Sunday, May 6, 2012

ஒதுங்கினார் கருணாநிதிமகிழ்ச்சியில் ஜெயலலிதா


புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடாம@ல அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவது மிகவும் அபூர்வமாகவே நடைபெறும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடை தேர்தல்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்தது. அதேபோன்ற ஒரு நிலை தான் இப்போது ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த அதேபோன்ற ஒரு முடிவினையே இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கட்டுப்பணத்தை இழந்தன. அதேபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்ற எச்சரிக்கையினால் திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளது.
புதுக்கோட்டைத் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெரியண்ணன் அரசு மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பெயரும் பரிசீலனையில் இருந்தது. இவர்கள் இருவரும் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் என்பதால் இடைத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே இருந்தது. இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கருணாநிதி அறிவித்தலால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டதனால் காங்கிரஸ் கட்சி போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் தமது செல்வாக்கை இழந்துள்ள காங்கிரஸ் கட்சி, புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் களமிறங்கக் காத்துள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தோல்வி உறுதி என்று தெரிந்தும் தமக்கு உள்ள வாக்கு வங்கியை கணிப்பிடும் ஒரு சந்தர்ப்பமாகவே இந்த இடைத் தேர்தலைக் கணிக்க உள்ளது காங்கிரஸ் கட்சி.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகள் இன்னமும் தயாராகவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதுக்கோட்டையில் முகாமிட்டுத் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது சங்கரன் கோவில் தேர்தலில் விழுந்த பலத்த அடியினால் எதிர்க்கட்சிகள் புதுக்கோட்டைத் தொகுதியில் இன்னமும் காலடி எடுத்து வைக்கவில்லை. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் தமிழக அமைச்சு பட்டாளம் புதுக்கோட்டையை முற்றுகையிட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தக் கூடிய நிலை இல்லை. எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக@வ உள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்து கொம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. திராவிடக் கழகங்களின் ஆதரவுடன் தமிழகத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து ஒதுங்கி கொண்டுள்ளது.
தமிழக அரசியலில் அசைக்க முடியாத பெரும் சக்தியாக விளங்கும் ஜெயலலிதா முன்னதாக@வ இடைத் தேர்தல் கோதாவில் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்குத் துணிவின்றி எதிர்க்கட்சிகள் தடுமாறுகின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான கார்த்திக் தொண்டமான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு அடியாட்களுடன் சென்று சித்தி முறையான பெண்மணியை மிரட்டியதாக கார்த்திக் தொண்டமான் மீது புகார் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் 2003 ஆம் ஆண்டு மூன்று மாத சிறையும் 3 ஆயிரம் ரூபா அபராதமும் கார்த்திக் தொண்டமானுக்கு விதிக்கப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறை யீடு செய்துள்ளார் கார்த்திக் தொண்டமான். இக் குற்றச்சாட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை பாதிக்கப் போவதில்லை, எதிர்க்கட்சியினர் இதனை பெரிய விசயமாகத் தூக்கிப் பிடித்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதனையிட்டு கவலைப்படப் போவதில்லை.
ஜெயலலிதாவின் தயவினால் தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த் புதுக்@காட்டை இடைத்@தர்லில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம் விருப்பு மனுக்கள் வாங்கப்படுகின்றன. தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சியாக விஜயகாந்த் இருந்தாலும் இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பின்னாலேயே விஜயகாந்தின் கட்சி உள்ளது. பலமான கூட்டணி இன்றி விஜயகõந்த் வெற்றி பெற முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது.
மாக்ஸிட் கொம்யூனிஸ்ட் கட்சி, விஜயகாந்தின் @வட்பாளருக்கு ஆதரவு வழங்கும் தமிழகத்தில் அதிக செல்வாக்கு இல்லாத மாக்சிஸ்ட் கட்சியினால் விஜயகாந்துக்கு மிகப் பெரிய இலாபம் எதுவும் கிடைக்கப்போவ தில்லை. புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றிபெற்ற கொம்யூனிஸ்ட் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட கொம்யூனிஸ்ட் கட்சி, அண்ணா திராவிட முன்@னற்றக் கழகத்தை எதிர்த்துப் பிரŒõரம் öŒ#யுமா அல்லது ஒதுங்கி இருக்குமா என்று அறிவிக்கவில்லை.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் மும்முனைப் போட்டியாக நடைபெற உள்ளது. வேறு சில உதிரிக் கட்சிகளும் சுயேட்சைகளும் இடைத் தேர்தலில் போட்டியிட்டாலும் அவற்றினால் மிகப் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படப் போவதில்லை.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு06/05/12

No comments: