Thursday, May 17, 2012

வேகத்தை அதிகரிக்க நவீன ஆடை

லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடவுள்ள அமெரிக்க மெய்வல்லுனர்கள் தங்கள் எதிர் போட்டியாளர்களை விட அதிவேகமாக செயற்படும் விதத்தில் உயர் தொழில் நுட்பம் வாய்ந்த கோல்ப் பந்தொன்றால் உணர்ச்சியூட்டும் வகையில்  வடிவமைக்கப்பட்ட ஆடை வகைகளை அமெரிக்க அணியின் அனுசரணையாளரான  நைக்   நிறுவனம் வெளியிட்டுள்ளது. 100 மீற்றர்  குறுந்தூர அதிவேக  ஓட்டத்தை 0.23  விநாடிகளில் ஓடி முடிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திருக்கை மீன் வேகம் கொண்ட  ஒரே வகைத் துணியால் தைக்கப்பட்டுள்ள  ஆடைவகை வெளிவந்துள்ளது. உலகில் அதிவேக ஓட்டப் போட்டிகள் நிகழுமிடத்து ஒவ்வொரு மில்லி விநாடியும் கணக்கிடப்படுகிறது. அமெரிக்க குறுந்தூர அதிவேக ஓட்ட வீரர் வோல்டர் டிக்ஸின் கடந்த 2008  இல் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் 100 மீற்றர்  போட்டியில் எடுத்திருந்த நேரத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த ஜமேக்காவின் உசைன் போல்ட்டை விட அவர் 0.22 விநாடிகள் மட்டுமே கூட எடுத்து வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
ஒலிம்பிக் போட்டியின்போது உசைன் போல்டுக்கு பியுமோ நிறுவனமே அனு சரணை வழங்குகிறது. எனவேநைக் நிறுவனத்தின்  இந்த உறுதி மொழி நம்பப்படுமானால் அமெரிக்க வீரர் டிக்ஸ் உசைன் போல்டை இம்முறை வித்தியாசமான  ஓட்ட ஆடையணிவதன்  மூலம் இலகுவாக வீழ்த்த முடியும். மேலும் முன்னர்  0.02 விநாடிகள் கூட எடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ரிச்சர்ட் தொம்சனையும் நிச்சயமாக அவர் முந்திவிடலாம். அடிடாஸ்  நிறுவனத்தின்  அனுசரணையில் விளையாடியிருந்த ட்ரினிடாட் டொபாகோ அணியின் ஒரு வீரராகவே தொம்சன் களமிறங்கி இருந்தார்.
நைக் நிறுவனத் தயாரிப்பான வாயு இயக்க இழுவையைக் குறைக்கும் சக்தி கொண்ட இந்த ஓட்ட @வகத்தை அதிகரிக்கும் ஆடையில் கோல்ப் பந்தின் சிறிய குழிவுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் காற்று சுரங்கமொன்றில் நூற்றுக்கணக்கான மணித்தியாலங்களாக இதன் செயற்றிறன் பரீட்சிக்கப்பட்டது.
இத்தகைய ஒவ்வொரு  ஓட்ட ஆடையும் சுமார் 14 பிளாஸ்டிக் போத்தல்களை மீளுருவாக்கம் செய்து 82 சதவீத பொலிஸ்டர் துணி கொண்டு மிகவும் சிக்கனமான முறையில் வடிமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
அத்துடன்  ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள ரஷ்ய மற்றும் ஜேர்மன் அணிகளுக்கும் இந்த விளையாட்டு ஆடை அணிகலன் உற்பத்தி நிறுவனமேநைக் அனுசரணை  வழங்கியுள்ளமையும் கவனிக்கத்தக்கது
மெட்ரோநியூஸ்16/05/12

No comments: