற்றிலுமாக அழிந்துவிடும். தேர்தல்
நேரத்தில் பாஜக இப்படி
செய்யும் என எடப்பாடி
பழனிசாமி எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றும், இது அதிமுகவில் கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளையும் இந்தச் சட்டம் பாதிக்கும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
திமுக,
தவெக ஆகியவற்றுக்கு இடையேதான் போட்டி
என விஜய் பிரசாரம் செய்கிறார். ஆனால், தமிழ்நாடு எதிர்
டெல்லி என பிரசாரகளத்தை ஸ்டாலின்
மாற்றி விட்டார். பாரதீய ஜனதாவின் சட்ட மசோதாவும் ஸ்டாலினுக்கு பக்கத்துணையாக இருக்கிறது. வழக்கமாகத் தேர்தல் களத்தில் ஒலிக்கும் 'உள்ளூர்' குறைகளும், பிரச்சனைகளும்
இந்த முறை ஒலிக்கவில்லை. தி.மு.க மேடைகளில் ஒலிப்பது ஒன்றே ஒன்றுதான் - "டெல்லி vs தமிழ்நாடு!" டெல்லி vs தமிழகம்: அறிவாலயத்தின்
இந்தத் தேர்தல் வியூகம் மிகவும் தெளிவானது. ஆளுங்கட்சி மீதான ' எதிர்ப்பு அலை மெல்ல
எட்டிப் பார்க்கும் போதெல்லாம், அதைத் திசைதிருப்ப தி.மு.க கையில் எடுத்திருக்கும் ஆயுதம் 'மாநில சுயாட்சி'. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, நிதிப் பகிர்வு எனப் பட்டியலிட்டு, "தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் டெல்லிதான்" என்கிற வியூகத்தை தி.மு.க வெற்றிகரமாகக் கட்டமைத்திருக்கிறது.
தி.மு.க-வின் இந்த வியூகம் பாமரர்களின் மத்தியிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. இது அரசியல் அல்ல வாழ்வாதாரம் என்ற புத்திசாலித்தனமான
தற்காப்பு ஆட்டம் வாக்குகளைத் திசை திருப்பும் கருவியாக மாறக்கூடும். தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும் மூலவேர் டெல்லியில் இருப்பதாக வியூகத்தை தி.மு.க மிகத் துல்லியமாக வரைந்திருக்கிறது. "நாங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு டெல்லி திருப்பித் தருவது வெறும் 29 பைசா தான்" என்ற முழக்கம், பாமர மக்களிடமும் "நமக்குக் கிடைக்க வேண்டிய காசை மோடி அரசு தரவில்லை" என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்திருக்கிறது. சமீபத்தில்
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காததை, "தமிழக மாணவர்களின் கனவை டெல்லி சிதைக்கிறது" என உரிமைக் குரலாக மாற்றியதில் ஸ்டாலின் ஜொலிக்கிறார்.
மத்திய
அரசைக் கடுஐயாக எதிர்க்கும் அரசியல் தலைவர் ஸ்டாலிந்தான் என்ற கருத்து வடமாநிலக் கட்சித்தலைவர்களிடம் இருக்கிறது. தமிழக மக்களும் ஸ்டாலினைத்த் தவிர வேறி யாரையும் நம்பத்தயாராக இல்லை.திமுகவை கடுமையாக வசைபாடும் விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பாரதீய
ஜனதாவை எதிர்த்து இன்னமும் வாயைத் திறக்கவில்லை.
அதிமுகவை ஒரு
தனிப்படையாகவே திமுக
பார்ப்பதில்லை.
"டெல்லி சொல்வதைக் கேட்கும் அடிமைகள்" என்று முத்திரை குத்துவதன் மூலம், எடப்பாடியின் பலத்தைக் குறைத்து, பிம்பத்தை சிதைக்கிறார்கள். அதிமுக-வை விமர்சிப்பதைக் கூட ஒருவிதமாக "டெல்லியின் கிளை அலுவலகம்" என்ற கோணத்திலேயே கொண்டு செல்வது, நடுநிலை வாக்காளர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது. இன்னொரு பக்கம், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'. ஆரம்பத்தில் இருந்தே விஜய்யை விமர்சிப்பார்கள் என்று பார்த்தால், அறிவாலயம் அமைதி காக்கிறது. விஜய்யை
ஒரு பொருட்டாகவே மதிக்காமல் விடுவதன் மூலம், அவருக்குக் கிடைக்க வேண்டிய 'முக்கியத்துவத்தை' அப்படியே தட்டிப் பறிக்கிறார்கள். "அவர் வரட்டும். அவரும்
டெல்லி ஸ்கிரிப்ட் தான் பேசுவார்" என்ற ரீதியில் ஒரு மெல்லிய கிண்டலோடு நகர்ந்து விடுகிறார்கள்.
"தமிழ்
மண், தமிழ் மொழி, மாநில உரிமை" எனத் தமிழர்களின் சென்டிமென்ட்டைத் தட்டியெழுப்பி, தேர்தலை ஒரு வாழ்வா-சாவா போராட்டமாக மாற்றியது திமுக. தி.மு.க மிகச்சரியாக அறுவடை செய்கிறது. "எதிரி யார்?" என்பதை முடிவு செய்வதில்தான் ஒருவனின் வெற்றி அடங்கியிருக்கிறது. தி.மு.க தன் எதிரியாக எடப்பாடியையோ, விஜய்யையோ நினைக்கவில்லை; நேரடியாக மோடியையும் அமித் ஷாவையும் களமிறக்கி, தமிழகத்தை ஒரு 'கோட்டையாக' மாற்றி நிற்கிறது. இந்த 'டெல்லி எதிர்ப்பு' அலை வாக்காக மாறுமா அல்லது மக்கள் உள்ளூர் பிரச்சினைகளை யோசிப்பார்களா? இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
தவெக
தலைவர் விஜய்
இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
அவர் போட்டியிடும் இரண்டு
தொகுதிகளும் கிறிஸ்தவர்களை திகமாககொண்டவை. கிறிஸ்தவ வாக்குகளைக் குறிவைத்து பாதுகாப்பான
தொகுதிகளை விஜய் தேர்ந்தெடுத்துள்ளார். முன்னதாக ஜெயலலிதா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும்
வெற்றி பெற்றார். பின்னர் ஒரு தொகுதியில் இராஜினாமாச் செய்தார் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
தவெக
வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக காரைக்குடி சென்ற அக்கட்சியின் தலைவர் விஜய், திடீரென சாலையில் இறங்கி, மக்களுக்கு நடுவே சைக்கிள் ஓட்டிச் சென்றார்.
காரைக்குடியில்
தவெக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து விஜய்
பிரசாரம் செய்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்த்து, தவெக வேட்பாளர் பிரபு போட்டியிடுகிறார். திறந்த
வாகனத்தில் ரோடுஷோ நடத்தியபடி விஜய் வந்து பிரசாரம் செய்தார்.
திடீரென
பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி, சைக்கிள் ஓடத் தொடங்கினார். இதனால் அதிக அளவிலான ரசிகர்களும், தொண்டர்களும் விஜய்யை சூழ்ந்து கொண்டனர். பெருத்த கூட்டத்திற்கு நடுவே விஜய் சிரமப்பட்டு சைக்கிள் ஓடினார். ஒரு கட்டத்தில் தடுமாறி கீழே விழப் போன விஜய்யை, பவுன்சர் ஒருவர் தாங்கிப் பிடித்தார். கூட்டம் அதிகமானதால் மீண்டும் பிரசார வாகனத்தில் ஏறி பயணம் செய்ய துவங்கினார் விஜய்.
காரைக்குடியில்
பிரசாரம் செய்வதற்கு பகல் 02.30 மணி வரையில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வந்ததால் அவர் காரைக்குடி திடலுக்கு செல்லத் தாமதமானது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் விஜய் திடலை அடைய முடியாத நிலை ஏற்பட்டதால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து வந்ததால் அவருக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. விஜய் பேசாமல் சென்றதால் அவரது பேச்சை கேட்க பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். விஜய்யை பார்ப்பதற்காக காலை முதலே கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் காத்திருந்தனர்.
விஜய்யின்
சைக்கிள் பயணம், பிரசார பயணத்தால் காரைக்குடி நகரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விஜய் செல்லும் இடங்கள் அனைத்திலும் அதிக அளவிலான மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பொலிஸார் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஏழைப்
பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார்.
சென்னை
நுங்கம்பாக்கத்தில்
உள்ள தனியார் ஹோட்டலில் தவெக தலைவர் விஜய் அக்கட்சியின்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விவசாயி நாராயணன் பெற்றுக்கொண்டார், தொடர்ந்து விவசாயி நாராயணனுக்கு விஜய் சிறப்பு செய்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் தவெக தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.
இந்த
நிகழ்ச்சியில் பேசிய விஜய், “திருக்குறள் நமக்கு ஒரு வழிகாட்டி. எனவே திருக்குறள் சொன்ன அறம், பொருள், இன்பத்தை அடிப்படையாக கொண்டு நம் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அறம் என்றால் நேர்மை, எனவே நேர்மையான அரசுக்கு வாக்குறுகள் இடம்பெற்றுள்ளது. அரசியல், ஆட்சி முறை, வேளாண்மையின் பொருளை உருவாக்கும் வகையில் அரசு இருக்கும். மக்கள் மகிழ்ச்சியோடு இன்பத்துடன் இருக்கும் வகையில் நம் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. எங்கள் தேர்தல் அறிக்கை நேர்மையாக இருக்கும். நாங்கள் ஸ்டாலின் சார் போல பொய்யாக சொல்வதில்லை.
இரு
கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஒரே மாதிரியாகவே உள்ளது. ஒருவர் 10,000 ரூபாய் கொடுத்தால், இன்னொருவர் ரூ.8000 கூப்பன் கொடுக்கிறார். இருவரும் ஒரே தேர்தல் அறிக்கையை பெயரை மாற்றி, கலரை மாற்றி கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறில்லை. நாம் அவர்களைப்போல மக்களை ஏமாற்ற மாட்டோம். எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதைமட்டுமே தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளோம்” என்றார்.
விஜய்
யின் தேர்தல் அறிக்கைக்கு ஏப்ரல் 23 ஆம் திகதி மக்கள் பதிலளிப்பார்கள்.
அண்ணன்
தம்பியாக அரசியலில் பயணம் செய்த ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுகும் இடையில் பாரிய இடைவெளி
விழுந்துள்ளது. விஜய்
யின் கைஅயைப்ப் இடிக்க ராகுல் காந்தி விரும்பினார். கூட்டணி
கைமீறிப் போவதை உணர்ந்த ஸ்டாலின், நேரடியாக சோனியாவுடன் கதைத்து ரகுலுக்குக்
கடிவாளம் போட்டார். வேண்டா வெறுப்பாக ஸ்டாலினுடன் கூட்டணிக்கு ஒப்புதலளித்தார் ராகுல் காந்தி. புதுச் சேரியில் பிரசாரம் செய்த ராகுல் காந்து தமிழகத்தை
எட்டிப் பார்க்கவில்லை. ராகுல் காந்திதமிழகத்தைல் பிரசாரம் செய்வார் என தமிழக காங்கிரஸ் காரர்கள் கூறுகிறார்கள். ராகுல் காந்தி தமிழ்கத்தில் பிரசாரம் செய்வாரா? அப்போடுஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏறுவாரா என்ற மில்லியன் டொலர் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
ராகுல்
காந்தி தமிழகத்தில் தேர்தல் பிராரம் செய்யாமல் ஒதுங்கி இருந்தாலும், பிரசாரம் செய்து ஸ்டாலினுடன் மேடையைப் பகிராவிட்டாலும் பாதிப்பு காங்கிரஸுக்குத்தான். திமுக, அதனால் பாதிக்கப்படப்போவதில்லை.
ரமணி
19/4/26



No comments:
Post a Comment