""காவியமா? நெஞ்சில் ஓவியமா? அதன் ஜீவிதமான? தெய்வீகக் காதல் சின்னமா?''
காற்றினிலே மிதந்து வந்த அந்தப் பழைய பாடல் ராகேஷின் தூக்கத்தைக் கலைத்தது. கட்டிலின் இடதுபுறமாக இறங்கிய ராகேஷ் ஐந்து அடிகள் நடந்ததும் கையை மெதுவாக நீட்டி சுவரைத் தடவி திரைச் சீலையை இழுந்தான்.
திரைச்சீலையால் மறைக்கப்பட்ட அந்தப் பிரமாண்டமான படம் பளிச்செனத் தெரிந்தது. மூன்றடி பின்னே நகர்ந்து இரண்டு கைகளையும் மார்பிலே கூப்பியபடி கண்களைத் திறந்தான் ராகேஷ். காலையில் எழுந்ததும் சுவரில் உள்ளஅந்தப்படத்தை சுமார் பதினைந்து நிமிடங்கள் பார்த்தபின்பே தனது வழமையான பணிகளை அவன் ஆரம்பிப்பான்.
ராகேஷைத் தேடிவந்த அவனது நண்பன் நந்தன் ஜன்னலினூடாக அந்தக் காட்சியைக்கண்டதும் அப்படியே சிலையாக நின்றான். நந்தனின் கண்களில் நிறைந்த நீர் அவனை அறியாது கன்னத்தில் விழுந்தது.
சுவரில் இருந்த சித்திரத்தை வணங்கிய பின் நந்தனைக் கண்ட ராகேஷ் கதவைத் திறந்தான். கண்களைக் துடைத்தபடிராகேஷின் அறைக்குள் நுழைந்த நந்தன் அந்தக் சுவரோவியத்தைப் பார்த்து மானசீகமாக வணங்கினான்.
ராகேஷ் குளியறைக்குள் நுழைந்தான்.
இலங்கையில் மிகக் சிறந்த ஓவியர்களில் ராகேúம் ஒருவன். அவனுடைய ஓவியங் களை விலை கொடுத்து வாங்குவதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் போட்டிபோடு வார்கள்.
ராகேஷின் நண்பன் நந்தனும், ராகேஷும் ஒரே பாடசாலையில் படித்தவர்கள்.
கொழும்பிலே வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். வீடொன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். விடுமுறை நாட்களில் ஓவியம் வரைவதற்காக ராகேஷ் வெளியூர் போகும் போது நந்தனும் அவனுடன் செல்வான்.
இலங்கையின் பிரபலமான சஞ்சிகையில் வெளியாகும் தொடர் கதைக்கு ராகேஷின்ஓவியம் உயிர் கொடுத்துவருகிறது. அந்தத் தொடர் கதையின் நாயகனும், நாயகியும் பேராதனைப் பூங்காவுக்குச்செல்வதாகக் கதையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
நாயகனும், நாயகியும் சந்திக்கும் இடத்தைப் பார்த்து ஓவியம் வரைவதற்காக ராகேஷ் பேராதனைக்குச் சென்றான்.
நந்தனும் ராகேஷுடன் சென்றான். ராகேஷ் ஓவியம் வரையும் போது நந்தன் பூங்காவைச் சுற்றிப்பார்த்தான். பேராதனை யில் உள்ள ராகேஷின் நண்பன் ஒருவன் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். ஓவியம் வரைந்ததும் விருந்துக்குச் செல்வதாக இருவரும் தீர்மானித்திருந்தனர்.
ஓவியம் வரைவதில் ராகேஷ் மும்முரமாக இருந்தான். பூங்காவைச் சுற்றிப் பார்த்த நந்தன் தனக்குத்தலைவலிப்பதாகவும், விருந்துக்கு வராது அறையில் ஓய்வெடுக் கப் போவதாகவும் கூறிச்சென்றான்.
நந்தன் போவதைப் பார்த்துக் கொண்டிருந் தான் ராகேஷ்.
உண்மையிலேயே நந்தனுக்குத் தலையிடி இல்லை என்பதும் அவன் வேறு ஒரு ssஇடத்துக்குப் போகிறான் என்பதும் ராகேஷுக்குத் தெரியும். நந்தனைக் திருத்துவதற்கு ராகேஷ் எவ்வளவோ முயற்சி செய்தான். நந்தன் திருந்தக் கூடிய எந்தவிதமானஅறிகுறியும் அவனுக்குத் தெரியவில்லை.
நண்பனின் வீட்டில் விருந்துண்ட ராகேஷ் இரவு ஒன்பது மணிக்கு விடுதிக்குச் சென் றான். அறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவன் எதிர்பார்த்தது போன்று நந்தன் இன்னமும் அறைக்குவரவில்லை என நினைத்தான். என்ன செய்வதென ராகேஷ்யோசித்துக்கொண்டிருக்கையில் அறைக்குள் யாரோ நடமாடுவது போன்ற சத்தம் கேட்டது.
ராகேஷ் கதவைதட்டிவிட்டு காத்திருந்தான். கதவைத் திறந்த நந்தன்,ராகேஷைக் கண்டதும் திகைத்து விட்டான். பத்துமணிக்குப் பின்னர் தான் ராகேஷ் வருவான் என்று நந்தன் எதிர்பார்த்திருந் தான். ஒன்பது மணிக்கு ராகேஷ் வருவான் என நந்தன் எதிர்பார்க்கவில்லை. வாசலை மறைத்துக் கொண்டு நந்தன் நின்றான்.
அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற ராகேஷ் அதிர்ச்சியில் உறைந்தான்.
அரைகுறை ஆடையுடன் இருந்த பெண் குளியறைக் குள் ஓடி ஒளிந்தாள். அரை குறைஆடையுடன் இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணை ராகேஷ் கண்ட தில்லை. தன் அந்தரங்க லீலையை ராகேஷ் கண்டு விட்டான் என்ற கலகத்தில் செய்வதறியாதுதவித்தான் நந்தன். எதுவும் பேசாது அறைக்கு வெளியே சென்று மாடிப்படி அருகே நின்றான் ராகேஷ். தனக்குப் பின்னால் யாரோ நடந்து வரும் ஓசைராகேúக்குக்கேட்டது.
அந்தச் சத்தம் மாடிப் படியில் இறங்கும் என்று எதிர்பார்த்தான் ராகேஷ். ராகேஷுக்குப் பின்னால் நின்ற அந்தக் காலடிச் சத்தம் தொடரவில்லை சுமார் ஒரு நிமிடத்தின் பின் திருப்பிப் பார்த்தான் ராகேஷ். அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த பெண் மலங்க மலங்க முழித்தபடி நின்றாள். அந்தப் பெண்ணின் கண்களைப்பார்த்தான் ராகேஷ். அந்தக் கண்களில் ஆயிரம் ஓவியங்கள் தெரிந்தன. கற்பனையில் மிதந்த ராகேஷ் தன்னிலை அடைந்தபோது எதிரே அப்பெண் இல்லை. சற்று தூரத்தில் நந்தன் நின்றான்.
சுதாகரித்துக்கொண்ட ராகேஷ் மாடிப் படியால் விறுவிறு என இறங்கினான்.
ராகேஷின் நடவடிக்கையால் அதிர்ச்சிய டைந்த நந்தன், ராகேஷைத் தொடர்ந்துசென்றான். அந்தப் பெண்ணைத் துரத்திச் சென்ற ராகேஷ் அவளிடம் ஏதோ கூறினான்.
அவள் பலமாக தலையை ஆட்டி மறுத் தாள். கெஞ்சுவது போல் ராகேஷ் ஏதோ கூறினான்.
சில நிமிடங்களில் சம்மதத்துக்கு அறிகுறியாக தலையை மேலும் கீழும்ஆட்டினாள் அவள். இந்தக் காட்சியைத் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த நந்தன் பதற்றமடைந்தான்.
பெண்கள் விடயத்தில் மிகவும் பலவீன மானவன் நந்தன் . பெண்களுக்கு மிகவும்மரியாதை கொடுத்து அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பவன் ராகேஷ்.
இப்படிப்பட்ட ராகேஷ் ஒரு விபச்சாரி யிடம் கெஞ்சிக் கதைத்ததை நம்ப முடியாது பார்த்தான் நந்தன். ராகேஷ் முதுகில் தட்டியதும் சுயநினைவு அடைந்த நந்தன். அவனிடம் பலகேள்விகளைக் கேட்டான். அந்தப் பெண்ணுடன் கதைத்த விசயம் ஒன்றையும் ராகேஷ் வெளிப்படுத் தவில்லை. அன்று இரவு வழமைக்கு மாறாக ராகேஷ் நேரத்துடன் படுத்துவிட்டான். தூக்கம் வராது புரண்டுபடுத்த நந்தன், நிம்மதியாக உறங்கும் ராகேஷைப் பார்த்தான்.
கொழும்புக்குச் செல்வதற்காக ராகேஷும், நந்தனும் தமது பொருட்களுடன் தயாராகும் போது அழைப்புமணி அடித்தது. கதவைத் திறந்த நந்தன் சிலையாக நின்றான். அவன் எதிரில் அந்தப் பெண் அவளின் கையில் ‹ட்கேஸ், தோளிலே ஒரு பை.
""நேற்று இரவு உனக்குத் தரவேண்டிய காசைத் தந்துவிட்டேன். இப்போ ஏன்வந்தாய்'' என்று கோபமாகக் கேட்டான் நந்தன். மெல்லிய புன்னகை ஒன்றுஅவளிடமிருந்து பதிலாக வந்தது.
""நான் தான் வரச் சொன்னேன்'' நந்தனின் பின்னால் நின்ற ராகேஷ் உறுதியாகக் கூறினான்.
"உனக்கென்ன பைத்தியமா? "ராகேஷின் மீது சீறிப் பாய்ந்தான் நந்தன்.
இவளைப் பற்றிய சகல விசயங்களும் தெரிந்து கொண்டுதான் வரச் சொன்னேன். இப்போ இவளுக்கு நான் வைத்த பெயர் வதனி. எங்களுடன் கொழும்புக்கு வருகிறாள்.
லேடீஸ் ஹொஸ்டல் ஒன்றில் இவளைச் சேர்க்கப் போகிறேன். என்று நிதானமாகக்கூறினான் ராகேஷ்.
அவளைக் கூட்டிக்கொண்டு போகக் கூடாது என்பதற்கான பல காரணங்களைக் கூறினான் நந்தன். அவை ஒன்றையும் ராகேஷ் ஏற்றுக் கொள்ளவில்லை. வதனியை கொழும்புக்கு கூட்டிச் செல்வதில் உறுதியாக இருந்தான் ராகேஷ். ராகேஷ், நந்தன், வதனிமூவரும் கொழும்பு நோக்கிச் சென்றனர். பிரயாணத்தின்போது வழிநெடுக கலகலப் பாக இருந்தது. நந்தன் அன்று அமைதியாக இருந்தான். எப்பவும் அமைதியாக இருக்கும் ராகேஷ் கலகலப்பாக இருந்தான். ஒவ்வொரு இடத்தையும் அருகே இருந்த வளிடம் விளக்கமாகக் கூறினான். அவன் கூறிய பல விடயங்கள் வதனிக்குப் புதியனவாக இருந்தன.
கொழும்பு பஸ் நிலையத்தில் இறங்கிய நந்தன் வீட்டுக்குச் சென்றான். ராகேஷ், வதனியை ஹொஸ்டலில் சேர்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றான்.
ராகேஷ்! வழமையை விட உற்சாகமாக இயங்கினான். ஏதோ கடமைக்காக நந்தனின் அன்றைய பொழுது கழிந்தது. ராகேúடன் முகம் கொடுத்துப் பேசவில்லை. ராகேஷ் அந்தப் பெண்ணைக் கொழும்புக்கு கூட்டி வருவதற்கு தனது சபலம்தான் காரணம் என்ற குற்ற உணர்வு நந்தனை வாட்டியது. இரவு முழுவதும் நித்திரையின்றித் தவித்தான். எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக தூங்கினான் ராகேஷ்.
வழக்கத்துக்கு மாறாக அதிகாலை யில் எழுந்தான் ராகேஷ். ராகேஷின் செயல்களைபார்த்தபடி கட்டிலில் படுத்தி ருந்தான் நந்தன். சிறிது நேரத்தில் ஆட்டோ ஒன்று வந்து அவர்களு டைய வீட்டு வாசலில் நின்றது. ஆட்டோவிலிருந்து இறங்கி வந்தாள் வதனி. வதனியைக் கண்டதும் நந்தனின் மனம் பதைபதைத்தது.
இந்த வேளையில் இவள் ஏன் வந்தாள்? என்று அவன் மனம் கேட்டது. வதனி உள்ளே வரமுன்னர் "நான் வெளியே போகிறேன். திரும்பி வரத் தாமதாகும்' எனக்கூறிவிட்டு நந்தனின் பதிலுக்கு காத்திருக்காது வெளியே சென்றான் ராகேஷ்.
தினமும் காலையில் வதனியுடன் செல்லும் ராகேஷ் சில நாட்கள் நள்ளிரவு வீட்டுக்குத் திரும்புவான். இதைப்பற்றி நந்தன் பேச முற்பட்டபோது உரிய பதிலளிக்காது கதையை வேறு திசைக்கு மாற்றுவான் ரா@கஷ். ராகேஷின் சம்மதத்துக்காக அவனது முறைப்பெண் ஊரிலே காத்தி ருக்கிறாள். சமூகத்தினால் ஒதுக்கப்பட்ட பெண்னுடன் ராகேஷ் இரவு பகலாக சுற்றித் திரிகிறான். இதனை தினமும் காணும் நந்தன் இவ்வளவுக்கும் காரணம் தான் என்பதால் மனதளவில் கூனிக்குறுகினான்.
ராகேஷின் ஓவியக் கண்காட்சி முடிந்ததும் "ராகேஷின் வீட்டாருக்கு உண்மையைக் கூறிவிடவேண்டும்" என்று முடிவெடுத்தான் நந்தன்.
ராகோஷின் ஓவியக் கண்காட்சியைக் காண்பதற்கு நாட்டின் பல இடங்களிலிருந் தும் ரசிகர்கள் குவிந்தனர். ஓவியத்துறை விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மண்டபத்தை நிறைத்தனர். நந்தன் மனக் கசப்புகளை மறந்து முழுமூச்சுடன் செயற்பட்டான்.
கண்காட்சியைப் பார்ப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்றாள் வதனி. நடமாடும் ஓவியம் போல் இருந்த வதனியை இரண்டாவது முறை பார்க்காதவர்கள் இல்லை. பொன்மானை நோக்கும் சீதை, அரச சபையில் நீதி கேட்கும் கண்ணகி, கண்ணன்மேல் காதல் கொண்ட கோதை, துஷ்யந்தனின் மோதிரத்தைத் தொலைத்து விட்டுப் பதறும் சகுந்தலை, சாஜகானின் காதல் மனைவியாள்மும்தாஜ் ஓவியங்கள் பார்ப்பவரின் மனதை சுண்டி இழுத்தன.
அத்தனை ஓவியங்களுக்கும் மொடலாக வதனி நின்றதை அறிந்த நந்தன்ஆச்சரி யப்பட்டான்.
ராகேúம் வதனியும் அடிக்கடி தனியே சென்றது இப்படங்களை வரைவதற்கே என்பதை அறிந்த நந்தன் மிகுந்த ஆச்சரியப்பட்டான். ராகேஷையும்,வதனியையும் தப்பாக இணைத்து நினைத்ததையிட்டு வருத்தப்பட்டான். ராகேஷின் ஓவியங்களைப் பார்வையிட்ட வர்கள் ஓவியங்களையும் வதனியையும் ஒப்பிட்டு பார்த்து ஆச்சரியப்பட்டனர். அதிகமான ஓவியங்கள் அன்றே விலைப்பட்டன.
கலண்டர் நிறுவனங்கள் ராகேஷுடன் ஒப்பந்தம் செய்தன.
ஓவியக்கண்காட்சி முடிந்து மூன்றாம் நாள் ராகேஷ் திடீரென மயங்கி விழுந்தான். அருகில் உள்ள தனியார் வைத்திய சாலையில் ராகேஷை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்றான் நந்தன். மிக நீண்ட நேரமாக ராகேஷை பரிசோதனை செய்த பின்னர் நந்தனை அழைத்து அவனுக்கும் ராகேஷுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ராகேஷ் குடும்பத்தைப்பற்றியும் விசாரித்தார்கள்.
வைத்திய நிபுணர்கள் கேட்ட கேள்வி களால் ஏதோ ஒரு விபரீதம் நடைபெற்றதைநந்தன் உணர்ந்து கொண்டான்.
ராகேஷின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரது இருதயம் மிகவும் பலவீனமாக உள்ளது. இருதயத்தை மாற்ற வேண்டும். உடனடியாக இந்தியா வுக்கு அழைத்துச் செல்லவேண்டும். வைத்தியர்கள் கூறிய ஒவ்வொரு வசனமும் நந்தனின் மனதில் சம்மட்டியால் அடித்தது போல் பதிந்தது. ராகேஷுக்கு தனது உடல் நிலைபற்றி நன்கு தெரியும்.
இதனால்தான் திருமணத்தைத் தவிர்த்தான் என்ற உண்மையையும் நந்தன் அறிந்து கொண்டான். ராகேஷின் வைத்தியத்துக்காக உதவி செய்யப் பலரும் முன்வந்தார்கள். ஆனால் இதயத்தைக் கொடுக்க எவருமே இல்லை.
இந்தியாவில் உள்ள பிரபல வைத்திய சாலையில் ராகேஷ் அனுமதிக்கப்பட்டி ருந்தான். விபத்தில் இறப்பவர்களின் உடல் உறுப்பு தானம் செய்வது அதிகரித்துள்ளது. ஆகையால் ராகேஷுக்கு யாராவது இருதயத்தை தானமாகக் கொடுப்பார்கள் என்று வைத்தியர்கள் ராகேஷின் தகப்பனுக்கு ஆறுதல் கூறினார்கள்.
ராகேஷ் இந்திய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மூன்றாம் நாள் யாரும்எதிர்பார்க்காத வேளையில் வதனி வைத்திய சாலைக்குச் சென்றாள். ராகேஷûக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுடன் நீண்ட நேரம் தனியாக ஆலோசனை நடத்தினாள். பின்னர் ராகேஷிடம் சென்று ஆறுதல் கூறிவிட்டு மீண்டும் வைத்தியர்கள் இருக்கும் அறைக்குச் சென்றாள். தலைமை வைத்திய அதிகாரியுடன் ராகேஷின் வைத்தியர்கள் ஆலோசனை செய்வதாகவும் ஆலோசனை முடிந்த பின் வதனி சந்திக்கலாம் என்று அவளுக்கு கூறப்பட்டது.
தலைமை வைத்திய அதிகாரியிடம் கொடுக்கும்படி ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு அங்கே இருந்து அமைதியாக வெளியேறினாள் வதனி. சுமார் அரைமணி நேரத்தின் பின் வதனியின் கடிதம் தலைமை வைத்திய அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது. வதனியின் கடிதத்தை படித்த தலைமை வைத்திய அதிகாரி அலறியபடி ஆசனத்தை விட்டு எழுந்தார். சக வைத்தியர்கள் செய்வதிறியாது குழம்பினர்.
அந்த வைத்தியசாலைக்கு அருகே உள்ள ஹோட்டலின் 30ஆவது மாடியிலிருந்து ஒருபெண் குதித்து தற்கொலை செய்ததாக அறிந்த வைத்திய நிபுனர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்தனர். இரத்த வெள்ளத்தில் வதனி சடலமாகக்கிடந்தாள்.
பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்ட தலைமை வைத்தியர் வதனியைப் பற்றிக் கூறினார்.
சட்டப்படி சகலதும் மளமளவென நடைபெற்றன. வதனியின் விருப்பப்படி அவளுடைய இதயம் ராகேஷின் உடலில் பொருத்தப்பட்டது. ராகேஷ் உயிர் பிழைத்தசந்தோசத்தைக் கொண்டாட முடியாது வதனியின் தியாகம் ராகேஷின் குடும்பாத் தாரை வாட்டியது.
குளியலறையில் இருந்து வெளியே வந்த ராகேஷ் வதனியின் படத்துக்கு முன்னால்கண்களை மூடிக் கொண்டு மானசீகமாக வணங்கினான்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 29/04/12
No comments:
Post a Comment