Tuesday, January 10, 2012

ஆண்டின் முதல் தொடரை வென்றது தென். ஆபிரிக்கா

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா தொடரைக் கைப்பற்றியது. முதல் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 10 விக்கெட்களினால் வெற்றிபெற்றது. இலங்கை மயிரிழையில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. ஸ்மித், பீற்றர்ச‌ன் @ஜாடி அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தது. இவர்களின் அதிரடி அதிகநேரம் நீடிக்கவில்லை. 16 ஓட்டங்கள் எடுத்த ஸ்மித் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்லாவும் 16 ஓட்டங்களில் வெளியேறினார். இரண்டு விக்கெட்களையும் பிரசாத் கைப்பற்றினார்.
இரண்டு விக்கெட் களை இழந்து 56 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை பீற்றர்சனுடன் கலிஸ் ஜோடி சேர்ந்தõர். இவர்கள் இருவரும் இணைந்து இலங் கையின் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கினர்.
பீற்றர்சன், கலிஸ் இருவரும் இணை ந்து 49.2 ஓவர்கள் விளையாடி 205 ஓட்டங்களை எடுத்தனர். 109 ஓட்டங்கள் எடுத்த பீட்டர்சன் வெலகெதரவின் பந்தை டில்ஷானிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். கலிசுடன் ஏ.பி.டி.வில்லியர்ஸ் இணைந்தார். இந்த ஜோடியும் இலங்கை பந்து வீச்சை சிதறடித்தது. கலிஸ் இரட்டைச் சதமடித்தார். ஹேரத்தின் பந்தை மத்தியுஸிடம் பிடி கொடுத்த கலிஸ் 224 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஏ.டி.பி.டி.வில்லியஸ். ரு@டால் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது. இவர்களின் அதிரடியைக் கட்டுப்படு த்த முடியாது இலங்கை வீரர்கள் தவித்தனர். 580 ஓட்டங்கள் எடுத்தபோது தென்னாபிரிக்கா ஆட்டத்தை நிறுத்தியது. இலங்கையை துடுப்பெடுத்தாடும் படி பணித்தது. வில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களும் ரு@டா ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் எடுத்தனர். 139 ஓவர்கள் பந்து வீசிய இலங்கை வீரர்கள் நான்கு உதிரிகளை மட்டுமே விட்டுக் கொடுத்தனர். 580 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 239 ஓட்டங்கள் எடுத்தது. டில்ஷான், திரிமானே ஜோடி 70 ஓட்டங்கள் எடுத்தது. ஏனைய ஜோடிகள் அதனைவிடக் குறைந்த ஓட்டங்களையே எடுத்தன. டில்சான் 78, சங்கக்கார, மத்தியூஸ் தலா 35 ஓட்டங்கள் எடுத்தனர். ஏனையோர் அதனை விட குறைந்த ஓட்டங்களையே எடுத்தனர். இலங்கை அணியின் முதலாவது ஓட்ட எண்ணிக்கை குறைவாக இருந்ததனால் தொடர்ந்து 2ஆவது இனிங்ஸையும் தொடர்ந்து சமரவீர,மத்தியூஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தினால் இலங்கை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது. இலங்கை நான்கு விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஐந்தாவது விக்கெட்டில் இணைந்த சமரவீர, மத்தியூஸ் ஜோடி 142 ஓட்டங்கள் எடுத்தது. மத்தியூஸ் 63 ஓட்டங்கள் எடுத்தõர். சமரவீர ஆட்டமிழக்காது 115 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 322 ஓட்டங்கள் எடுத்தது. கலிஸ் ஆட்ட நாயகனõகவும் வில்லியம் தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
தென் ஆபிரிக்காவை விட இரண்டு ஓட்டங்கள் அதிகமாக இலங்கை எடுத்ததால் இன்னிங்ஸ் தோல்வி தவிர்க்கப்பட்டது. பிரசாத் வீசிய பந்தில் பீற்றர்ச‌ன் ஒரு ஓட்டம் எடுத்தார். இரண்டாவது பந்து @நா@பாலானது. ஒரு நிமிடத்தில் தென்ஆபிரிக்கா வெற்றி பெற்றது.
ரமணி


சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ் 03/01/12

No comments: