Monday, January 9, 2012

உற்சாகத்தில் ஜெயாவின் விசுவாசிகள்கலக்கத்தில் ச‌சியின் ஆதரவாளர்கள்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டிப் படைத்த சசிகலாவும் அவரது பரிவாரங்களும் வெளியேற்றப்பட்டதால் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது அவருடன் தோளோடு தோள் நின்று கட்சியை வளர்த்த பலர் இன்று அரசியலை விட்டு ஒதுங்கி விட்டார்கள். ஒரு சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்கள்.
சசிகலா செய்யும் தகிடு தத்தங்களை வெளிப்படையாகப் பேசிய பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட சிலர் மட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் முக்கிய பொறுப்பு எதுவும் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்க்காத பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர் என்ற சலுகையுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் அமைச்சரான சட்டமன்ற உறுப்பினரான @மயராக உள்ளவர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களாக சசிகலாவின் ஆசீர்வாதம் பெற்ற பலர் உள்ளனர். அரசியல் அனுபவம் இல்லாத அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்ளாத பலர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களை இனம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி. ஆரின் அமைச்சரவையில் மிக முக்கிய பதவி வகித்தவர் கே.ஏ. செங்கோட்டையன். எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் சசிகலாவின் அகோரப் பார்வை இவர் மீது பட்டதனால் முக்கியத்துவமல்லாத அமைச்சராக உள்ளõர். தமிழக அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்புள்ள பொதுப் பணித்துறை அமைச்சராக கே.வி.ராமலிங்கம் என்பவர் பதவி வகிக்கின்றார்.
சசிகலாவின் கோஷ்டியைச் சேர்ந்த ராவணனின் சிபார்சிலேயே கே.வி. ராமலிங்கம் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படும் அப்போது பொதுப்பணித் துறையிலிருந்து கே.வி. ராமலிங்கம் தூக்கி அடிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவரைப் போன்றே சசிகலா கோஷ்டியில் உள்ள பலரின் ஆசீர்வாதத்துடன் அனுபவம் இல்லாத பலர் அமைச்சர்களாக உள்ளனர்.
சசிகலாவைப் பிரிந்து ஜெயலலிதா இருக்கமாட்டார். இந்தப் பிரிவு நிரந்தரமானதல்ல என்று ஒரு சிலர் கருதினார்கள். அதே போன்று ஜெயலலிதாவை நம்பி புருஷனை கைவிட்ட சசிகலாவும் நீண்ட நாட்களுக்கு ஜெயலலிதாவைப் பிரிந்து இருக்க மாட்டார் என்ற கருத்து நிலவியது. பொதுக் குழுவில் ஜெயலலிதா நிகழ்த்திய ஆவேசப் பேச்சு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது விசுவாசமில்லாத துரோகிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று உணர்ச்சி வசப்பட ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இந்த ஆவேசப் பேச்சினால் சசிகலாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சந்தோசமடைந்துள்ளனர்.

கட்சிக்குள் உருவாக இருந்த சூறாவளியை முளையிலேயே கிள்ளி எறிந்த ஜெயலலிதாவுக்கு தானே புயல் பலத்த அடியை உண்டாக்கியுள்ளது. தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட நிவாரணத்தில் குறைபாடு உள்ளதாகவும் குறைந்தளவு நிவாரணமே வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. கருணாநிதியும் விஜயகாந்தும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். நிவாரணம் வழங்குவதற்காக மேலும் உதவ வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளõர் ஜெயலலிதா.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ‹றா வளியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்துள்னர். மத்திய அரசும் தமிழக அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முன் வந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்தின் கட்சி ஆகியவை தம் பங்குக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.
சங்கரன் கோவில் இடைத் தேர்தலுக்கான நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வைகோவின் மறுமலர் ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகி வருகிறது. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் மாறி மாறி நம்பி மோசம் போன வைகோ சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தன் கட்சியின் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க உள்ளன. ஜெயலலிதாவும் கருணாநிதியும் அசியலில் பாம்பும் கீரியும் போல் இருந்தாலும் வைகோவை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளார்கள்.
சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோற்கடிக்கப்பட வேண்டும். அதன் மூலம் வைகோவின் அரசியல் வாழ்வு இன்னும் கீழே போக வேண்டும் என்றே இருவரும் விரும்புகின்றனர்.
சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற வேண்டும் என்று ஜெயலலிதா கருணாநிதி, வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் முனைப்புக் காட்டுவர். சங்கரன் கோவில் வைகோவுக்குச் சாதகமான தொகுதி என்றாலும் வைகோவையே குப்புற விழுத்திய தொகுதி தமிழக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டாலும் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக களமிறங்குவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் துக்குச் சாதகமாக அமையலாம். இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது வழமை. ஆகையினால் எதுவித பதற்றமும் இன்றி உள்ளார் ஜெயலலிதா.
வர்மா

சூரன்,ஏ,ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு08/01/2


No comments: