Saturday, April 21, 2012

புதுக்@காட்டை இடைத்@தர்தலில்ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்?

கோட்டையில் உள்ள தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிப்பதற்கு புதுக்கோட்டை இடைத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த குறுகிய காலத்தில் இரண்டு இடைத் தேர்தல்களில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி தான் இடைத் தேர்தலில் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றன. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் போன்று இவ்வளவு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகளும் கட்டுப் பணத்தை இழந்தன. அதேபோன்ற ஒரு வெற்றியை அல்லது அதற்கு அதிகமான வெற்றியை புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதா குறியாக உள்ளார்.
புதுக்கோட்டைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் வீதி விபத்தில் அகால மரணமானார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் பிரதான கட்சிகளில் ஒன்றான கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முத்துக்குமரன். முத்துக்குமரன் மரணமான துயரத்தில் இருந்து புதுக்÷காட்டை மக்கள் விடுபட முன்னரே இடைத் தேர்தலுக்கான பிரசார வேலையை ஆரம்பித்து விட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. புதுக்கோட்டையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போட்டியிடுவது யார் என்பதில் குழப்ப நிலை உள்ளது.
ஜெயலலிதாவின் சவாலுக்குப் பதிலளிப்பதற்காக சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கிய விஜயகாந்த் மூக்குடைந்தார். புதுக்கோட்டைத் தொகுதியை கொம்யூனிஸ்ட் கட்சிக்காக ஒதுக்கினார். ஜெயலலிதா புதுக்கோட்டைத் தொகுதியில் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துக்குமரன் வெற்றி பெற்று கட்சிக்குப் பெருமை சேர்த்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் முன்னரே கூட்டணிக் கட்சிகளை உதாசீனம் செய்த ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தலின்போது அத்தொகுதியை கொம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுக்கமாட்டார். தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கூட்டணி முடிந்து விட்டது என்பதில் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். ஆகையினால் கொம்யூனிஸ்ட் கட்சி தமிழக சட்ட மன்றத்தில் ஒரு ஆசனத்தை நிரந்தரமாக இழந்துள்ளது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டால் மார்க்சிஸ்ட் கட்சியைத்தவிர வேறு கட்சிகள் எவையும் அதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை. விஜயகாந்தை நம்பித்தான் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட்டன.
விஜயகாந்துக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தில் விரிசல் விழுந்துள்ளது. ஆகையினால் கொம்யூனிஸ்ட் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்டால் விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார். தமிழக உள்ளாட்சித் தேர்தலின்போது விஜயகாந்தின் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து இடதுசாரிகள் வேட்பாளர்களை நிறுத்தியதனால் புதுக்கோட்டையில் கொம்யூனிஸ் கட்சிக்கு ஆதரவு கிடைக்கும் சாத்தியக் கூறு குறைவு.
கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கிய இடதுசாரிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கமாட்டாது. இடதுசாரிகளின் முதலாவது அரசியல் எதிரி காங்கிரஸ். ஆகையினால் காங்கிரஸும் இடதுசாரிகளை கைவிட்டுவிடும்.
கருணாநிதி, விஜயகாந்த், காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவு இல்லாமல் கொம் யூனிட் கட்சி வெற்றி பெற முடியாது. ஆகையினால் இடைத் தேர்தல் அறிவிப் புக்கு முன்னரே கொம்யூனிஸ்ட் கட்சியின் தோல்வி உறுதியாகியுள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது புதுக்கோட்டை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பெரியண்ண அரசு போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டால் விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார். தமிழக அரசின் அசுர பலத்தின் எதிரில் காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து வெற்றி பெறுவது முடியாத காரியம். இக் கட்சிகளுடன் விஜயகாந்தும் இணைந்தால் ஜெயலலிதாவைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கலாம்.
புதுக்கோட்டைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக் கொடுத்தால் விஜயகாந்தின் ஆதரவு எளிதாகக் கிடைக்கும். தனது பலத்தை ஜெயலலிதாவுக்கு வெளிப்படுத்தும் சந்தர்ப்பமும் விஜயகாந்துக்கும் கிடைக்கும். இந்திய நாடாளுமன்றக் கூட்டணி முன்னோடியாக புதுக்கோட்டை இடைத்தேர்தல் அமையும் சாத்தியக் கூறு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
கருணாநிதி, விஜயகாந்த், காங்கிரஸ் ஆகியவற்றின் பொது எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு புதிய கூட்டணி அமைத்தால் ஜெயலலிதா சற்று திணர @வண்டிய நிலை ஏற்படும். விஜயகாந்துடன் கூட்டணி சேர்வதற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் ஏற்கனவே ஆர்வம் காட்டினார்கள். புதுக்கோட்டை இடைத் தேர்தல் அவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
ஜெயலலிதாவின் தொடர் வெற்றியைத் தடுத்து நிறுத்துவதா அல்லது தொடர்ந்தும் அவர் வெற்றி பெறுவதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் உள்ளன.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு22/04/12

No comments: