Tuesday, April 3, 2012

திரைக்குவராதசங்கதி 25

தமிழ்த்திரை உலகில் வித்தியாசமானபடங்களைத் தந்தவர்களில் ஒருவர் டி.என்.பாலு அவர் தயாரித்து இயக்கிய "சட்டம்என் கையில்' என்றபடம் பல நாட்களைத்தாண்டி வெற்றிகரமாக ஓடியது. அப்படத்தின்நூற்றாண்டு விழா 21.10.1978 இல்நடைபெற்றது. அப்படத்தில் நடித்தவர்களுக்கும் படத்தின் வெற்றிக்குக் காரணமாகஇருந்தவர்களுக்கும் கலைஞர் கருணாநிதியின் கையால் விருது வழங்க டி.ஆர்.பாலுஏற்பாடு செய்தார்.தமிழக முதல்வராக அன்று வீற்றிருந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆருக்கு அழைப்புக் கொடுப்பதற்காக முதல்வர் அலுவலகத்தைத்
தொடர்பு கொண்டு பலமுறை முயற்சித்தார்டி.என்.பாலு. முதல்வர் அலுவலகத்திலிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருக்கையில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த கருணாநிதிகையால் விருது வழங்கப்படுவதையும்,அந்த விழாவுக்கு முதல்வர் விருந்தினராகச்செல்வதையும் முதல்வர் அலுவலகம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்தான் இந்தஇழுத்தடிப்பு நடைபெற்றது
.முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்திக்க முதல்வர்அலுவலகம் ஒப்புதல்தராததால் சோர்வடையாத டி.என்.பாலு, அழைப்பிதழைத் தபால்மூலம் அனுப்பி வைத்தார். சட்டம் என்
கையில் படத்தின் நூறாவது நாள் விழா நடப்பதற்கு முதல் நாள் இயக்குநர் டி.என். பாலுவின் வீட்டினுள் புகுந்த பொலிஸார் மதுவிலக்கு சட்டப்படி அவரைக் கைது செய்தனர்.
டி.என்.பாலு கைது செய்யப்பட்டதன் பின்னணிஎன்னவென்று அனைவருக்கும் தெரியும். காலையில் டி.என்.பாலு விடுதலைசெய்யப்பட்டபோதும் மீண்டும் அவரைக்கைது செய்ய பொலிஸார் முயற்சித்தனர்.ஆனால் டி.என்.பாலு தலைமறைவாகிவிட்டார். விழா நடைபெறுமா என்ற எண்ணம்ஏற்பட்டது. என்றாலும் விழா திட்டமிட்டபடிநடைபெறும் என்று விழா ஏற்பாட்டாளர்கள்அறிவித்தனர். இயக்குநரை பொலிஸார்தேடுகின்றனர். இயக்குநர் இல்லாமல் விழாநடக்குமா என்ற கேள்விக்கும் இயக்குநர்இல்லையென்றாலும் நூறாவது நாள் விழா
திட்டமிட்டபடி நடைபெறும் என்று விழாஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
திட்டமிட்டபடி விழா ஆரம்பமானது. அப்போது எங்கிருந்தோ இயக்குநர் டி.என்.பாலுமேடையில் தோன்றினார். கலைஞர்களும்,பார்வையாளர்களும் உற்சாகமடைந்தனர்.
தம்மால் தேடப்படும் இயக்குநர் டி.என்.பாலு மேடையில் இருக்கும் செய்தி பொலிஸாரின் காதுக்கு கிட்டியது. அவரைக் கைதுசெய்வதற்கான ஏற்பாட்டுடன் பொலிஸார்
விழா மண்டப வாசலில் தயாராக இருந்தனர்.கலைஞரின் கையால் கலைஞர்களுக்குவிருது வழங்கும் நிகழ்ச்சிசிறப்பாக முடிந்தது. அந்த மண்டபத்தில் இருந்தவர்கள் எதிர்
பார்த்த கிளைமாக்ஸ் மாறியது.இயக்குனர் டி.ஆர். பாலுவைகைது செய்வதற்கு பொலிஸ்மண்டப வாசலில் காத்திருந்தபோது அவர் பின் வாசலால் சென்றுவிட்டார். இதனை சட்டம் என்
கையில் டைரக்டர் சட்டத்தை தன்கையில் எடுத்துக் கொண்டு போய்விட்டார் என கலைஞர் வேடிக்கையாக விழாவில் குறிப்பிட்டார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாஸன் எழுதிய வாழ்க வாழ்கவே வளமார் நமதுதிராவிட நாடு என்றபாடல் தமிழகத்தில்எங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.அப்பாடலினால் கவரப்பட்டகலைஞர் தான் வசனம் எழுதும் "பராசக்தி' என்ற படத்தில் அப்பாடலைச் சேர்க்கவிரும்பினார்.அப்பாடலின் உரிமையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசனிடமிருந்து பெறும் பொறுப்பையும்ஏற்றுக் கொண்டார்.புதுவையில் உள்ள புரட்சிக்கவிஞரின் இல்லத்துக்கு கலைஞர்சென்ற போது அவரை அன்புடன் அழைத்து நலம் விசாரித்தபின்னர் கலைஞர் வீடு தேடி
வந்த காரணத்தைக் கூறினார்.பராசக்தி படம் பற்றியகதையையும் அதற்கு வசனம்தான் எழுதுவதாகவும் அப்படத்தில் அவர் எழுதிய வாழ்கவாழ்கவே வளமார் திராவிடநாடு என்ற பாடல் அப்படத்தில்இடம் பெற வேண்டும் என்று தாம்விரும்புவதாகக் கூறினார்.புரட்சிக் கவிஞரின் பாடலுக்குரியபணத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுத்தருவதாகவும் கலைஞர் உறுதியளித்தார்கலைஞரின் வேண்டுகோளைச்செவிமடுத்த புரட்சிக் கவிஞர் அதிர்ச்சியும் ஆனந்தமுமடைந்தார். திராவிடநாடு என்ற சொல் நாடகம், பாடல் சினிமா ஆகிய துறைகளில் தணிக்கை செய்யப்பட்டிருந்த அக்காலத்தில் திராவிடத்தைவாழ்த்தும்பாடல் சினிமாவில்வருமா என்ற ஐயம்புரட்சிக்கவிஞருக்குஏற்பட்டது.கலைஞரின் வேண்டுகோளை ஏற்ற புரட்சிக்க
விஞர் அப்பாடலுக்கு பணம் வேண்டாம்என்றும் அதற்காகத்தான் பணம் தரத் தயாராக இருப்பதாகவுமகூறினார்.பராசக்தி படத்தில்புரட்சிக்கவிஞரின்பா டல்ஒலிப்பதி வுசெய்யப்ப
டும்போதுஅ வ ரு ம்அங்கு இருக்கவேவ ண் டு ம்என்று அழைப்புவிடுத்தார்கள். சேலத்தில் உள்ள மார்டன்தியேட்டரில் ஒரு பாடல்எழுதிக் கொடுத்து விட்டு
புரட்சிக் கவிஞர் நேரே சென்னைக்குச்சென்றார். சென்னையில் உள்ளஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு அவரை அழைத்துச்சென்றார் கலைஞர்.கலைஞரும், புரட்சிக் கவிஞரும் சென்ற
கார் ஏ.வி.எம். ஸ்ரூடியோ வாசலுக்குச் சென்றபோது அங்கே சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவர்கள் சென்ற கார் வாசலில் நிறுத்தப்பட்டது.எதற்காக கார் நிறுத்தப்பட்டது என்று கேட்டபோது பாடல் ஒன்று ஒலிப்பதிவாகிறது.கரின் சத்தம் ஒலிப்பதிவைப் பாதிக்கும்என்று கூறப்பட்டது.வாசலில் கார்நிறுத்தப்பட்டு ஒலிப்பதிவுக்குகாரின் சத்தம் இடைஞ்சல் என்று கூறப்பட்டதும். புரட்சிக்கவிஞருக்கு கோபம் எல்லைமீறியது. "அப்படி என்ன பெரிய ஒலிபதிவுக்கருவி' என்று மறித்தவரைக் கோபத்துடன்கேட்டார்.புரட்சிக்கவிஞரை கலைஞர் சமாதானப்ப
டுத்தினார். அப்பொழுதுதான் தனது மனதைத்திறந்து கோபத்துக்கான காரணத்தைக்கூறினார் புரட்சிக்கவிஞர்.சேலத்தில் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தேன். "கமழ்ந்திடும் பூவிலெல்லாம் தேனருவி..' என்று ஒரு பாடலை எழுதிக் கொடுத்தேன். அந்த ஒலிப்பதிவாளர் பாடல் வரியைமாற்றச் சொன்னார். ஏனென்று கேட்டபோதுஅந்த ஒலிப்பதிவுக்கருவி "ழ' தரத்தை ஒலி
ப்பதிவு செய்யாதாம். ஆகையினால் அந்தஎழுத்துக்காக வரியையே மாற்றச் சொன்னார். பின்னர்தான் "குலுங்கிடும் பூவில் எல்லாம்..' என மாற்றிக் கொடுத்தேன்' என்றார்.
புரட்சிக் கவிஞரின் கோபமும் நியாயமானதுதான். என்றாலும் அப்பாடல் பழைய ரசிகர்களின் மனதில் இன்றும் ரீங்காரம் இடுவதும் உண்மைதான்.
ரமணி
மித்திரன் 26/08/2006

No comments: