டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தென்னாபிரிக்காவில் முதலாவது வெற்றியைப் பெற்று வரலாறு படைத்துள்ளது இலங்கை. தென்னாபிரிக்காவில் 1998 ஆம் ஆண்டு முதல் எட்டுப் போட்டிகளில் விளையாடியது இலங்கை. அதில் ஏழு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முரளிதரன் ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றி இது. இலங்கை அணித்தலைவராக டில்ஷான் பொறுப்பேற்றபின் கிடை த்த முதல் வெற்றி.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 338 ஓட்டங்களை எடுத்தது. தென் ஆபிரிக்காவின் அறிமுக வீரர்களுக்கும் இலங்கை வீரர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் பரணவிதாரன டில்ஷான், சங்கக்கார, மத்தியூஸ், மஹேல ஆகியோர் ஆட்டமிழந்ததும் இலங்கை அணி தடுமாறியது. ஆறாவது விக்கட்டில் இணைந்த சமரவீர சண்டிமால் ஜோடி நம்பிக்கையூட்டியது. 37 ஓவர்களுக்கு முகம் கொடுத்த இவர்கள் 111 ஓட்டங்கள் எடுத்தனர். சமரவீர 102 ஓட்டங்களிலும் சன்டிமால் 58 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். டெஸ்ட் வாக்கையிலிருந்து ஓரங்கட்டப்படுவோமோ என்ற நிலையிலிருந்த சமரவீர சதமடித்து தனது திறமையை நிரூபித்தார்.
தென்னாபிரிக்க அணியின் அறிமுக வீரரான லாங்கே 81 ஓட்டங்கள் கொடுத்து ஏழு விக்கெட்களை வீழ்த்தி அறிமுகப் போட்டியில் அசத்திய வீரர்களில் முதலாமிடத்தில் உள்ளார்.
வெலகெதர, ஹேரத் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத தென் ஆபிரிக்கா 168 ஓட்டங்களில் முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. வெலகெதர ஐந்து விக்கெட்களையும் ஹேரத் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
அம்லா 54 ஓட்டங்களையும் ஸ்ரெய் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் எடுத்தனர். ஏனையோர் குறைந்த ஓட் டங்களையே எடுத்தனர். நான்காவது இணைப்பாட்டத்தில் ஜோடி சேர்ந்த ஓடிய ஏ.டீ.வில்லியர்ஸ், அம்லா ஜோடி அதிகபட்Œமாக 76 ஓட்டங்களை எடுத் தது. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 279 ஓட்டங்கள் எடுத்தது. சங்ககார 108 ஓட்டங்களும் சண்டிமால் 54 ஓட்டங்களும் எடுத்தனர். 6ஆவது இணைப்பாட்டத்தில் ஜோடி சேர்ந்த சண்டிமால், சங்கக்கார ஜோடி 27 ஓவர்களுக்கு முகம் கொடுத்து 104 ஓட்டங்கள் எடுத்தது. டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சண்டிமால் தனது இருப்பை உறுதி செய்தார்.
450 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்கா ஹேரத்தின் பந்தைச் சமாளிக்க முடியாது 241 ஓட்டங்களில் வீழ்ந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 208 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் தென்னாபிரிக்காவும் இலங்கையும் தலா ஒரு வெற்றியைப் பெற் றன. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென்ஆபிரிக்கா இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இலங்கை அணி வெற்றிபெற்று நம்பிக்கையுடன் உள்ளது.
இம்மைதானத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென் ஆபிரிக்கா வெற்றி பெறவில்லை. டேர்பன் மைதான ராசி தென்னபிரிக்காவுக்கு எதிராகச் சதி செய் தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகிறது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 02/01/12
No comments:
Post a Comment