Sunday, April 15, 2012

எதிர்க்கட்சிகள் சிதறியதால் உற்சாகத்தில் ஜெயலலிதா

சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றி பெற்றதனால் ஜெயலலிதாவின் பார்வை இந்திய நாடாளுமன்றம்நோக்கித் திரும்பியுள்ளது. இந்தியப் பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு உண்டு என்று சோ போன்ற அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருவதனால் இந்தியப் பிரதமர் ஆகும் ஆசை ஜெயலலிதாவின் மனதில் துளிர்விடத் தொடங்கியுள்ளது.
இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வருகின்றன. அண்மையில் நடைபெற்ற 5 மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. பாரதீய ஜனதாக் கட்சியும் பெருமைப்படக் கூடிய வகையில் வெற்றிபெறவில்லை. மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியாகப் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டõல் அதில் ஜெயலலிதாவும் பிரதான பங்காளியாக இருப்பார். சுழற்சி முறையில் பிரதமராகும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைக்கலாம். சுழற்சி முறையிலான பிரதமர் பதவியை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தேர்தலின் பின்னரே தெரியவரும்.
தமிழக எதிர்க்கட்சிகள் சிதறிக்கிடப்பதனால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அதிக தொகுதியில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் பல மடங்கு குறைந்துள்ளன. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்டுப்பணத்தை இழந்துள்ளது. இத் தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வைகோவும் டாக்டர் ராமதாஸும் செல்வாக்கிழந்துள்ளனர். பிரதான கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய வைகோவையும் டாக்டர் ராமதாஸையும் கண்டு தமிழகத்தின் பிரதான கட்சிகள் பயந்த காலம் மலையேறிவிட்டது. தனித்து நின்றால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை வைகோவும் டாக்டர் ராமதாஸும் உணர்ந்துள்ளார்கள். எதிர்காலத்தில புதிய கூட்டணி ஒன்று உருவாகுவதற்கு சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவு காரணமாக அமையும் என்பது வெளிப்படையானது.
வைகோவையும் டாக்டர் ராமதாஸையும் இணைப்பதற்கு ஜெயலலிதா விரும்பமாட்டார். ஆகையினால், அவர்கள் இருவரும் கருணாநிதியுடன் கைகோர்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. வைகோ, ராமதாஸ் ஆகியோரின் உதவி இல்லாமல் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாது என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். தமிழக ஆளுங்கட்சியாக இருந்துக் கொண்டே ஆட்டிப்படைக்கும் ஜெயலலிதா மத்திய அரசில் புகுந்தால் நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளõர். ஆகையினால் வைகோவையும் ராமதாஸையும் ஆதரிப்பøதத் தவிர, வேறு வழி கருணாநிதிக்கு இல்லை.
கூட இருந்@த விஜயகாந்துக்கு குழிபறித்து விட்டார் ஜெயலலிதா. விஜயகாந்தின் செல்வாக்கு இவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுடன் இணைந்ததால் ஏற்பட்ட அவலம் @பாதும் ஜெயலலிதாவுடன் இனியும் கூட்டணி தேவையில்லை என்பதில் உறுதியாக உள்ளார் விஜயகாந்த். ஆகையினால், விஜயகாந்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை ஏனைய கட்சித் தலைவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் ஜெயலலிதாவுக்குத்தான் அச்சுறுத்தலாக இருந்தது. தனது இராஜதந்திரத்தின் மூலம் அந்த அச்சுறுத்தலினால் தவிடு பொடியாக்கி விட்டார் ஜெயலலிதா.
தமிழகத்தில் இடதுசாரிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இடதுசாரிகளைக் கைவிட்டு விட்டனர். இடதுசாரிகள் விஜயகாந்துடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கில்லாத இடது சாரிகளால் எதுவித மதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இவர்களைக் கவனத்தில் எடுக்க மாட்டார்கள்.
உடன் பிறவாச் சகோதரி சசிகலாவை மன்னித்த ஜெயலலிதா சசிகலாவின் உறவினர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. தமிழக முதல்வரை நம்பி தன் புருஷனை கைவிட்டுள்ள சசிகலா கணவன் சிறையிலே வாடிக் கொண்டிருக்க ஜெயலலிதாவுடன் மீண்டும் இணைந்துள்ளார் சசிகலா. சசிகலாவின் தன்னிலை விளக்க மன்னிப்பு அறிக்கையில் மனமிரங்கிய ஜெயலலிதா அவரை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஆனால், பழைய அதிகாரங்களும் செல்வாக்கும் சசிகலாவுக்கு இருக்குமா என்பதுசந்தேகமே.
ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்களில் சசிகலாவும் ஒருவர் என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சசிகலாவை ஜெயலலிதா விரட்டியதால் மகிழ்ச்சியடைந்து, பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கியவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பிரிக்க முடியாதது எது என்று திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால் ஜெயலலிதாவும் சசிகலாவும் என்@ற தமிழகத்தில் பலர் பதிலளிப்பார். ஆகையால், இவர்களின் பிரிவு நிரந்தரமானதல்ல விரைவில் இருவரும் இணைவார்கள் எனவும் பலரும் எதிர்பார்த்தார்கள். அது போன்றே ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களின் பிரிவும் இணைவும் கட்சிக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. சசிகலாவை விரும்பாதவர்கள் அவரை அனுசரித்து போவதைத் தவிர வேறு வழி இல்லை.
வர்மா


சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு15/04/12

No comments: