Friday, May 25, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 3




பெலாரஸ்  

பெலாரஸ்
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் பங்கேற்பதற்கு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பெலாரஸ் ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து ஆகியன தகுதி பெற்றுள்ளன. ஒலிம்பிக்கை நடத்தும் இங்கிலாந்து நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் பல நாடுகளைப் பிரித்தபோது உருவான நாடுகளில் ஒன்று பெலாரஸ். ஜேர்மனிய பயிற்சியாளரான பேர்ஸ்ரங்கின் வழிகாட்டலில் பெலாரஸ் பல சாதனைகளைச் செய்துள்ளது. 21 வயதுக்குட்பட்ட யு.ஈ.எஃப்.ஏ. 2011 ஐரோப்பிய சம்பியனான பெலாரஸ் அணி எதிரணிகளுக்குச் சவால் விடும் வகையில் பலமானது. யூரோ 2012 கிண்ணஸ் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெலாரஸ் பெற்றுள்ளது.
ஒலிம்பிக் தகுதி காண்போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்று ஒலிம்பிக்கில் நுழைந்துள்ளது பெலாரஸ். ஐஸ்லாந்துடனான போட்டியில் வெற்றி பெற்ற பெலாரஸ் ஸ்பெயினுடனான போட்டியில் மேலதிக நேரத்தில் தோல்வியடைந்தது. செக் குடியரசுடனான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது ஒலிம்பிக் கனவை உறுதி செய்தது. ஈக்ரோ பிலிபென்கோ, அன்ரிவொதன் கோ ஆகிய வீரர்கள் மீது பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர் ரசிகர்கள். குழு சி இல்  உள்ள பெலாரஸ் பிரேஸில், எகிப்து, நியூஸிலாந்து அணிகளுடன் மோத உள்ளது.
இங்கிலாந்து
இங்கிலாந்து உதைப்பந்தாட்ட அணி 1960ஆம் ஆண்டின் பின்னர் ஒலிம்பிக்கில் விளையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளது. 1908ஆம் ஆண்டு லண்டனிலும், 1912ஆம் ஆண்டு ஸ்ரொக்கோட்டிலும் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது இங்கிலாந்து. 1948ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டென்மார்க்கிடம் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பெற்றது. லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்து உதைபந்தாட்ட அணி சிறப்பாகச் செயற்பட்டதால் இம்முறையும் பதக்கம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள்.
1992, 1996, 2008ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்ட யு.ஈ.எஃப்.ஏ. உதைபந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து சம்பியனானது. ஆனால், ஒலிம்பிக்கில் விளையாடும் சந்தர்ப்பத்தைத் தவற விட்டது யூரோ. 2012இல் விளையாடுவதற்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
1908ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹரோல்ட்ஸ் ரெப்லி ஆறு கோல்கள் அடித்தார். ஹரோல்ட்வல்டேனர் 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஒன்பது கோல்கள் அடித்தார். 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பொப் ஹர்டிஸ்ரி மூன்று கோல்களை அடித்தார்.
சுரெட் பலோ பிரஸர் தம்பெல், ஜக்ரொட்வெல், மாக் அல்பிரிட்ரொன், ஜோதான் ரொடேஸ் ஆகியோர் சாதனை புரிவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. செனகல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உருகுவே ஆகியவற்றுடன் குழு "ஏ'யில் உள்ளது இங்கிலாந்து.

ரமணி
மெட்ரோநியூஸ் 25/05/12

No comments: