Sunday, May 13, 2012

ஜெயலலிதாவின் கோட்டையை தகர்க்குமா புதுக்கோட்டை

 தமிழகத்தின் பிரதான கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலைப் புறக்கணித்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துக் களமிறங்குகிறார் விஜயகாந்த். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரச இயந்திரத்தை எதிர்த்து இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதனால் கருணாநிதி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ ஆகியோர் தமது கட்சி போட்டியிடாது என்று அறிவித்துவிட்டனர். தமிழகத் தேர்தலின் போது புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றிபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவின் ஆதரவுடன் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பியது. ஜெயலலிதா கைவிட்டதால் கம்யூனிஸ்ட் கட்சி ஒதுங்கியது.
காங்கிரஸ் கட்சி பாரதீய ஜனதாக் கட்சி ஆகியன இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. விஜயகாந்தின் அறிவிப்பால் மாக்சிஸ்ட் அமைதியாகிவிட்டது.
திராவிட முனனேற்றக் கழக ஆட்சியின்போது தொண்டா முத்தூர், கம்பம் ஸ்ரீ வைகுண்டம் உட்பட ஐந்து தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. தோல்வியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத விஜயகாந்த் சகல இடைத் தேர்தல்களிலும் தனது கட்சியின் வேட்பாளரை போட்டியிடச் செய்து கணிசமான வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவான வாக்குகளும் விஜயகாந்தின் கட்சிக்குக் கிடைத்தன. இதனால் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் வாக்கு வங்கி அதிகரித்தது. விஜயகாந்தின் வளர்ச்சியை தடுப்பதற்காக பொன்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சி போட்டியிட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கும். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலை புறக்கணித்ததனால் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
. திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் 40 ஆயிரம் மேலதிக வாக்குகளாலும், சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் 68 ஆயிரம் அதிகப்படியான வாக்குகளாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. திருச்சி மேற்கிலும் சங்கரன் கோவிலிலும் பல முனைப்போட்டி இருந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. சங்கரன் கோவிலில் எதிர்க்கட்சிகள் கட்டுப்பணத்தை இழந்தன. அப்படி ஒரு நிலை புதுக்கோட்டை இடைத் தேர்தலிலும் ஏற்படக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளனர் ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் இது பற்றி வெளிப்படையாகப் பேசாதுள்ளனர்.
கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வெளிப்படை யாக விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். இவர்களின் ஆதரவை விஜயகாந்தும் வெளிப்படையாகக் கேட்கமாட்டார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்திருந்தது. விஜயகாந்ததும் ஒதுங்கினால் புதுக்@காட்டையில் @பாட்டியிட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு விஜயகாந்த் விட்டுக் கொடுந்திருந்õல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து  எதிர்க்கட்சி பொது வேட்பாளர் போட்டியிடும் வாய்ப்பு உருவாகியிருக்கு. ஜெயலலிதாவை அச்சுறுத்தும் ஆயுதம் விஜயகாந்தின் கையில் இல்லை.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி போட்டியிடாது ஒதுங்கிகி இருந்தõல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது வேட்பாளரை நிறுத்தும் நிலை உருவாகி இருக்கும். மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், கருணாநிதி, வைகோ, திருமாவளன், டாக்டர் ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்து தமக்கு ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்திருப்பர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரு கூட்டணியில் உள்ளன.  அசுர பலத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தனித்து நின்று எதிர்க்கும் சக்தி விஜயகாந்திடம் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் துணை இன்றி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து வெற்றி பெற முடியாது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகும் சூழல் உள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தல் அதற்கான கால்கோளாக அமையும் ச‌ந்தர்ப்பம் தவற விடப்பட்டுள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு13/05/12

No comments: