Friday, May 11, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 1

உலகின் மிகப் பிரமாண்டமான ஒலிம்பிக்கை நடத்த இங்கிலாந்து தயாராகி விட்டது. ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் திருவிழா ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிவரை நடைபெறும். தடகளம், மரதன், சைக்கிள் ஓட்டம், டெனிஸ், ஹொக்கி, துப்பாக்கி சுடுதல், கைப்பந்து, உதைபந்தாட்டம், குத்துச்சண்டை, நீச்சல், ஜிம்னாஸ்ரிக், கூடைப்பந்தாட்டம் உட்பட சுமார் 90 க்கும் அதிகமான போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறுவதற்காக வீரர்கள் தயாராகியுள்ளனர். சுமார் 10,500 க்கும் அதிகமான போட்டிகளைக் கண்டு மகிழ ரசிகர்கள் தயாராகி விட்டனர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தடகள வீரர்களின் கனவாகும். பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல வீரர்களிடம் உள்ளது. வளமான நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களுக்கு பல வசதிகளைச் செய்துள்ளன. வறுமையில் வாடும் öகன்யா, எத்தியோப்பியா போன்ற நாட்டுத் தடகள வீரர்கள் மிக எளிதாக தங்கத்தைத் தட்டிச் சென்று விடுகிறார்கள். உசைன் போல்ட் புதிய சாதனை செய்வார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
100 மீ, 200 மீ , 400 மீ தடைதாண்டல் ஆகிய போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்கள் பதற்றத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். தகுதிகாண் போட்டிகளே பரபரப்பை ஏற்படுத்தி விடும். இப்போட்டிகளைப் பார்ப்பதற்கே ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கும். ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் போட்டிகளில் ரி@லயும் ஒன்று வீரர்களின் மின்னல் வேக ஓட்டம் இதயத் துடிப்பை அதிகமாக்கி விடும். நீச்சலில் போட்டி மட்டுமல்ல நளினமும் உண்டு. பல வீர வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நடத்தும் அசைவுகள் ரசிகர்களை வியக்க வைக்கும்.
இது உடம்பா அல்லது இறப்பரா என்று வியர்க்க வைப்பது ஜிம்னாஸ்டிக். வீர வீராங்கனைகள் அந்தரத்தில் சுழலும் போது கீழே விழுந்து கையை காலை முறித்து விடுவார்களோ என்ற பதைபதைப்பு ஏற்படும். கோடிக் கணக்கான ரசிகர்கள் எதிர்பார்க்கும் போட்டியில் உதைபந்தாட்டமும் ஒன்று. ஒலிம்பிக் உதைபந்தாட்ட போட்டியில் 16 நாடுகள் விளையாடத் தகுதியை பெற்றுள்ளன. ஆறு மைதானங்களில் உதைபந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளது.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து எகிப்து, காபோன், மொராக்கோ, செனகல், ஆசியக் கண்டத்தில் இருந்து ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்காமத்திய அமெரிக்காவிலிருந்த ஹொண்டூராஸ், மெக்ஸிக்கோ ஓசியானாத் தீவுகளில் இருந்து நியூஸிலாந்து, தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸில் உருகுவே, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பெலாரஸ், ஸ்பெ#ன், சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகள் ஒலிம்பிக் உதைபந்தாட்ப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் இங்கிலாந்து நேரடியாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. 2004 ஆம் ஆண்டும் 2008 ஆம் ஆண்டும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஆர்ஜென்டீனா இம்முறை தகுதி பெறவில்லை.
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குழு "ஏ' இல் இங்கிலாந்து, செனகல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உருகுவே.
குழு  "பி' இல் மெக்ஸிக்கோ, தென்கொரியா, கெபொன், சுவிற்ஸர்லாந்து.
குழு  "சி' இல் பிரேஸில், எகிப்து, பெலாரஸ், நியூஸிலாந்து.
குழு  "டி' இல் ஸ்பெயின், ஜப்பான், ஹொன்டூரஸ், மொராக்கா ஆகியன உள்ளன.

எகிப்து
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் எகிப்து 12 தடவைகள் பங்குபற்றியுள்ளது. 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்ரர் டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற போட்டியிலும் நான்காம் இடத்தைப் பெற்றது. 1928 ஆம் ஆண்டு இத்தாலியு டனும் 1964 ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனியுடனும் மூன்றாவது இடத்தைப் பிடிக்க போராடித் தோல்வியடைந்தது. உள்நாட்டு அரசியல் காரணமாக 1956, 1980 ஆம் ஆண்டுகள் நடைபெற்ற ஒலிம்பிக்கில் எதிலும் பங்குபற்றவில்லை.
12 தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய எகிப்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டியை சமன் செய்தது. எகிப்து 12 கோல்களை அடித்தது. எகிப்துக்கு எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன.
அஹமட் எல் ஜெனவி, ஷகீப் எல் டின் அஹமட், அஹமட் ஷேசிடா மாவன் மொசீன், மொஹமட் எல் நெனி ஆகிய வீரர்கள் மீது எகிப்து ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அஹமட் ஹேவிடனா மாவன் மொசீன் ஆகியோர் தகுதி காண் போட்டிகளில் தலா மூன்று கோல் அடித்துள்ளனர்.
பிரேஸில், பெலாரஸ், நியூஸிலாந்து ஆகியவற்றுடன் குழு "சி'யில் உள்ளது எகிப்து.


கெபொன்
ஒலிம்பிக் உதைப்பந்தாட்டப் போட்டியில் முதன் முதலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது கெபொன். இளம் வீரர்களைக் கொண்ட கெபொன் உதைபந்தாட்ட அணி, ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள பலம் வாய்ந்த அணிகளுக்குச் சவாலாக உள்ளது.
எகிப்து,. தென்னாபிரிக்கா ஆகியவற்றுடனான முதல் சுற்றுப் போட்டிகளை வெற்றி தோல்வியின்றி சமமாக முடித்தது கெபொன், ஐவரிகோஸ்டை 3  1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நம்பிக்கையளித்தது கெபொன். குழு "ஏ'யில் முதலிடம் பெற்ற செனகலுடனான போட்டியில் மேலதிக நேரத்தில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது கெபொன்.
இமானுவில் டொப் மபா மீது ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். பெற்றி எம்ரிக், ரெமி எபெங்கா, அலென் நொறொ, அன்ரி பியங் பொகோ ஆகியோரின் பங்களிப்பு கைபொன் உதைபந்தாட்ட அணியை ஒலிம்பிக் போட்டி வரை கொண்டு சென்றது.
மொராக்கோ
டோக்கியோவில் 1964 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மொராக்கோ உதைபந்தாட்ட அணி முதன் முதல் விளையாடும் தகுதியைப் பெற்றது. ஏழு தடவை ஒலிம்பிக்கில் விளையாடிய தகுதி பெற்ற மொ@ராக்கா இரண்டாவது சுற்றுக்குச் செல்லவில்லை. 2011ஆம் ஆண்டு 23 வயதுக்குட்பட்ட ஆபிரிக்கக் கிண்ண இறுதிப் போட்டியில் கபோனிடம் 2  1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ தோல்வியடைந்தது. அப்போது ""இத்தோல்வி பற்றி நாம் கவலைப்படவில்லை. 2012 ஒலிம்பிக்கில் நாம் விளையாடுவோம்'' என்று பயிற்சியாளர் கூறினார். அவர் கூறியது போன்றே மொ@ராக்கோ ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.
செனகலுடனான போட்டியில் 1  0 என்ற கோல் கணக்கிலும் கெபானுடனான போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கிலும் மொ@ராக்கோ தோல்வியடைந்தது. 23 வயதுக்குட்பட்ட ஆபிரிக்கக் கிண்ணப் போட்டியில் 3  2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தியது.
செனகல்
செனகல் உதைபந்தாட்ட அணி முதன் முதலில் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. கெபானுடனான தகுதி காண்போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கில் செனகல் தோல்வியடைந்தது. அல்ஜீரியாவுக்கு எதிரான தகுதிகாண் போட்டியில் தோல்வியடைந்தது செனகல், நைஜீரியா, மொ@ராக்கோ ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளிலும் செனகல் தோல்வியடைந்தது. கொபõனுடனான அரையிறுதிப் போட்டியில் 1  0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ரமணி

மெட்ரோநியூஸ் 06/05/12

No comments: