Sunday, April 29, 2012
புதுக்கோட்டையை கைப்பற்ற ஜெயலலிதா வியூகம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலத்தை வெளிக்காட்ட புதுக்கோட்டைத் தொகுதியின் வேட்பாளரை அறிவித்து இடைத் தேர்தலைச் சூடாக்கியுள்ளார் ஜெயலலிதா. புதுக்கோட்டைத் தொகுதியின் சட்ட சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முத்துக்குமரன் கடந்த மாதம் 1 ஆம் திகதி வாகன விபத்தில் மரணமானார். காலியாகவுள்ள புதுக்கோட்øடத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு சில மணி நேரம் முன்பு வேட்பாளரை அறிவித்து எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்டுள்ளார் ஜெயலலிதா.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கார்த்திக் தொண்டமான் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் சங்கரன் கோவில் நகராட்சித் தலைவரை வேட்பாளராக்கி வெற்றிபெறச் செய்தது @பான்@ற தற்@பாது புதுக்கோட்டையிலும் நகராட்சித் தலைவரை வேட்பாளராக்கியுள்ளார் ஜெயலலிதா.
புதுக்கோட்டைத் தொகுதியில் செல்வாக்குள்ளவரை வேட்பாளராக்கினால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறலாம் என்று கருதுகிறார் ஜெயலலிதா.
மன்னர் பரம்பரையைச் சேர்ந்த கார்த்திக் தொண்டமான் பி.எஸ்.சி பட்டதாரி. இவரது தகப்பனான விஜய ரகுநாத தொண்டைமான் 1967, 1977, 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவராகவும் புதுக்கோட்டை நகராட்சித் தலைவராகவும் கடமையாற்றுகிறார் கார்த்திக் தொண்டமான்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலைக் குறி வைத்து சமூக நலத்திட்டங்கள் பலவற்றைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் அச்சமூக நலத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும். பன்னீர்செல்வம், செங்கோட்டையன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகிய அமைச்சர் பட்டாளம் புதுக்கோட்டையில் முகாமிட்டு இடைத் தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளது. பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றின் பின் நடைபெற்ற சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. மின் கட்டண உயர்வுக்குப் பின்னர் நடைபெறும் புதுக்கோட்டை இடைத் தேர்தலிலும் பிரமாண்டமான வெற்றியைப் பெறும் நம்பிக்கையில் உள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழக சட்ட சபைத்தேர்தலின்போது புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றிபெற்ற கொம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவின் ஆதரவுடன் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தது. கொம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கிய ஜெயலலிதா அதிரடியாக வேட்பாளரை அறிவித்து கொம்யூனிஸ்ட் கட்சியைத் திக்குமுக்காட வைத்துள்ளார். புதுக்கோட்டைத் தொகுதியைத் தக்க வைக்க முடியாத நிலையில் இடைத்@தர்தலில் @பாட்டியிடுவதில்லை என முடிவு öŒ#துள்ளது கொம்யூனிஸ்ட் கட்சி.
கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்து மூக்குடைப்பட்டு நிற்கிறது கொம்யூனிஸ்ட் கட்சி. ஜெயலலிதாவினால் அவமானப்படுத்தப்பட்ட கொம்யூனிஸ்ட் கட்சி கருணாநிதியிடம் ஆதரவு கேட்க முடியாத நிலையில் @பாட்டியிலிருந்து வாபஸ் பெற்றது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலின்போது தேசிய முற்போக்கு திராவிடக் கட்சிக்கு கொம்யூனிஸ்ட் ஆதரவு வழங்கவில்லை.
ஆகையினால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார் என்பதும், புதுக்கோட்டை இடைத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சி @பாட்டியிடாததற்கு காரணம் வைகோவுக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் புதுக்கோட்டையில் செல்வாக்கு இல்லை. ஆகையினால் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இருவரும் அதிக அக்கறை காட்டமாட்டார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போட்டியிடும் பிரதான கட்சிக்கு ஆதரவு வழங்கவும் இவர்கள் முன்வரமாட்டார்கள். தமிழகத்தில் செல்வாக்கை இழந்துள்ள பாரதீய ஜனதா கட்சி புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா? என்பதை மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டின் பின்னர் அறிவிக்கும்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடப் போவதில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டால் ஆதரவு வழங்கும். புதுக்கோட்டை சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெரியண்ணன் அரசு இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் விரும்புகின்றனர். இடைத் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஆகையினால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலர் கருதுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் இதே கருத்தைத் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருத்தால் ஜெயலலிதாவின் அனல் பறக்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாத நிலையேற்படும். ஆகையினால் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது புதுக்கோட்டையில் வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்திலேயே கொம்யூனிஸ்ட் கட்சிக்கு தாரை வார்த்தது அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம். கொம்யூனிஸ்ட் கட்சியும் சந்தேகத்துடன் தான் தேர்தலைச் சந்தித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஓரளவு செல்வாக்கு உள்ள தொகுதி என்பதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு29/04/12
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment