Friday, May 4, 2012

திரைக்குவராதசங்கதி35


தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் துரை. திரைப்படத் துறையால் கவரப்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்களைப் போலவே இயக்குனராக வேண்டும்என்ற ஆர்வம் துரையிடமும் இருந்தது. சினிமாத்துறைக்கு கொஞ்சமும் சம்பந்தம்இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் துரை.கதை எழுதுவதில் அதீத ஆர்வம் இருந்ததால்சினிமாவில் ஜெயித்து விடலாம் என்றநம்பிக்கை துரையிடம் அளவுக்கு அதிகமாகஇருந்தது.
துரையின் சினிமா ஆசைக்கு பாதைஅமைத்துக் கொடுத்தவர் பிரபல இயக்குனர்யோகானந்த். யோகானந்தின் குடும்ப டாக்டரிடம் துரையின் சகோதரி உதவியாளராகஇருந்தார். அந்த டாக்டரின் சிபார்சுக் கடிதத்துடன் மனதில் ஏராளமான கனவுகளை சுமந்தபடி இயக்குனர் யோகானந்தைச் சந்தித்தார்துரை.
டாக்டர் கொடுத்த சிபார்சுக் கடிதத்தைக்கொடுத்து யோகானந்தின் காலைத் தொட்டுக்கும்பிட்டு தனது சினிமா ஆசையைக்கூறினார் துரை. தமிழ் சினிமாக் கதையைஅறிஞர்களும், கலைஞர்களும் புடம் போட்டுக்கொண்டிருந்த காலம். புதியவரானதுரையின் கதை எடுபடுமா என்று யோகானந்த் சிந்தித்தார்.
துரையின் சினிமா ஆசைக்கு தடை போடவிரும்பாத அவர் சினிமாத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டால் எழுத்தாளராகவோ அல்லது இயக்குனராகவோ நிலைத்துநிற்க முடியும் என்றுஆலோசனை வழங்கினார். அவரது ஆலோசனையின்பிரகாரம்ஒலிப்பதிவாளர் ரங்கசாமியிடம் உதவியாளராகச் சேர்ந்தார் துரை.
சினிமாதான் வாழ்க்கை என்ற ஆர்வம் மனதில்ஆழப் பதிந்ததனால் மிகுந்த அக்கறையுடன் பயிற்சி பெற்றார். ஓய்வு நேரங்களில்எடிட்டிங் ரூமிக்குச்சென்று எடிட்டிங்பயின்றார். நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவிநடித்த "அனார்கலி'என்ற தெலுங்குப்படத்தில் "ஒலிப்பதிவுஉதவி  துரை' என்றஎழுத்து மின்னியது.
தனது பெயரைப்பார்ப்பதற்காக உறவினரையும், நண்பர்களையும் தியேட்டருக்கு அழைத்துச்சென்றார்.ஒலிப்பதிவில் திறமையைக் காட்டினாலும் இயக்குனர் என்றகனவு அடிக்கடி துரையின் மனதில் தோன்றிமறைந்தது. ஒலிப்பதிவாளராகக் கடமையாற்றும் படத்தின் இயக்குனர்களிடம்வாய்ப்புக் கேட்டார். வேலை இல்லாதவேளையில் திரைப்படக் கம்பெனிகளுக்கும் சென்று வாய்ப்புக் கேட்டார். யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
கல்யாண்குமார் தான் நடித்த படத்தின் பாடல்காட்சி ஒன்றைப் பார்ப்பதற்காக துரைவேலை செய்த ஸ்டூடியோவிலுள்ளதியேட்டருக்குச் சென்றார். அப்போதுபுரொஜக்டரை இயக்குபவர் வெளியில்சென்று விட்டார். ஏமாற்றத்துடன் திரும்பியபோது எனக்கு புரொஜக்டரை இயக்கத் தெரியும் வாருங்கள் என்று துரை அழைத்துச்சென்று அப்பாடல் காட்சியை போட்டுக்காட்டினார்.
துரையின் அந்த உதவி கல்யாண்குமாரின்மனதைக் கவர்ந்து விட்டது. எந்த உதவியும்எப்போது வேண்டுமானாலும் தயங்காமல்கேட்கலாம் என்று வாக்குக் கொடுத்தார் கல்யாண்குமார். அதன் பின்னர் கல்யாண்குமாரும் துரையும் மிகவும் நெருக்கமானார்கள்.
தான் எழுதிய கதைகளை கல்யாண்குமாருக்குக்காட்டினார் துரை. துரையின் கதைகளைப் படித்த கல்யாண்குமார் பிரபல கன்னடஇயக்குனரான ஜி.வி. அய்யரிடம் துரையைஅறிமுகப்படுத்தினார்.
துரையின் கதைகளைப் படித்துப் பார்த்தஜி.வி. அய்யர் கதை எழுதும் வேலையைதுரைக்கு கொடுத்ததுடன் உதவி இயக்குனர்பணியையும் ஒப்படைத்தார்.தமிழ்ப்படஇயக்குனராக வரவேண்டும் என்று விரும்பிய துரை கன்னடப்பட உதவி இயக்குனராகினார். கன்னட சூப்பர்ஸ்டாரான ராஜ்குமார், கல்யாண்குமார், உதயகுமார் ஆகியகலைஞர்களுடன் ப‌ணியாற்றியபடி கன்னடம் கற்றுக் கொண்டார்.பெங்களூர் ரயில் நிலையத்தில் தனியாகச்செல்லும் பெண்ணை வழிமறித்து கத்தியைக் காட்டி வில்லன் மிரட்டும் காட்சிஅன்று படமாக்கப்பட்டது. எப்படி நடிக்கவேண்டும் என்று பல தடவை துரை நடித்துக்காட்டியும் வில்லனாக நடித்தவரால் நடிக்கமுடியவில்லை. வெறுப்புற்ற இயக்குனர்ஜி.வி. அய்யர், நீ நல்லா நடிக்கிறாய் நீயேவில்லனாக நடி என்றார். இயக்குனர் கனவில்திரைத் துறைக்குள் நுழைந்த துரை வில்லன் நடிகரானார்.துணை இயக்குனராக இருந்து கொண்டேகன்னடப் படங்களுக்கு கதை எழுதினார்.
அவருடைய கதையில் வெளியான கன்னடப் படங்கள் வெற்றி பெற்றன. துரைதுணை இயக்குனராகப் பணியாற்றிய படங்கள் சிலவற்றில் பண்டரிபாய் நடித்தார்.துரையின் கடின உழைப்பையும் திறமையையும் நேரில் பார்த்த பண்டரிபாய் தான் தயாரிக்கப் போகும் படத்துக்கு துரையை இயக்குனராக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.பண்டரிபாயின் கணவர் துரையிடம் தமதுவிருப்பத்தைத் தெரிவித்தார். துரை உடனடியாக ஒப்புக் கொண்டார். பெண்களைக் கவரும் கதைதான் வேண்டும் என்று பண்டரிபாய் கூறினார். தன் மனதில் இருந்த "அவளும் பெண்தானே' என்ற கதையைக் கூறினார் துரை.இந்தக் கதையில் புதுமுகம் நடித்தால்தான்நன்றாக இருக்கும் என்று துரை கூறினார்.பண்டரிபாயும் சம்மதித்தார். அவர்கள் தேடிய போது அகப்பட்டவர்தான் சுமித்ரா.கதையைக் கூறி காட்சிகளை விளக்கப்படுத்திய போது சுமித்ரா நடிக்க சம்மதித்தார். சிலநாட்கள் ஒத்திகை பார்க்கப்பட்டது. அப்போது அப்படத்தின் பாத்திரமாகவே மாறிவிட்டார் சுமித்ரா.1975 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த "அவளும் பெண்தானே' 100 நாட்கள்கடந்து ஓடி நல்ல கதை, நல்ல இயக்குனர்என்ற பெயரை துரைக்குத் தேடிக் கொடுத்தது.
ரமணி
மித்திரன்12/11/2006

No comments: